ஷேர் ஆட்டோவில் பயணித்துக் கொண்டிருந்தேன். டிரைவர் யாருடனோ அலைபேசியில் பேசியபடி ஓட்டிக்கொண்டிருந்தார்
" ஆமாண்டா மாப்ள. பணம் கைக்கு வரல. ரொம்ப கஷ்டமா இருக்கு. பேசாம வண்டிய ஆக்சிடெண்ட் பண்ணிட்டு சாகலாம்போல இருக்கு " என பேசியபடாயே அவ்வப்போது பயணிகளை ஏற்றிக் கொள்வது , இறக்கி விடுவது , காசு வாங்கி சில்லறை கொடுப்பது , பாட்டு கேட்பது என பல செயல்களை செய்து வந்தார்
இவர் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால் நல்ல ஓட்டுனர் இல்லை. அவர்"கவனம் தன் பணியில் இல்லை என பயணிகள் அனைவருக்கும் தெரிந்து இருந்தது.
ஆனால் அவருக்கு அது தெரியவில்லை. ஒரே நேரத்தில் எத்தனை வேலை செய்கிறோம் என பெருமையாகவே தன்னை நினைத்திருப்பார்;
மலட்டி டாஸ்க் என்பது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் வேலை
வாசித்த நூல்களில் தவறாக ஏதேனும் பேசி விட்டு , எத்தனையோ புக்ஸ் படாக்கிறோம். மறந்துருச்சு என குற்ற உணர்வின்றி சொல்லி தப்பிக்கலாம்.
வள்ளுவம் , அண்ணாயிசம் , பெரியாரிஸ்ட், கம்ப ராமாயணம் என குறிப்பிட்ட நூல்களில் நிபுணர்களாக அறியப்பட்டால் அந்த தப்பித்தல் சாத்தியமில்லை. எனவேதான் மல்ட்டி டாஸ்க் என்ற முகமூடி தேவைப்படுகிறது
எத்தனை என்பதல்ல எப்படி என்பதே முக்கியம். எத்தனை நூலகள் படிக்கிறீர்கள் என்பதல்ல. ஒரே நூல் என்றாலும் அதை எப்படி படித்தீர்கள். எந்த அளவு ஆழமாக படித்தீர்கள் என்பதே முக்கியம்
செய்யும் பணி மட்டுமல்ல. சாப்பிடுவது , உரையாடுவது போன்ற அன்றாட செயல்களைக்கூட முழு கவனத்துடன் செய்ய வேண்டும். டிவி பாரத்துக் கொண்டோ , படித்துக் கொண்டோ சாப்பிடுவது தவறு என உணர வேண்டும்
எழுத்தை தவமாக நினைத்து தன் உடல் பொருள் ஆவியை தமிழுக்காக ஈந்த சி சு செல்லப்பா போன்றவர்களால்தான் தமிழ் இலக்கியம் இன்றுவரை வாழ்கிறது
ஆனால் தமிழ்மீது எந்த மரியாதையும் இல்லாமல் , டிவி பேச்சு , தெருமுனை அரசியல் மேடை போன்ற அவர்களது தலையாய பணிகளுக்கிடையே எழுத்தை ஓர் ஊறுகாயாக பயன்படுத்தும் பதிப்பகங்களாலும் எழுத்தாளர்களர்களாலும் தமிழ் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியுள்ளது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]