என்னப்பா புத்தக கண்காட்சி போகலையா என அலுவலகத்தில் ஜுனியர் பையனிடம் கேட்டேன்
அறிவார்ந்த வகையில் பேசுவான் , அறிவு தேடல் கொண்டவன் என்பதால் கேட்டேன்
அதுதான் எல்லாமே நெட்ல யூட்யூப்ல கிடைக்குதே சார். எதுக்கு புக் படிக்கணும் , அப்படியே படிச்சாலும் புக்ஃபேர் ஏன் போகணும் என்றான் .
தம்பி , புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் நிற்பதும் அறிவாரந்த பேச்சுகள் காதில் விழுவதும் தனி அனுபவம் , வந்து பார் என இளைய சமுதாயத்திடம் என்னால் சொல்ல முடியவில்லை.
காரணம் அங்கு மேடைகளில் காதில் விழுபவை எல்லாம் , ஏய் மோடியே , உனக்கு சவால் விடுகிறேன். துண்டுச்சீட்டு ஸ்டாலின் , இந்து மதமே உயரந்தது என்பவை போன்ற தெரு முனைப் பேச்சுகள்தான்.
இலக்கிய இயக்கமாக உருவாக வேண்டிய ஒன்று அரசியல் சக்திகளிடம் சிக்கி மக்களை விட்டு தொலைதூரம் போகும் அவல சூழல்
இந்த சூழலில் இலக்கியத்துக்கு ஆக்சிஜன் கொடுப்பதுபோல வெகு சிறப்பாக நடந்தது சாரு நிவேதிதாவின் இலக்கிய அமர்வு
நிற்கக்கூட இடமில்லாத பெருந்திரளான வருகையில் அரங்கு தளும்பியது
கலை என்பதன் அவசியம் , ப்ளஷர் ஆப் டெக்ஸ்ட் , மீறல் என்பது எப்படி கலையாகிறது , எப்படி போர்னோவில் இருந்து மாறுபடுகிறது , பித்து நிலையும் எழுத்தும் என்பது போன்ற பல விஷயங்களை வெகு அழகாக தொட்டுச் சென்றது அமர்வு
ஒரு பேராசிரியர் வகுப்பெடுப்பது போல, குரு சீடனுக்கு ஞானம் வழங்குவது வெகு அழகாக பேசினார் சாரு. அரசியல் தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் மேடை ஆக்கிவிடக்கூடாது என வெகு கவனமாக இருந்தார்
இங்கெல்லாம் குழந்தைகளை அழைத்து வரலாமா என அவர் கோபமாக கேட்டது இலக்கிய நிகழ்வில் அபூர்வமான ஒரு தருணம்.
ஒரு கல்லூரி மாணவனை மாணவியை சாரு நூல் படிக்க விடாமல் செய்வது , குழந்தைகளை அழைத்து வருவது என்பதன் அபத்தத்தை சுட்டிக்காட்டினார்
சாரு அ. மார்க்ஸ் ஆகியோரிடம் இருந்தால் கலையை கற்க முடியாது என்ற ஜெயமோகனின் கருத்தை இந்த இருவரால் உருவான ஜெயமோகன் உட்பட பலரால் ஏற்கப்பட்ட ஷோபா சக்தி உதாரணம் மூலம் மறுத்தார்
பிற வகை சிந்தனைகளை இப்படி மறுப்பதுதான் பாசிசம் , என்னைப் பொருத்த வரை ஜெயமோகனை வேறு வகை சிந்தனைப்பள்ளி என சொல்வேனே தவிர அவரை ஒட்டு மொத்தமாக மறுதலிக்க மாட்டேன் என்றார் சாருவின் உரை காணொளி
நேசமித்ரன் உரை வெகு ஆழமாக அமைந்திருந்தது. சங்க இலக்கியங்கள் தி ஜா , கோபிகிருஷ்ணன் , தஞ்சை பிரகாஷ் என்பது போன்ற ஒரு மரபில் சாருவின் இடத்தை அழகாக தொட்டுக்காட்டினார்.. அவரது காத்திரமான அந்த உரை யூ-ட்யூபில் வரும்போது அனைவரும் அதை பல முறை கேட்க வேண்டும் . விவாதிக்க வேண்டும் என சாரு கேட்டுக் கொண்டார். அந்த அளவு ஓர் அற்புதம் அந்த உரை
அப்படி இல்லாமல் சம கால இலக்கியவாதிகளிடையே சாரு எப்படி மாறுபடுகிறார் என தன் பாணியில் பேசினார் அராத்து
பொது வெளிகளில் பேசிக் கேட்டிராத அவந்திகா அவர்களின் பேச்சு இன்றைய நிகழ்வின் எதிர்பாரா போனஸ்
தமிழை ஒழிக்காமல் விட மாட்டார்கள் போலயே என துவண்டிருந்த மனஙகளுக்கு மருந்து போடுவது போல இந்நிகழ்வு அமைந்திருந்தது

https://drive.google.com/open?id=1z3y7UYV-FTqa9BOyulZ7TayaarYqZ3RD
ReplyDeletehttps://drive.google.com/drive/folders/1z_QCkv5EnUzlYsNTgCG-h7aiZDhVYEjy?usp=sharing
ReplyDelete