Pages

Wednesday, May 13, 2020

பிண மனிதனாக சிவாஜி நடித்த படம்


தேடல்தான் மனிதனை இந்த அளவு உயர்த்தியுள்ளது.  தன்னை விட வலுவான விலங்குகளை மட்டுமன்று, சக மனித இனங்களைக்கூட வென்று ஹோமோசெப்பியன்ஸ் என்ற இனம் உலகை ஆள்வதற்கான காரணம் அதன் தொடர்தேடல்கள்தான்.
இந்த தேடலே அவனுக்கு அழிவையும் கொண்டு வந்துவிடுகிறது என்பதுதான் 

அறிவியல் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப வளர்ச்சிகள் நல்லதுதான் என்றாலும் , இதன் விளைவாக சுறுச்சூழல் சீர்கெட்டு புதிய கிருமிகள் உருவாகி மனிதனையே அழித்து விடுகிறதல்லவா

இந்த கருவை அடிப்படையாக வைத்து மேரி ஷெல்லி எழுதிய நாவல் பிராங்கன்ஸ்டீன் உலக புகழ் பெற்ற கிளாசிக் ஆகும்
இருநூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு இருந்தாலும் இன்றும் சுவையாக பொருத்தமாக உள்ளதுதேடலுடன் பயணிக்கும் கப்பல் கேப்டன் வால்டன் தன் சகோதரிக்கு எழுதும் கடிதங்கள் வாயிலாக  நம் முன் விரிகிறது 
பயணத்தின் போது உயிருக்கு ஆபத்தான"நிலையில் சந்திக்கும் விக்டர் பிராங்கன்ஸ்டீன் தன் கதையை சொல்கிறான் 


பல்வேறு பிணங்களின் உறுப்புகளை சேகரித்து மனித உருவமாக்கி அதற்கு உயிர் கொடுப்பதும் , அதன் அடுத்தடுத்த கொலைகளால் மனம் நொந்து அதை அழிக்க முயல்வதும் இவன் பார்வையில் சொல்லப்படுகிறது
என்னால் அழிக்க முடியவில்லை. நீங்களாவது இதை செய்யுங்கள் என சொல்லிவிட்டு இறக்கிறான் அந்த ஆராய்ச்சியாளன்

தான் ஏன் கொலைகாரன் ஆனேன் என்ற பிணமனிதனின் தன்னிலை விளக்கமும் சொல்லப்படுகிறது

தன்னை உருவாக்கியவன் இறந்ததை அறிந்து மனம் உருகி கண்ணீர் விட்டு , தானும் சாகப்போவதாக சொல்லி
கிளம்புகிறான் அந்த பிரேத மனிதன்

மனித இனமே அழிந்து விட்டால் வைரஸ் மட்டும் தனியாக இருந்து செய்யப்போகிறது என இன்றைய சூழலில் தோன்றுகிறது. அணு குண்டு வீச்சால் உலகம் அழியும் தறுவாயில் படித்தால் வேறுவிதமாக தோன்றலாம்
இதனால்தான் இக்கதை காலம் நடந்து நிற்கிறது

இது திரைப்படமாக வந்துளளது.  இதை தழுவி பல படங்கள் வந்துள்ளன

அந்த நாள் போன்ற சோதனை முயற்சிகளில் ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டிய சிவாஜி கணேசன் , இந்த படத்தில் வரும் குரூரமான பிரேதமான நடிக்க ஒப்புக்கொண்டார்.  நான் வணங்கும் தெய்வம் படத்தில் ஆராய்ச்சி மூலம் உயிர் கொடுத்தல் என்ற கான்செப்ட்டை மட்டும் எடுத்துக் கொண்டு , அதன்மேல் வேறு விதமான கதையை உருவாக்கினர்.; பேசாமல் அந்த கதையை அப்படியே எடுத்திருக்கலாம்

பிரேதமனிதன் என்ற பெயரில் வெகு அற்புதமாக புதுமைப்பித்தன் மொழி ஆக்கம் செய்துள்ளார்.  

கதையின் சாரத்தை உள்வாங்கி சுருக்கமாக தன் பாணியில் எழுதியிருக்கிறார்

முழுமையான மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன  

வாய்ப்பு,கிடைத்தால் சுவையுங்கள்



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]