Pages

Monday, May 18, 2020

சகதேவனின் கொடை


மகாபாரதத்தில் சகதேவன் பாத்திரம் அனைவராலும் மதிக்கப்படும் கேரக்டராகும்

பீமனுக்கும் துரியோதனுக்கும் நடந்த இறுதி போரில் அதற்கு நடுவராக துரியோதனன் நியமித்தது சகதேவனை..

அவனைப்பற்றி இன்னொரு செய்தியை தருகிறார் காஞ்சிப் பெரியவர்

மரணப்படுக்கையில் இருந்த பீஷ்மரிடம்

தர்மர் சில கேள்விகள் கேட்கிறார்

வாழ்வையும் ஜெயிக்க வேண்டும். வாழ்விலும் ஜெயிக்க வேண்டும் . அதற்கு என்ன வழி.    யார் முழு முதல் கடவுள்.  தலை சிறந்த,தர்மம் எது

இந்த கேள்விகளுக்கு பீஷ்மர்அழகுற பதில் சொன்னார்

பதிலில் இருந்த சொல் அழகிலும் பொருளிலும் மயங்கி அனைவரும் மெய்மறந்து கேட்டனர்

சொல்லி முடித்து பீஷ்மர் கண் மூடியதும்தான் , அவர் சொன்னதை குறித்து வைக்கவில்லையே என தர்மர் உணர்ந்து பதறினார்

அவர் சொன்னதை மீட்டெடுக்க கிருஷ்ணரிடம் இறைஞ்சினார்

அதை மீட்டெடுக்க சகதேவனால் மட்டுமே முடியும். சிவ பக்தனான அவன் அணிநகதுள்ள ஸ்படிக மாலையில் பீஷ்மர சொன்ன மந்திரங்கள் கிரகிக்கப்பட்டு இருக்கும்
அவன் சிவனை தியானித்து, அந்த மந்திரத்தை மீட்டெடுத்து வியாசரிடம் சொல்லட்டும் அவர் அதனை எழுதட்டும் என்றார்

அப்படி கிடைத்ததுதான் விஷ்ணு சஹஸ்ரநாமம்


2 comments:

  1. அவர் சகதேவன் அல்ல!சஹாதேவன்

    ReplyDelete
    Replies
    1. சமஸ்கிருதத்தில் सहदेव சஹதேவ். தமிழில் சஹாதேவன். இரண்டுமே வழக்கத்தில் உள்ளன. தஙகள் கருத்துக்கு நன்றி

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]