Friday, March 6, 2020

பேராசிரியர் நாவலர் ஓர் ஒப்பீடு

திராவிட இயக்க வரலாற்றில் நாவலருக்கும் , பேராசிரியருக்கும் முக்கியமான இடமுண்டு

இருவருமே தனித்துவமான தலைவர்களாவதற்கான தகுதிகள் இருந்தும் நம்பர் டூ இடத்திலேயே திருப்தி அடைந்தவர்கள் என்பது ஒற்றுமை.  ஆனால் வேற்றுமைகளும் ஏராளம்

பேராசிரியர் அன்பழகன் ஆரம்பத்தில் கலைஞரை கடுமையாக எதிர்த்தார். ஒருகட்டத்தில் கலைஞரை ஏற்றார். அப்போதும் முழுமையாக ஏற்கவில்லை

தலைவராக அல்ல. தளபதியாக ஏற்கிறேன் என்றார்

எப்படியோ.. என்னை ஏற்றதே மகிழ்ச்சி. தளபதியான என்னை தளர் பதியாக மாற்றாமல் இருந்தால் சரி என கலைஞரும் அதை வேடிக்கையாக பேசி ஏற்றார்

அதன் பின் அன்பழகனின் தனித்துவம் மங்கியது.  கலைஞரின் நிழலாகிப் போனார்

நெடுஞ்செழியன் விவகாரம் வேறு விதம்

அண்ணா , கலைஞர், மக்கள் திலகம் , ஜெ என அனைவருடனுமே மோதி இருக்கிறார். அனைவராலுமே கவுரவிக்கப்பட்டும் இருக்கிறார்

உதிர்ந்த ரோமம் என்று இவரை வர்ணித்த ஜெ , தமிழகத்தின் நிரந்தர நிதியமைச்சர் என இவரை உயர்த்தியும் பேசியிருக்கிறார்

தம்பியே வா தலைமையேற்க வா என,அண்ணா இவரை அழைத்துள்ளார்

இவரது தமிழ்த்தொண்டு போதிய விளம்பரம் பெறவில்லை.

அன்பழகன் இப்படி ஏற்ற இறக்கங்களோ தனித்துவ முத்திரையோ பதித்தவர் அல்லர். ஆனாலும் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்பட்ட ஓர் ஆளுமை,அவர்

ஜெ முதல்வராக இருந்தபோது , கல்விமான்களுக்கு இடமளிக்கும் வகையில் மேல்சபை கொணர வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது

ஜெ பதிலளிக்கையில் , மேல்சபை இல்லாமலேயே அன்பழகன் போன்ற கல்விமான்களுக்கு இடம் கிடைக்கிறதே இது போதும் என்றார். ஒரு திமுக உறுப்பினரை அவர் உயர்த்திப் பேசியது அதுதான் பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்

கலைஞரின் நெருங்கிய தோழனாக இருந்தார்

வைகோ வின் கூட்டம் ஒன்றில் , நீ கடைசியாகப் பேசு என்றார்

அண்ணாவை உங்கள் உருவில் காண்கிறேன். நிறைவுரை ஆற்றி எங்களை கவுரவியுங்கள். என் உரைக்குப்பின் யாராவது எழுந்து சென்றால் அடுத்த நாள் அந்த நபர் கட்சியில் இருக்க மாட்டார். என வெகு தாழ்மையாக கேட்டுக் கொண்டார்

அன்பழகனைப் பிடிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. நீண்ட நெடிய"அரசியல் வரலாறு கொண்ட அவர் காலத்தில் நாமும்  இருந்தது ஒரு அதிர்ஷ்டம்தான்

நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்த அவருக்கு அஞ்சலி

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா