தமிழரின் பாரம்பரியமான உணவான இட்லியின் இயற்பெயர் இட்டவி. மாவை பாத்திரத்தில் இட்டு , அவிப்பதால்,இட்டவி என பெயர் பெற்றது. தமிழினப் பகைவர்கள் அதை இட்லி என மாற்றி விட்டனர் என ஒரு நாளிதழில் படித்தேன்
பிச்சு சாப்பிடுவதால் பிச்சா என பெயர் பெற்று , அது மருவி பிஸ்ஸா என மாறியது அன்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அது போல மேற்கண்ட கூற்றும் அபத்தமே
இட்லி நமது உணவு கிடையாது. சங்க காலத்தில் யாரும் இதை சாப்பிட்டதில்லை
இந்தோனேசியாவில் கெட்லி என்ற பெயரில் சாப்பிடப்பட்ட உணவுதான் இட்டலிகே என்ற பெயரில் இந்தியாவுக்கு வந்தது. கடைசியில் தமிழ் நாட்டில் இட்லி என மருவியது
நாம் பெருமைப்படத்தக்க விஷயங்கள் பல உண்டு. முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்பது போன்ற போலி பெருமிதங்கள் வேண்டாம்.
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]