வான் நிலா , நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
உறவுகள் தொடர்கதை
என்னுள்ளில் எங்கோ ஏங்கும்
கீதம்
ஆகாயம்தானே , அழகான கூரை
இதோ உன் காதலி கண்மணி
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
என்பது போன்ற அபூர்வமான தேனமுத பாடல்களை , இசை ரசிகர்கள் மறக்கமுடியாது.
இலங்கை வானொலி பிரபலமாக இருந்தபோது , இந்த பாடல்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டன
இந்த லட்டு போன்ற பாடல்கள் அமைந்தது ரஜினிக்கோ கமலுக்கோ அல்ல. அவர்களது சமகாலத்தவரான சிவச்சந்திரனுக்கே இவை கிடைத்தன
ரஜினி , கமலுடன் பயணத்தை தைடங்கியவர். ரஜினியின் ஆரம்பகால தண்பர்.. நல்ல அறிமுகம் கிடைத்தன . வெற்றிகள் கிடைத்தன.
ஆனால் ரஜினிக்கும் கமலுக்கும் இருந்த முனைப்பு இவருக்கு இல்லை
பட்டினப்பிரவேசத்தில் அறிமுகமாகி பிரசித்தி பெற்று இருந்தார்.
அடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வாயப்பு தேடி வந்தது. கிழக்கே போகும் ரயிலில் நடிக்க வேண்டியவர் இவர்தான். காரணமே இன்றி இவர் மறுத்து விட்டார். விதி , வேறு என்ன சொல்வது
இன்றளவும் பேசப்படும் அவள் அப்படித்தான் படத்தில் நடித்தார்
பொல்லாதவன் , வெள்ளைரோஜா போன்ற பல படங்களில் 80களில் வில்லனாக நடித்தார்
அந்த வில்லன் இடத்தையும் சத்யராஜிடம் பறி கொடுத்தார்
சில படங்கள் இயக்கினார் , தயாரித்தார். கதை வசனம் எழுதினார்
சமீபத்தில் அரசி மெகா சீரியலில் இவரை பார்க்க முடிந்தது
திரைக்கலைஞர் லட்சுமியை மணந்து சம்யுக்தா என்ற இனிய புதல்வியுடன் வாழக்கை இனிதாக சென்றாலும் , வீணடிகப்பட்ட திறமைசாலியாகவே வரலாறு இவரை மதிப்பிடும்
திறமைக்கு வயது பொருட்டில்லை. இன்று சினிமா எடுப்பதில் திரையிடுவதில் நிறைய மாறுதல்கள் வந்துளளன . இதை பயன்படுத்தி , தன் அனுபவம் துணைகொண்டு , படங்கள் இயக்கி தன்னை நிரூபிக்க இன்றும் வாய்ப்பிருக்கிறது. வாழ்த்துகள்
இதே கருத்தை இந்து தமிழ் திசை பேட்டியில் சிவச்சந்திரன் கூறியிருக்கிறார். வெற்றி தோல்விகள் நிரந்தரமில்லாதவை
ReplyDelete