விசு பல ஆச்சர்யங்களுக்கு சொந்தக்காரர் ..
குடும்பப்பட இயக்குனர் என அறியப்படும் அவர் ரஜினியின் வெற்றிகரமான மசாலாப்படங்களுக்கும் எழுதியிருக்கிறார்.
சிதம்பர ரகசியம் என்ற மாறுபட்ட படத்தை இயக்கியிருக்கிறார் இன்றும்கூட அதை ரீமேக் செய்யலாம்
உரிமை ஊஞ்சலாடுகிறது என்று ஒரு படம் எடுத்தார். விஜய்க்கு வாழ்வளித்த காதலுக்கு மரியாதை படத்தின் தீம் இந்த படத்தில்தான் முதலில் பயன்படுத்தப்பட்டது. நல்ல தீம் என்றாலும் அது சரியாக சொல்லப்படவில்லை
இயக்குனராக முத்திரை பதித்தாலும் சிறந்த நடிகராகவும் முத்திரை பதித்தார். சின்ன மாப்பிள்ளை போன்ற படங்களில் கதாநாயகனுக்கு இணையாக காட்சிகள் இருக்கும்
ரஜினி, பிரபு என யாருடன் நடித்தாலும் அவரது பிரத்யேக முத்திரைகள் இடம்பெறத்தவறாது
இப்போதெல்லாம் குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து புக் செய்து படம் பார்க்கிறோம்
அந்தகாலத்தில் ஏதாச்சும் படம் பார்க்கலாம் என எந்த திட்டமும் இன்றி படம் பார்க்க கிளம்புவார்கள். நட்சத்திர நடிகர்கள் படம் இல்லாவிட்டால் , விசு படத்துக்கு,நம்பி போகலாம்,, போரடிக்காது, என்ற மினிமம் கேரண்டி உண்டு
அவரது பெரும்பாலான படங்களை பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள் . அதற்கு,காரணம் இதுதான்
ரகுவரன் என்ற ஒப்பற்ற கலைஞனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு. சம்சாரம்
அது,மின்சாரம் படத்தில் ரகுவரனை மறக்க முடியுமா ??
அவர் எப்போதுமே செய்திகளில் இருந்தார். இறப்பதற்கு சில நாட்களுக்கு,முன்புகூட தன் திரைக்கதை ச உரிமைக்காக குரல் கொடுத்தார்
அருணாச்சலம்,படத்தில் இவருக்கு,ஒரு முக்கியமான ரோல். அதை இவருக்கு"அளிக்கச் சொன்னவர் ரஜினி
என்னை ஏன் இதற்கு தேர்வு செய்தீர்கள் என ரஜினியிடம் கேட்டாராம்.
ரஜினி பதில் ; திரண்ட சொத்து தன் கையில் இருக்கும்போது , அதை அனுபவிக்காமல் , உரியவரிடம் சேர்க்க துடிக்கும் அப்பாவித்தனமும் நேர்மையும்,கறார்தன்மையும் கலந்த இமேஜ் உங்களுக்குமட்டுமே உண்டு. நீங்கள் இதை செய்தால்தான் மக்கள் ஏற்பார்கள்
விசுவின் ஆளுமையை இதைவிட சிறப்பாக சொல்ல முடியாது

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]