Pages

Sunday, April 12, 2020

வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க

வ்வப்போது சில பாடல்வரிகள் திடீரென நினைவு வருமல்லவா. அதுபோல ஒரு பாடலின் இனிமையான கோரஸ் நினைவு வந்தது
கஷ்டப்பட்டு என்ன பாடல் , என்ன படம் என கண்டுபிடித்தேன். 
சர்க்கரைப் பந்தல் படம். கங்கை அமரன் எழுதி இசைஞானி இசையமைத்து பாடிய பாடல் அது
அருமையான பாடல்

கண்டேன் எங்கும் என்ற பாடல்தான் கொற்றவை நாவல் எழுத வைத்தது என ஜெயமோகன் சொல்லியிருப்பார். அதுபோன்ற ஆழமான பாடல் இது
எப்படி இந்தப்பாடலை படமாக்கி இருக்கிறார்கள் என்றறிய படத்தை பார்த்தேன்

பாடலுக்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தமே இல்லை. அந்த பாடலை கண்மூடிக் கேட்டால் ஆயிரம் கதைகள் மனதில் பூக்கும். கங்கைஅமரன் இயக்கம். வீணாக்கி விட்டார்

நல்லவேளை. பாடல் வீணாகவில்லை. 
டைட்டில் பாடல் என்பதால் தப்பித்து விட்டது. 

அந்த பாடல் உங்கள் பார்வைக்கு

வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..
நாடு வாழ புகழ் வீடு வாழ, திரு வீடு வாழ்கவே வாழ்க
வாடும் ஆறுகளில் ஓடும் நீரும் வரமாக மாறியது வாழ்க
வீடு வாழ நலமோடு வாழ அதில் அன்பும் வாழ்கவே
ஏடு வாழ நல்ல எழுத்தும் வாழ உயர் எண்ணம் வாழ்கவே
வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே
வீடு வாழ சுகம் நிலைத்து வாழ நிலை யாவும் வாழ்கவே
கூடு வாழ மனம் குளிர்ந்து வாழ குறைவின்றி வாழ்கவே
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..
தேவன் என்னும் இறை தானம் தந்த உயர் ஜீவராசி அது வாழ்க
தேவன் பிள்ளையென பூமிமீது வந்த ஜீவன் என்றுமே வாழ்க
இரமலிங்கம் உயர் ஞானலிங்கம் அருட்ஜோதி வாழ்கவே
தேகமெங்கும் உயிர்போல வாழும் ஒளி ஜீவன் வாழ்கவே
நீதி நெரியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே
நீதி நெரியில் நின்று ஞான நிலையை தந்த வள்ளலார் வாழ்கவே
பாவம் போக, பழி போக, பண்பு நலம் என்றும் வாழ்கவே
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…
வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க அதில் வாழும் ஜீவனே…
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க வழிகாட்டும் தேவனே..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]