தமிழில் பலரும் வலைப்பூக்கள் எழுத ஆரம்பிக்கையில் அது சிற்றிதழ்களின் நீட்சியாக , கையெழுத்துப் பிரதிகளின் நவீன வடிவமாக பாரக்கப்பட்டது. பல நல்ல எழுத்துகளை இணையத்தில் பாரக்க முடிந்தது
அதன்பின் முகநூல் , வாட்ஸ் ஆப் என தொழில் நுட்பம் பரவலான பின் எழுத்தால் வளர்வதை விட லைக்குகள், கமெண்டுகள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு , அதன் மூலம் வளர்வது சுலபம் என கண்டு கொண்டனர். அதற்கேற்ற அரசியல் நிலைப்பாடுகள் , வியந்தோதல்கள் , தாக்குதல்கள் போன்ற அரசியல்களால் தரம் வீழ்ந்தது
இந்த வீழ்ச்சிக்கு முன் இணையத்தின் பொற்கால மன்னர்களில் ஒருவராக இருந்தவர் சுதேசமித்திரன். பல பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார். விகடன் சிறுகதை போட்டியில் 20,000 ரூபாய் பரிசு வென்றிருக்கிறார். சிற்றிதழ்கள் பரிச்சயம் உடையவர் இவர்
இவர் எழுதிய நாவல்களில் ஒன்று காக்டெய்ல். ஆரம்பம் , கதாபாத்திரம் அறிமுகம் , அடுத்தடுத்த சம்பவ தொடர்ச்சிகள் ,முடிவு என்ற சம்பிரதாய வடிவத்தில் இல்லாமல் நான்−லீனியர் வகையில் எழுதப்பட்ட நாவல் இது.
இப்படி எழுத வேண்டுமானால் நல்ல மொழி ஆளுமை , கற்பனைத்திறன், வாழ்க்கை அனுபவங்கள் , அவதானிப்பு ஆற்றல் என பல விஷயங்கள் தேவை. இவை இல்லாமல்தான் பல நான்−லீனியர் எழுத்துகள் சும்மா விளையிட்டுக்கு எழுதிப் பாரப்பது போல போலியாக இருக்கின்றன
காக்டெய்ல் நாவல் அற்புதமான நடையில் , மொழியில் மிளிர்கிறது
பொருந்தா திருமணம் , கட்டற்ற காமம் , காதல் , பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு கொண்டுபோக காசு சேர்க்கும் தொழிலாளி , முதன்முதலாக மருந்து அருந்தச்செல்லும்போது ஏற்படும் உணர்வு , கதை பிரசுரமானால் ஏற்படும் உணர்வு என ஒவ்வொரு பக்கத்திலும் உண்மை சுடர்விடுகிறது. சமகாலத்தை ஆவணப்படுத்துவது நல்ல எழுத்தின் கூறுகளில் ஒன்று. அங்கு ஜெயிக்கிறது நாவல்
ஒரு அத்தியாயத்துக்கும் அடுத்த அத்தியாயத்துக்கும் தொடர்பில்லை ,அடுத்து என்ன என்ற பதைபதைப்பு இல்லை , கதைக்கரு கதையின் மையம் என இல்லை. ஆனால் ஆரம்பம் முதல் முடிவுவரை நல்ல சுவாரஸ்யம்
காபி கிருஷ்ணன் போன்ற பல இலக்காய ஆளுமைகள் நாவலில் வருகிறார்கள்
சிற்றிதழ் மரபில் வந்த கடைசி சில எழுத்துகளில் இதுவும் ஒன்று. தமிழின் நூறு நல்ல நாவல்கள் என பட்டியலிட்டால் கண்டிப்பாக இதை சேர்க்கலாம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]