நாம் நம்பும் விஷயங்களைத்தான் ஒரு பத்திரிக்கை எழுத வேண்டும் என்பதல்ல. தான் நம்புவதை எழுதினால் போதும். பல பத்திரிக்கைகள் தான் நம்பாதவற்றை சும்மா விற்பனைக்காக பரபரப்புக்காக எழுதுகின்றன
துக்ளக் அப்படி செய்வதில்லை. எனவேதான் பல கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் , கலைஞர் ஸ்டாலின் மூப்பனார் மக்கள்திலகம் ஜெ ரரஜினி உட்பட பலர் துக்ளக் வாசகர்கள்.
நானும் பல வருடங்களாக படிக்கிறேன். சிறப்பிதழ்கள் ஏதும் வெளியிட்டிராத துக்ளக் அதன் வரலாற்றின் முதல் முறையாக பொன்விழா சிறப்பு மலர் வெளியிட்டுள்ளது
முன்பதிவு செய்தவர்களே வாங்க முடியும் என்பதால் முன்பதிவு செய்துதான் வாங்கினேன்
தரமான பேப்பர் , அழகான வடிவமைப்பு ,என வரலாற்றுத் தருணத்தை உணரந்து செயல்பட்டுள்ளது தெரிகிறது
ஓபிஎஸ் , ஸ்டாலின் , கி.வீரமணி , ரஜினி மாக்டர் ராமதாஸ் ,தமிழருவி மணியன் உட்பட பலர் சிறப்புக்கட்டுரை எழுதியுள்ளனர்
இதில் ஒரு குறிப்பிடத்தக்க ஒன்று இருக்கிறது
துக்ளக்கால் பாராட்டப்பட்ட , துக்ளக்கில் எழுதிய (தினமணி ஆசிரியர் ) வைத்தியநாதன் கட்டுரை இதில் இல்லை. வேலைப்பளு காரணமாக எழுதமுடியவில்லை என்கிறார் அவர்
ஆனால் துக்ளக்"கால் விமர்சிக்கப்பட்ட ஸ்டாலின் , கி. வீரமணி , ஓபிஎஸ் போன்றோர் தங்கள் வேலைப்பணிகளுக்கிடையே வெகு அற்புதமான உணர்வுப்பூர்வமான கட்டுரைகள் தந்துள்ளனர்.. பத்திரிக்கைகள் மீது திராவிட இயக்கம்வைத்திருக்கும் மரியாதையை ணாட்டுவது போல இது அமைந்துள்ளது
எம்ஜிஆரின் கட்டுரை , கலைஞர் பேட்டி , பெரியார் பற்றிய துக்ளக்கின் மரியாதையை காட்டும் கட்டுரை , அவுரங்கசீப் கடிதம் , பழைய அட்டைப்படங்கள் , கேள்வி பதில்கள் என காலப்பயணம் செயவது போன்ற அனுபவம் தருகிறது சிறப்புமலர்
ராஜிவ்காந்தி உட்பட பல தலைவர்களின் பேட்டிகள் இடம் பெறாதது ஏமாற்றம். தமிழக தலைவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டிய நிர்ப்பந்தம் போல
மணக்காடு ரஜினி அருள் போன்ற நண்பர்களின் கேள்விகள் இடம்பெற்றிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி
நல்லதொரு வரலாற்று ஆவணம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]