கதை படிப்பது எவ்வளவு சுகமோ அதே அளவுக்கு கதை கேட்பதும் அது குறித்து விவாதிப்பதும் சுகமானதுதான்
அந்த காலத்தில் எல்லாம் பின் மாலைகளில் அக்கம்பக்கத்தினர் , குடும்பத்தினர் , உறவினர் என வீட்டின் முன் கட்டிலில் அமர்ந்தும் ஆங்காங்கு தரையில் அமர்ந்தும் கதைகள் சொல்லி , கேட்டு வாழ்க்கையை அனுபவதித்துண்டு..
இன்று அப்படி எல்லாம் அமர வாய்ப்புகளும் இல்லை.. நேரமும் இல்லை
இப்படி ஒரு இறுக்கமற்ற சூழலில் , இயல்பாக உரையாடுவது போல , கதைகளைப்பற்றி பேசி விவாதிக்க ,ஓர் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது வாசக சாலை
வாசக சாலை பல நிகழ்ச்ச்கள் நடத்துகிறது.. மா நாடு போல நடக்கும் கருத்தரங்குகள் , குளிரூட்டப்பட்ட அறையில் நடக்கும் விவாதங்கள் , உணவுடன் கூடிய முழு நாள் நிகழ்வுகள் , அறிஞர்கள் எழுத்தாளர்கள் ஆய்வ்க்கட்டுரை வழங்கும் விழாக்கள் என்பவை எல்லாம் வேறு .. கதையாடல் என்ற இந்த நிகழ்வு , வெகு இயல்பாக , மனதுக்கு நெருக்கமான ஒரு நிகழ்ச்சி..
நான் முன்பு சொன்னதுபோல , நம் வீட்டில் நம் நண்பர்களுடன் உறவ்னர்ள்டன் அமர்ந்து பேசுவது போல , ஒரு பின் மாலை வேளையில் , அறிவுத்தாகம் கொண்ட நண்பர்கள் மத்தியில் தரையில் அமர்ந்து கதைகளைப் பற்றி பேசுவது ஒரு தனி அனுபவம்
33ஆம் கதையாடல் நிகழ்வில் , கீழ்க்கண்ட கதைகள் விவாதிக்கப்பட்டன
கதை பெயர்
|
எழுதியவர்
|
வெளிவந்த இதழ்
|
மரத்தில் மறைந்த மாமத யானை
இங்கே நிறுத்தக் கூடாது
பகல்கனவு
சஃபைவாலா
அமர்
|
ஜனமேஜயன்
அ முத்துலிங்கம்
லிவி
அபிமானி
விஜயகுமார்
|
சொல்வனம்
காலச்சுவடு
வாசகசாலை
கணையாழி
பதாகை
|
பேசி வைத்து வந்ததுபோல , அனைவரும் சரியான நேரத்துக்கு வந்து விட்டது ஆச்சர்யமாக இருந்தது... பாதி நிகழ்ச்சியில் யாரேனும் வருவது , யாரேனும் கிளம்புவது என்றெல்லாம் இல்லாமல் , ஓர் ஒழுக்கத்தை அனைவரும் கடைபிடித்தது சிறப்பு
---------
மரத்தில் மறைந்த மாமத யானை
டெலிபோன் முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்டபோது , அதே கால கட்டத்தில் பல நபர்களுக்கு அதே சிந்தனை எப்படி வந்தது என்பது போன்ற கண்ணுக்கு தெரியாத வலைபின்னல்களை ஆராயும் ஓர் அறிவியல் கதை இது
நாம் செயல்புரிகிறோமா.. அல்லது நமக்கு தெரியாமல் நம் சிந்தனைகளை , செயல்களை வேறு ஏதாவது சக்திகள் வடிவமைக்கின்றவா என்பதையும் போகிற போக்கில் கதை ஆராய்கிறது
என்ன ட்விஸ்ட் என்றால் , இந்த கதையைப்பற்றி பேசுவதாக இருந்தவர் , வர முடியாமல் போய் விட்டது. இன்னொருவர் பேசினார்..பெயர் வைஷாலி... என்ன சுவாரஸ்யம் என்றால் அந்த கதையின் கருப்பொருளாக மரம் என்ற விஷ்யம் பேசியவருக்கு உண்மையிலேயே பிடித்த விஷ்யம்தான்.. தன் வீட்டின் முன் இருக்கும் மரத்தை உள்ளன்போடு நேசிப்பவர் இவர்.. மர நேசரான இவர் , மரம் பற்றி பேசும் சூழலை உருவாக்கிய தற்செயல் நிகழ்வு போன்ற ஆச்சர்ய நிகழ்வுகளைத்தான் கதையும் பேசுகிறது. உண்மையிலே ஆச்சர்யமாக இருந்தது
கதையை நன்கு புரிந்து கொண்டு , வெகு சிறப்பாக பேசினார் வைஷாலி. சரளமாகவும் , முக்கிய சம்பவங்களை கச்சிதமாக நினைவில் வைத்திருந்தும் , குறை என தான் நினைப்பவற்றையும் பேசினார்... தான் பெர்சனலாக கதையில் ரசித்த இடங்களையும் அதற்கான காரணங்களையும் அவர் சொன்னது வெகு பொருத்தமாகவும் சுவையாகவும் இருந்தது
பேசி முடித்தபின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் சொன்னார்
பார்வையாளர்களும் எதிர் கருத்துகளையும் , பிடித்த விஷயங்களையும் சொன்னார்கள்..கதையை படிக்க
ஆக , துவக்கமே வெகு சிறப்பாக அமைந்தது
அடுத்து இங்கே நிறுத்தக்கூடாது என்ற கதை குறித்து சுவாதி சேகர் பேசினார்
கதையின் ஒவ்வொரு வரியையும் அவ்வளவு ரசித்துப்படித்து இருக்கிறார் என்பது அவர் பேச்சில் தெரிந்தது..
கதை சற்று ஆழமான விஷ்யம் குறித்து பேசினாலும் அதன் நடை கலகலப்பானது... அதை கச்சிதமாக புரிந்து கொண்டு கலகலப்பாக பேசினார்.
அதன் இன்னொரு பக்கத்தை விவாதத்தின்போது பேசினார்.. பெர்ஃபக்ட்
அடுத்து பகல் கனவு என்ற பின் நவீனத்துவ கதை குறித்து மசாலா கதை ரசிகர் அபு பேசினார்,,, இது ஒரு நல்ல காம்பினேஷன்.. ஒரு இலக்கியக்கதையை மசாலா கதை ரசிகர் எதிர்கொண்டால் எப்படி இருக்கும் .. அவரை கதை எந்த அளவு பாதிக்கிறது.. என்ற கேள்விகளுக்கு இவர் பேச்சு பதில் சொன்னது.. வீண் அலட்டல்கள் , நேம் டிராப்பிங் , வெட்டி பந்தா போன்ற எதுவும் இல்லாமல் , மனிதர் இதயத்தில் இருந்து பேசினார்.. சர வெடி... மிகவும் ரசித்தேன்... மசாலா கதை ரசிகர் என அவர் தன்னை சொல்லிக்கொண்டாலும் நல்ல சிறப்பான பார்வையையே முன்வைத்தார்
கதையை படிக்க
அடுத்து சஃபைவாலா கதை குறித்து சந்தியா பேசினார்...
கதையின் ஒரு கேரக்டர் நம் முன் வந்து , கதையைப்பற்றி சொன்னால் சொன்னால் எப்படி இருக்கும் .. அதுபோன்ற ஒரு நேரடி அனுபவத்தை கொடுத்தது இவர் பேச்சு... அலுவலகம் ஒன்றில் காஃபி கொட்டி விடுகிறது... அதை க்ளீன் செய்ய வேண்டும்.. ஆனால் சாதி பெருமை , தன் பதவியின் பெருமை, , வீண் பந்தா போன்ற பல காரணங்களால் க்ளீன் செய்யும் சாதாரண வேலையை துப்புரவு பணியாளர் என்ற பெயரில் வேலைக்கு சேர்ந்துள்ள ப்யூன் உட்பட யாரும் செய்யவில்லை என்ற சம்பவமே கதை... துணியை எடுத்து ஒரு இழுப்பு இழுத்தால் க்ளீன் ஆகி விடும்.. ஆனால் அப்படி செய்தால் பிறர் என்ன நினைப்பார்கள் , நம் பதவி அந்தஸ்து என்னாவது , இந்த வேலை நம் தலையில் கட்டபட்டு விடுமோ என்ற பயம் , சாதி பெருமை போன்ற பலவற்றால் யாருமே அதை செய்வதில்லை.. படிக்கும் நமக்கே , டேய்.. என்னிடம் கொடுங்கடா.. நான் செய்து விடுகிறேன் என கத்த தோன்றும்.. அந்த அம்சத்தை அழகாக சொன்னார் சந்தியா...துப்புரவை வீடுகளில் மங்கல நிகழ்வாக நினைப்பார்கள்.. ஆனால் எப்படியோ , க்ளீனிங் செய்தால் அந்தஸ்து போய் விடும் என்ற மன நிலை , பொது வெளியில் உருவாகி உள்ளது என்பதை கதை சொல்கிறது.. அருமையான கதை.. ஆனால் கதை தலைப்பு , இது ஒரு சாதி எதிர்ப்பு பிரச்சாரக்கதையோ என்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது.. நல்ல வேளையாக , இவர் அதை தொடாமல் , பொதுவான உணர்வுகளைத்தொட்டு பேசினார்.. அழகு
கடைசியாக அமர் கதை குறித்து ராம கிருஷ்ணன் பேசினார்...
பேச வர வேண்டியவர் வரவில்லை என்பதால் , திடீரென பேச வேண்டிய சூழல்.. ஆனாலும் சிறப்பாக பேசினார்
உட்கார வேண்டிய சாமி சிலையை , நிற்பது போல ஏன் உருவாக்கினாய் என திட்டுவது போல ஆரம்பிக்கும் கதை , யார் என்ன நினைத்தால் என்ன ,, என்ன செய்தால் என்ன... நிற்பதா அமர்வதா என்பதை முடிவு செய்யும் அழியாவிசை என ஒன்று உள்ளது என முடியும் கதை... கடவுள் , ஆன்மிகம் என்றெல்லாம் இல்லாமல் , நம் மண்ணின் மூத்தோர் வழிபாடு , வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வள்ளுவம் , விலங்குக்கும் மனிதனுக்கும் இருப்பது பொதுவான ஆன்மாதான் என சொல்லாமல் , இரண்டுக்கும் பொதுவாக இருப்பது , விட்டு விடுதலையாகும் உணர்வெனும் விசை என்ற தரிசனம் போன்றவை குறித்து பார்வையாளர்கள் கருத்துகளை முன் வைத்தனர்கதையை படிக்க
மகிழ்ச்சியான , நிறைவான , ஒரு மாலைப்பொழுது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]