நீ மாட்டை சாமியாக கும்பிடுகிறாய் , நானோ உன் கடவுளையே தின்பவன் என இயக்குனர் ரஞ்சித் பேசியது சர்ச்சை ஆகி உள்ளது
ராஜராஜசோழன் ஆட்சிக்காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று சொன்னதும் பிரச்சனை ஆகியுள்ளது
கடவுளை தின்பது என்பது சர்ச்சைக்குரிய ஒன்று இல்லை
உண்ணும் வெற்றிலை , பருகும் நீர் எல்லாவற்றிலும் உன்னையே காண்கிறேன்.. உன்னை தின்று உன்னையே பருகுகிறேன் என்கிறார் ஆழ்வார்
என் மாமிசம் உண்மையான போஜனமாக இருக்கிறது.. என் ரத்தம் உண்மையான பானமாக இருக்கிறது என்கிறது என்கிறார் இயேசு..
என் கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு என்னைபோல உயரிய குணமுடையவராக மாறுங்கள்..என்னை நேசியுங்கள் என்பது பொருள்
ஆக , கடவுளை புசிப்பது சர்ச்சைக்குரிய ஒன்று அல்ல
மாடு என்பது உனக்கு சாமியாக இருக்கலாம்.. எனக்கு அது உணவு என்ற பொருளில் ரஞ்சித் சொன்னதில் தவறு ஏதும் இல்லை
ராஜராஜ சோழன் காலத்தில் சில சாதியினருக்கு சொத்துரிமை இல்லை.. சில சாதியினரின் உழைப்பு சுரண்டப்பட்டது ... அதை முன்னுதாரணமாக கொள்ளாதீர்கள் என்பது அவர் பார்வை
இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? இப்போது அந்த நிலை இல்லை.. அருந்ததியினர் உட்பட அனைவருமே நன்றாக வாழ்கின்றனர்... அவர் ஆட்சி பொறகால ஆட்சியாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நாங்கள் பொற்கால ஆட்சி வழங்கி இருக்கிறோம் என சொல்ல வேண்டும்.
ஆனால் அப்படி சொல்ல முடியாது.. இன்றுதான் அன்றை விட சாதிய கொடுமைகள் அதிகம்
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான சத்திய வாணி முத்து எழுதியுள்ள ‘ தலித் மக்களுக்கு கலைஞர் செய்த துரோகம் “ என்ற நூலில் திமுக செய்த கொடுமைகளை சொல்லி இருக்கிறார்
திமுகவின் துரோகத்தை திராவிட இயக்க துரோகமாக நினைக்க முடியாது
திக , அதிமுக , தந்தை பெரியார் திக , மதிமுக போன்ற் கட்சிகள் தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டது இல்லை
இட ஒதுக்கீடு , கல்வி மேம்பாடு போன்ற பலவற்றுக்கு திராவிட இயக்கஙள் உழைத்துள்ளன .. சாதித்துள்ளன என்பது வரலாறு
இதை ராஜராஜன் மீதான விவாதமாக மாற்றுவது தவ்று
ரஞ்சித் தன் திரைப்படங்களில் இது குறித்து ஆக்கப்பூர்வமான பார்வைகளையே முன் வைத்து வருகிறார்..
காலா ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு
அவர் பேச்சை திரிக்கலாகாது
தாராளமா மாட்டுக்கறி சாப்பிடட்டும். Saturated fat is responsible for plaque buildup.அக்னி கூடத்தான் இந்துக்களுக்கு கடவுள்.அதையும் விழுங்கட்டும்.தாராளமா!
ReplyDelete