சில நாட்களுக்கு முன் ப.க பொன்னுசாமி அவர்களின் கட்டுரை ஒன்றை படித்தேன். அவரது நூல்கள் பலவற்றின் ரசிகன் என்றாலும் இந்த கட்டுரையை குறிப்பிடக் காரணம் இருக்கிறது
அந்த கட்டுரையின் சாராம்சம் இதுதான்.
அவர் காரில் பயணிக்கையில் கார் முன்கண்ணாடியின் வைப்பரில் ( wiper) ஒரு வண்ணத்துப்பூச்சி சிக்கிக் கொள்கிறது. காரை ஓரம் கட்டி பாரத்த டிரைவர் அது இறந்து விட்டது என்கிறார்.அதை சற்று கூர்ந்து கவனிக்கையில் உயிர் இருப்பது தெரிகிறது. முதலுதவி செய்து அது மீண்டும் உற்சாகமாக பறப்பதை கண்குளிர பார்த்த பின் கிளம்புகிறார். ழசாவில் இருந்து தப்புதலைவிட உயிருக்குப் போராடும் சித்தரவதையில் இருந்து காப்பாற்றிய நிம்மதி கிடைக்கிறது
1996ல் தீபாவளியை பெற்றோர்களுடன் கொண்டாட ஹாஸ்டலில் இருந்து கிளம்பவிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட முதலாமாண்டு கல்லூரி மாணவன் நாவரசு , 2019ல் தீபாவளி கொண்டாட முடியாமல் ஆழ்துளை கிணற்றில் சிக்கி , மரண வேதனை அனுபவித்து மரணமடைந்த பச்சிளம் பாலகன் சுஜித் ஆகியோர் அனுபவித்த வேதனையை அந்த பட்டாம்பூச்சியின் மரண போராட்டம் அவருக்கு நினைவுபடுத்துகிறது
பிறர் வேதனையை புரிந்து கொள்ள கோருகிறது கட்டுரை
என்ன விஷயம் என்றால் , ஹாஸ்டலில் இருந்து தன் ஆசை மகனின் வருகைக்கு காத்திருந்த வேளையில் அவன் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டான் என்ற சேதி கேட்டு துடித்துப்போன தந்தை அவர்தான். என் மகன் எப்படி துடித்தோனோ என கதறிய மனைவிக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி கதறியவர் இவர்
இப்படிப்பட்ட ஒரு காட்டுமிராண்டி சமூகத்தின்மீது அவருக்கு வெறுப்பு வந்திருந்தால் அது நியாயம். ஆனால் தன் மகனுக்கு கிடைக்காத அந்த பரிவு பிறருக்கு கிடைக்க வேண்டும் என நினைத்ததுதான் அவரை மாமனிதனாக்கிவிட்டது
அறக்கட்டளை , பல நூல்கள் என அன்பை பரப்பிவரும் அவரது அன்புமழையின் ஒரு துளி என்ற வகையில் அந்த கட்டுரை என்னை நெகிழ்த்தியது

நாவரசு |
ஜான் டேவிட் |
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]