சிவாஜி கணேசனை நடிப்பு அகராதி என்பார்கள். ஒரு சூழலில் எப்படி நடிக்க வேண்டும் என தெரிந்து கொள்ள அதேபோன்ற காட்சியில் அவர் எப்படி நடித்தார் என பார்த்துக் கொள்வது பல நடிகர்கள் வழக்கம்
ஒரு படத்தில் எப்படி நடப்பது என இயக்குனர் மேஜர் சுந்தர்ராஜன் சிவாஜிக்கு விளக்க தடுமாறினார். சிவாஜி உடனே பத்துவிதமாக நடந்து காட்டி , இதில் ஒன்றை தேர்வு செய்யுஙகள் என்றார். இயக்குனர் அசந்து விட்டார்
படையப்பா படத்தில் தனக்கு நடிப்பு சொல்லித் தரும்படி கே எஸ் ரவிகுமாரை செல்லமாக கலாய்த்த வரலாறும் உண்டு
சிவாஜி தன் சொத்துகள் அனைத்தையும் வில்லனுக்கு எழூதிக்கொடுக்கிறார். அவர் , மனைவி, மகன் கையெழுத்துடுகின்றனர். கடைசியில் மகள் கைச்சான்று இடும்போது சிவாஜி கண்களில் கண்ணீர். காட்சியை விளக்கினார் இயக்குனர்
மகன் மனைவி கையெழுத்துப்போடும்போது அழுகை வராதா என சீண்டலாக கேட்டார் சிவாஜி
மகன் எப்படியாவது பிழைத்துக்கொள்வான் மனைவியோ வாழந்து முடித்தவள். மகள்தான் பாவம். இனிமேல்தான் திருமணம் நடந்து வாழ வேண்டும். அதை நினைத்துதான் கண்ணீர் என்றார் கேஎஸ்ஆர்
சரி.. அழுது காட்டு என மீணடும் சீண்டினார் நடிகர்திலகம்
இயக்குனர் நடித்துக்காட்டினார்
எப்படிப்பா கண்ணீர் வரவழைச்ச என கேட்டார் சிவாஜி
நான் என் மகளை நினைச்சுக்கிட்டேன் சார் என்றார் கேஎஸ்ஆர்
அதன்பின் அந்த காட்சியை பிரமாதமாக நடித்துக் கொடுத்தார் சிவாஜி

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]