நமது பாணியில் அமெரிக்காவிலும் நிவாரணப் பொருட்களில் அதிபர் பெயர் பொறிக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது
இது எதில்போய் முடியும் என நமக்குத்தானே தெரியும்
...............
வாழைமட்டை அமெரிக்கனின் அக்கிரமம் .. அதிபர் டிரம்ப் ஆவேசம்
கரோணாவால் பாதிக்கட்டோருக்கு நிவாரணம் வழங்கப்படுவது தெரிந்ததே. வாழும் ஷேக்ஸ்பியர் , ஆங்கில இனக்காவலர் இதய தெய்வம் ட்ரம்ப் ஆணைக்கிணங்க இது வழங்கப்படுகிறது என்று அவற்றில் எழுதப்பட்டு இருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இது தொடரகபாக ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கை
உடன்பிறப்பே..
இன்றைய தினம் கொரோனாவால் கொத்துகொத்தாக மடியும் கொடூரத்தை கொஞ்சம் குறைப்பதற்காக , வாட்டத்தை போக்கும் வாடைக்காற்றாக , கடலில் கதிகலங்கும் கப்பலுக்கு கலங்கரை விளக்காக , நிவாரணம் வழங்க உத்தரவிட்டேன்.
அதில் என் பேர் இருப்பதை வைத்து போர் ஒன்றை சிலர் தொடங்கி இருப்பதைப் பார்க்கும்போது , அமெரிக்கா இன்னும் ஒரே நாடாக இருந்திடத்தான் வேண்டுமா என நாம் கேட்காவிட்டாலும் மக்கள் கேட்க மாட்டார்களா.
ஆங்கிலத்தாய்க்கு வானளாவிய தங்கச் சிலை , மக்கள் வருத்தம்போக்க ஹாலிவுட் படங்களுக்கு வசனம் என பல நல்வாழ்வுத்திட்டங்கள் பரிசீலனையில் இருக்கும்போது , சிலர் பெயர் பொறுப்பை கண்டு பொருமுவதை பார்க்கும்போது அமெரிக்கன் இப்படி வாழைமட்டைபோல சுரணையின்றி இருக்கிறானே என தோன்றுகிறதல்லவா. அக்கிரமக்காரர்கள் நயவஞ்சகர்கள் என்ன சொன்னாலும் , வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது ஆங்கிலமாக இருக்கட்டும் என்பதை மனதில் தாங்கி தொடரந்து உழைப்போம்
அன்புடன்
டொனால்ட் ட்ரம்ப்

No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]