Pages

Thursday, June 6, 2019

இளையராஜா விழாவும் திராவிட இயக்க கலாச்சாரமும்


இளையராஜா விழா சமீபத்தில் நடந்தது..

100 ரூபாய் , 400 ரூ டிக்கெட் வாங்கியவர்கள் எல்லாம் 5000 ரூபாய்க்கான இருக்கைகளை ஆக்ரமித்து விடவே , 5000 ரூ டிக்கெட் வாங்கியவர்களுக்கு இடமில்லை.. ஏக ரகளை , தள்ளு முள்ளுகள்

இசை நுணுக்கத்தை , பாடல் சிறப்பை பேச வேண்டிய இளையராஜா , , எல்லோரும் அவரவர் இடத்துக்கு செல்லுங்கள் , அமைதியாக இசையை கேளுங்கள் என  எல் கே ஜி ஆசிரியர் மாணவர்களிடன் பேசுவதுபோல மேடையில் பேச வேண்டிய சூழல் உருவானது...

ஜே கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் ஒலிபெருக்கியில் அலறிய பாடல்களின் இடைஞ்சல் தாளாமல் , பேச்சை நிறுத்தி விட்டு வெளியேறிய வரலாறும் நமக்கு உண்டு


திராவிட இயக்கம் , இதுபோன்ற் சூழல் தவ்று என்பதை சுட்டுக்காட்டியது மட்டும் அல்ல.. இதற்கு எதிராக போராடியும் வந்துள்ளது

பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு என சிலர் சுருக்கினாலும் , எம்ஜி ஆரோ , அண்ணாவோ ஒரு போதும் அப்படி நினைத்தவர்கள் அல்லர்


 ஒரு நிகழ்ச்சியில் எம் ஜி ஆர் பேச வருகிறார். அனைவரும் அமைதியாக கவனமாக பேச்சை கேட்கின்றனர்

அப்போது அவர் சொல்கிறார்

இப்போது எப்படி கவனமாக என் பேச்சை கேட்கிறீர்கள்.. இதுபோல அமைதியாக எனக்கு முன்னால் பேசிய மு வ பேச்சை நீங்கள் கேட்டிருந்தால் உங்கள் அறிவு விசாலப்பட்டு இருக்கும்.. நான் அப்படித்தான் கேட்டேன்..பல விஷ்யங்களை தெரிந்து கொண்டேன் என்றார்

தன்னை எதிர்த்து பேசிய சின்ன அண்ணாமலையை , அழைத்து தன்னை எதிர்த்து பேச சொல்லி , இயக்க தோழர்கள அனைவரும் அமைதியாக கேட்க வேண்டும் என உத்தரவிட்டார் பெரியார்.. சின்ன அண்ணாமலை தன்னை திட்டி பேசி முடித்ததும் , அன்பளிப்பு அளித்து அனுப்பியவர் பெரியார்


காமராஜர் எளிமையைப்பார்த்தால் நமக்கெல்லாம் கூச்சமாக இருக்கிறது..எப்பேற்பட்ட தலைவர் என வியந்து சொன்னவர் அண்ணா... காமராஜரை தோற்கடித்தவருக்கு பதவி தருவது நன்றாக இருக்காது என சொல்லி குணமெனும் குன்றேறி நின்றவர் அண்ணா

 ராஜிவ் நினைவிடம் சென்னையில் உள்ளது... அழகிய புல் வெளி... மற்றபடி விலை உயர்ந்த பொருட்களோ ராணுவ ரகசியமோ இல்லை’

ஆனால் ஆயுதம் தாங்கிய காவலர்கள் அதை பாதுகாக்கின்ற்னர்.. உள்ளே நுழையும் முன் சோதனை செய்த பின்னே அனுமதிக்கின்றனர்

ஏன்?

உள்ளே செல்பவர்கள் அங்கேயே மலம் கழிக்க கூடாது.. சிறு நீர் கழித்து விடக்கூடாது..கண்டதை தின்று குப்பைகளை போடக்கூடாது, மது அருந்தி பாட்டில்களை போடக்கூடாது.. உடல் உறவு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் இத்தனை பாதுகாப்பு

மிகவும் அசிங்கமாக இருந்தது


திராவிட இயக்க சேவைகளின் பலனை அனுபவிக்கும் நாம் அண்ணா  பெரியார் , எம் ஜி ஆர் போன்றோர் காட்டிய மாண்புகளை என்றும் விட்டு விடக்கூடாது

கடமை கண்ணியம் கட்டுப்பாடு = அண்ணாயிசம் 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]