ஒரு காலத்தில் புத்தக கண்காட்சி என்றால் இணையமே அல்லோலகல்லோப்படும். பலரும் பலவற்றை படித்து பட்டியலிடுவார்கள்
;காலப்போக்கில் ஆளுக்கொரு கட்சியிலோ அமைப்புகளிலோ இணைந்து கொண்டு அவை சார்ந்தவற்றை படிக்க ஆரம்பித்து விட்டனர். பொது வாசிப்பு இல்லாமல் போய்விட்டது
சரி , கொள்கை சார்ந்து படித்தாலும் விந்தன் போன்ற திராவிட சாய்வு எழுத்தாளர்களை படிக்கிறாரகளா என்றால் அதுவும் இல்லை
சிறுகதை கவிதை சினிமா பாடல் திரைக்கதை பத்திரிக்கை என பல்துறை வித்தகர் விந்தன்
கொன்றை வேந்தன் ஆத்திச்சூடி பாணியில் அவர் எழுதியவையும் பஜகோவிந்தம் போல எழுதிய பசி கோவிந்தமும் புகழ் பெற்றவை
சில மாதிரிகள்..
சாதி ஒழியாமல் சமதர்மம் இல்லை
தொட்டால் தீட்டெனில் தொடாமல் விடாதே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
ராவண காவியம் ரசித்துப் படி
மனிதனைக் கெடுத்தது மதமெனும் மாயை
பீடை என்பது பிராமணியமே
முக்தியால் வளர்வது மூடத்தனமே
மோட்சத்தைப் போலொரு மோசடி இல்லை
ஆலயம் தொழுவது சாலவும் தீது
கிளர்ச்சிகள் இன்றி வளர்ச்சிகள் இல்லை
கீதை உன்னைக் கீழ்மகன் ஆக்கும்
கைம்பெண்ணாயினும் கட்டு தாலியை
கோயில் இல்லா ஊரில் குடி இரு
மதமென்னும் வெறிபிடித்து அலைய வேண்டாம்
மல்லுக்கு அதற்காக நிற்க வேண்டாம்
சிந்திக்கும் முன் எதையும் செய்ய வேண்டாம்
செய்தபின் சிந்தித்து வருந்த வேண்டாம்
பதினெட்டுப் புராணத்தைப் படிக்க வேண்டாம்
படித்துவிட்டு பகுத்தறிவை இழக்க வேண்டாம்
எம்மதமும் சம்மதமே என்ற மேலோன்
ஏறொத்த பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே
மக்கள் திலகமும் நடிகர் திலகமும்,இணைந்த,ஒரே படமான கூண்டுக்கிளியில் பாடல் எழுதியிருக்கிறார்
மயக்கும்,மாலை போபோ , இதய வானின்
உதய நிலவே என்பது,போன்ற ஹிட் பாடல்கள் எழுதியுள்ளார்;
அவரது நாவல்கள்தான் அவர் படைப்புகளின்,உச்சம்
சிறுகதைகள் நேரடியானவை. கலையம்சம் குறைவு என்றாலும் நேர்மையானவை. காலத்தை ஆவணப்படுத்துபவை
பசியால் வாடும் இருவர் அன்னதானம் வாங்க செல்கிறார்கள். தன் தாயக்கு,உணவு மறுக்கப்பட்டால் எனக்கும்,வேண்டாம் என குரல் எழுப்பி அடி வாங்கிச் செல்லும் சிறுமிக்கும் தாய்க்கும் தமது,உணவை அளித்து,விட்டு காலி வயிற்றுடன் நாட்டைப்பற்றி யோசிக்கும்"இரு,இளைஞர்கள் , மக்களுக்கு உதவாத அரசின் திட்டங்கள் , கன்னம்,சிவக்க,அறைந்தவளின் காதலை வென்று அதே கன்னத்தில், முத்தம் பெறும் காதலன்என, பல,தளங்களை"தொடுகிறார்
சொல்,அலங்காரஙகளோ சிறுகதை நுணுக்கங்களோ கலை அம்சமோ குறைவு
ஆனால் அவர் காட்டும் மனிதர்கள்,சம்பவங்களின்,நிஜத்தன்மை,மனதில் பாய்கிறது;;;
வாய்ப்பிருப்பின்,படியுங்கள்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]