Monday, March 30, 2020

அறங்களை அசைத்துப் பார்க்கும் ந பிச்சமூர்த்தி


இலக்கிய முன்னோடி எழுத்தாளர்களில் ந பிச்சமூர்த்தி சற்றே வித்தியாசமானவர்

அவரது முதன்மை தேடல் என்பது மெய்ஞான தேடல். அந்த தேடலின் ஒரு,பகுதியாக இலக்கியமும் இருந்தது

மற்றபடி புதுமைப்பித்தன் போன்றோ சிசு
செல்லப்பா போன்றோ முழுக்க,முழுக்க ஊழுத்துக்கு தன் வாழ்வை,அர்ப்பணித்தவர் அல்லர். அனைத்தையும் துறந்த"சன்னியாசி வாழ்க்கை"அவருடையது

அந்த ஞானச்சிதறல்களையே"அவரது கதைகளில் பார்க்க முடிகிறது

 தலித் முதல் பிராமணர்கள்வரை பறவைகள் முதல் பயிர்கள் நாய் பூனை வரை அனைத்துமே இவர் பார்வையில் கதையாகின்றன

பல வரிகளின் வித்தியாத்தன்மை ஈர்க்கிறது

மரத்தைவிட்டு போக மனமில்லாத பிசாசைப்போல


வழிதவறிய கொக்கைப்போல,தனிமையாய் ஒரு மேகம் சென்று கொண்டிருந்தது

ஆகாச மட்டும் பறந்தாலும்,கடைசியில் மண்மீது விழும் கல்லைப்போல

பிந்திக்கிடைக்கப்போகும் வெற்றிலை இன்பத்தை"முன்கூட்டி ரசிப்பதுபோல அவரது"பொக்கை வாய் அசைந்து கொண்டிருந்தது

வெறி பிடித்து தீப்பற்றியதுபோல மரங்கள் பூத்திருந்தன

பாஞ்சாலி,மரம் பளிச்சென எரிவதுபோல உடுத்தியிருந்தாள்

படுக்கையைவிட்டு வர,மனமற்ற ராணியைப்போல கடல் புரண்டு கொண்டிருந்தது

பித்தர்களைப்போல காற்று உச்சகுரலில் உளறிக்கொண்டு இருந்தது

கறுப்பு உடலில் பட்ட காயம்போலசிவப்புக் கொடி பறந்தது

இப்படி பல,வரிகள்

அவர் எடுத்துக் கொள்ளும் பேசுபொருட்களும் காலத்தை மிஞ்சி நிற்கின்றன

குடும்பக்கட்டுப்பாடு தவறு என"ஒரு கதை சொல்கிறது. அந்த கரு காலாவதியாகிவிட்டாலும் அதைச் சொன்னவிதம் ரசிக்க,வைக்கிறது

பதினெட்டாம் பெருக்கு என்று ஒரு கதை
மனைவி ஊருக்குப்போய்விட தனிமையில் இருக்கிறான் அவன். மனைவியிடம் உதவி கேட்க வருகிறாள் ஓர் ஏழைப்பெண்.,வெகு அழகான யுவதி

உதவி செய்துவிட்டு,மாலை வந்து பார்க்குமாறு சொல்லி,அனுப்புகிறான்;
அவளும் ஒப்புக்கொண்டு கிளம்பிவிடுகிறாள்

அவளுக்காக ஆவலாய் காத்திருக்கிறான். அது தவறோ என்றும் தோன்றுகிறது.

கடைசியில் அது தவறு தோன்றுகிறது. அவள் கையில் ஒரு ரூபாய் கொடுத்து அனுப்பி"விடுகிறான் என கதை முடிகிறது

காவிரி எப்படி கரையை உடைத்துவிடாமல் கடல் நோக்கி,பயணிக்கிறதோ அது,போல அநகத ஏழைப்பெண்ணும் தன் எல்லையைக்கடக்கவில்லை. இவனும் தன் அறத்தை,மீறவில்லை . இதுதான் கதை என அன்றைய வாசகர்கள் புரிந்து"கொண்டிருக்கலாம்

கலத்தல் என்பது இயல்பு. காவிரிக்கு,அது,இயல்பாக நடக்கிறது,அந்த ஏழைப் பெண்ணோ பிறரது மதிப்பீடுகளை சாரந்து வாழ வேண்டிய அவலம். வேறு எந்த உயிரியும் இப்படிப்பட்ட அவலத்தை சந்திக்க வாய்ப்பில்லை என,யாரேனும் புரிந்து,கொள்ளும் வாய்ப்பையும் கதை தருகிறது. ஒரு ரூபாயை அவன் கொடுத்ததும் அவள் அடையும் அதிர்ச்சி நமது அறங்களை சற்று அசைத்துப்பார்க்கிறது

தவறவிடக்கூடாத ஒரு படைப்பாளி ந பிச்சமூர்த்தி












No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா