சில கதைகளை திரைப்படங்களை உலகமே கொண்டாடும். அந்த படம் வெளிவரும்போதே நாம் பாரத்திருந்தால் அந்த கதையை வெளிவரும்போதே படித்திருந்தால் அது நமக்கு ஒரு தனி மகிழ்ச்சியைத் தரும்
உலகம் பாராட்ட ஆரம்பிக்கும் முன் நாம் அதன் உன்னதத்தை அறிந்து,விட்டோமே என தோன்றும்
அப்படி ஒரு மகிழ்ச்சியைத்தந்த சிறுகதை ஜெயமோகனின் பத்து"லட்சம் காலடிகள்.
கதை பல தளங்களில் விரியக்கூடியது என்றாலும் ஒரு புரிதலுக்காக இப்படி சொல்லலாம்
கிருஷ்ணன் என்றொரு பிள்ளைப்பூச்சி கொலை செய்யப்பட்டு கிடக்கிறான்.
இவனெல்லாம் ஓர் ஆள் என்று யார் இவனைக் கொன்றது என ஒரு போலிஸ்காரர் (ஔசேப்பச்சன் )கண்டுபிடிக்கமுயல்கிறார்
யாரோ ஒரு மனிதர் இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது. ஆனால் ஒருப்பிள்ளைப்பூச்சியை கொல்வதற்கு முகாந்திரம் இல்லையே
கடைசியில் பல்வேறு தற்செயல்களால் உண்மை தெரிகிறது
அப்துல்லா என்ற மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ராதாமணி என்ற திருமணமான பெண்ணை அவளது பேரழகுக்காக விரும்புகிறான். அவளுக்காக எதுவும் செய்யத்தயார் என மன்றாடுகிறான்
அவள் மறுத்து விடுகிறாள். தனது பிரசகசனையை கிருஷ்ணன் என்ற பிராமணிடம் சொல்கிறாள்
அவன் இதை அப்துல்லாவிடம் சொல்லி மிரட்டுகிறான். அவருக்கு இவன் ஒரு பொருட்டில்லை என்றாலும் காசு கொடுக்கிறார். அந்த காசுக்காக யாரோ சில பொறுக்கிகள் செய்ததுதான் அந்த கொலை என கண்டுபிடிக்கிறார் அந்த போலிஸ்
இன்னொன்றையும் அப்துல்லா சொல்கிறார்.. தன் மகன் செய்தது தவறு என்பதால் , தான் கட்டிக்காத்து வரும் மாண்பை காக்கும் பொருட்டு , தன் மகனையே கொன்று விட்டது தெரியவருகிறது. பிரமிப்புடனுடம் மரியாதையுடனும் அவரைப் பார்க்கிறார் போலிஸ்காரர்
""அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்""
தன்னை ஒரு இறைச்சித்துகளாக நினைத்து வீண்பேச்சு பேசி , தின்று துய்த்து வாழ்ந்து மறைவோர் உண்டு.
நீண்டதொரு பாரம்பரியத்தின் ஒரு இணைப்பு சங்கிலியாக தன்னை நினைப்போரும் உண்டு
பேரிடர் காலத்திலும் நியாயமான விலைக்கு பொருட்களை விற்போரை காண்கிறோம் அல்லவா. தாம் செய்யும் சிறு தவறும் கொண்ட அந்த நீட்சியை அழித்து விடும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இந்த கதையில் அப்துல்லா ஒரு தவறான அடியை வைக்ககூடாது என நினைத்து தன் மகனை கொன்று விடுகிறார்
ஔசேப்பச்சன் கண்களுக்கு அவர் மாமனிதனாக பேரழகாக தெரிகிறார்
அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அராபிய தங்ஙள் போல, ஒரு சூஃபி போல, ஒரு சுல்தான்போல. மீண்டும் அதே எண்ணம், என்ன ஓர் அழகு.
நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த அழகிய விழிகள்
இதே போன்ற செயலைத்தான் ராதாமணியும் ஆற்றுகிறாள்
அவள் சுலபமாக பணக்காரனை ஏற்றிருக்கலாம்.
எப்படி அப்துல்லா தன் பாரம்பரிய மாண்பை காக்கிறரோ அது போல அவளுக்கும் கலாச்சார ரீதியான ஒரு தொடர்ச்சி இருக்கிறது. தனக்கு கிடைக்கப்போகும் சுகபோகத்துக்காக ஒரு தவறான காலடியை எடுத்து வைக்க அவள் விரும்பவில்லை
ஆனால் ஔசேப்பச்சன் கண்களுக்கு இவள் ஒரு அபலையாகவே , தவறானவளாகவே தெரிகிறா
(அவள் கண்கள்! தோழர்களே, கதையெழுதும் பாதிமலையாளிப் பாண்டியே, ஒன்று தெரிந்துகொள். சிலசமயங்களில் மனித மனதை நேருக்குநேராகப் பார்த்து நாம் நடுங்கிவிடுவோம்.)
உண்மையில் அந்த போலிஸ்காரன் ஒரு பெண்மை உட்பட அனைத்தையுமே இளக்கரமாக பார்க்ககூடியவன்
அவன் எனவே அவளைப்பற்றிய அவன் பார்வையை அப்படியே ஏற்க வேண்டியதில்லை என்ற சுதந்திரத்தை வாசகனுக்குத் தருகிறது கதை
யோசேப்பச்சன் ஒரு மானங்கெட்ட பயல்!
ReplyDeleteஇவன் வாந்தியெடுத்த கருத்து என்னவென்றால், உயர்சாதி என சொல்லப்படும் பெண்களின் பேரழகிற்கு காரணம் இனக்கலப்புதான் என. சமூகத்தில்,கீழ்நிலை செல்லச் செல்ல, அழகு குறைகிறது. ஏனென்றால் அங்கு இனக்கலப்பு இல்லை என. அப்போ கடைநிலை சமூக மக்களில் இனத்தூய்மை அப்படியே உள்ளதென அர்த்தமா? இல்லை விளிம்புநிலை பெண்கள் அழகு கிடையாதா? என்னதான் சொல்ல வருகிறார் அந்த குடிகார ஔசெப்பச்சன்.
அழகு என்பது எங்கும் உள்ளது!
இதைச் சொல்ல வேண்டியதன் அவசியம் தான் என்ன?
எழுத்தாளர் சுதந்திரம். அவர் என்ன வேணாலும் எழுதட்டும். அவர் உண்டு அவர்தம் எழுத்துண்டு என இருக்கிறார்.
இதையெல்லாம், அவர்தான் சொன்னதாக எடுத்துக்கொள்ள கூடாது(?!). நல்ல விசயமென்றால் மட்டுமே எழுத்தாளர சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அட! அன்ன பறவை போல தான் வாசகர்கள் இருக்க முயற்சி செய்ய வேண்டும். உண்மை. அப்படியே ஆகுக!
ஆனால், இங்கு இதை சொன்னது ஔசேப்பச்சனாம். அதனால் யோசெப்பச்சனை நையப்புடைக்கலாம் அல்லவா?