Pages

Monday, May 4, 2020

கோபு என்ற போராளி


காதலை மையப்படுத்தி வரும் சினிமாக்களில் திருமணம்தான் காதலின் வெற்றி என கட்டமைக்கப்பட்டு இருக்கும் திருமணம் முடிந்ததும் காதலர்கள் இன்புற்று வாழ்ந்தனர் என படம் முடிந்து விடும்

அதுபோல 1947ல் சுதந்திரம் வாங்கியதை போராட்டத்தின் கிளைமாக்ஸாக பொதுவாக நினைக்கிறோம்

உண்மையில் சுதந்திரத்துக்குப் பிறகு வந்த சில வருடங்களில் சுதந்திர போராட்டத்தைவிட உக்கிரமான போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தினர். போலிஸ் அடக்குமுறை , போலி என்கவுண்டர் , பண்ணையாரககளின் சதி , எண்ணற்ற துரோகங்கள் என சந்தித்து மக்களுக்காக போராடினர்

அப்படி போராடியவர்களில் ஒருவர்தான் ஏ எம் கோபு என்ற புகழ் பெற்ற பொதுவுடைமை தலைவர்.

அவரது போர்க்குணம் மிகுந்த இளமைக்காலத்தை அழகாக பதிவு செய்துள்ளார் புகழ்பெற்ற இடதுசாரி எழுத்தாளர் முனைவர் ச சுபாஷ் சந்திரபோஸ்

களப்பால் குப்பு , வாட்டாக்குடி இரணியன் , சாம்பவானோடை சிவராமன் , ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் போன்ற பல போராளிகள் குறித்து அற்புதமாக எழுதியவர் இவர்

பொதுவுடைமைப் போராளி ஏ,எம் கோபு என்ற நூலை இலக்கியச்சுவையுடன் படைத்துள்ளார்  இவர்;

தஞ்சை மாவட்டத்தில் பண்ணையார்களின் கொடுமை தலைவிரித்தாடிய கால கட்டம். அடிமைகளாக தொழிலாளரககளை நடத்துவது , தமது வேலையாட்களுக்கு திருமணமானால் மணப்பெண்ணின் முதலிரவு தன்னுடன் நடக்க வேண்டும் என ஆணையிடும் முதலாளிகளின் அயோக்கியத்தனம் , பணியாட்களுக்கு விதிக்கப்படும் கொடூர தண்டனைகள் என பிரிட்டிஷ் அரசை"விட கொடூரமான ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தனர் உள்ளுர் முதலாளிகள்

இவர்களுக்கெதிராக வீறு கொண்டெழுந்த கம்யூனிஸட் இயக்கத்தில் இணைந்து கொண்டார் கோபு. வசதியான குடும்பம் , கல்வி போனறவை இருந்தும் போராளி வாழ்ககை இவரை ஈர்த்தது.

சிறை தண்டனைகள் பெற்று , துப்பாக்கி குண்டுகளை தாஙகி மகககளுக்காக உழைத்தார்.  ஒரு போராட்டத்தின்போது இவரது கையில் பாயந்த குண்டை கடைசி வரை எடுக்க முடியவில்லை

ஆனால் உயிர் பெற்றெழுந்து வீர்யத்துடன் போராடினார்

கம்யூனிஸ்ட்டுகள்தான் தனது முதல் எதிரி என பிரகடனம் செய்த ராஜாஜியை நூலாசிரியர் கடுமையாக சாடியுள்ளார்

கடைசியில் , அவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை பாராட்டுவதும் கோபுவுக்கு சட்டரீதியாக உதவுவதையும் பதிவு செய்துள்ளார் நூலின் அறிவு நாணயத்துக்கு இது சான்று;

கம்யூனிஸ்ட் சித்தாந்த வெற்றிக்கு இன்னொரு சான்று


சேரித் தொழிலாளர்களை கொடுமைப்படுத்திய மகாதேவ ஐயர் என்பரை கொன்ற குற்றச்சாட்டில் கோபு உள்ளிட்ட பொதுவுடைமை தோழரகள் சிலரை போலிஸ் கைது செய்கிறது

அந்த பட்டியலில் ஆதிக்க சாதியினர் வசதியான சாதியினர என அனைவரும் இருக்கின்றனர்

பாதிக்கப்பட்ட சாதி மட்டும் போராடுவதில் பலனில்லை. அனைவரும் சேர்ந்து போராடுவதை சாதித்துக்காட்டியது இயக்கம்
ஜனசக்தி இதழ் இதற்கு பெரிதும் உதவியுள்ளது

கோபுவின் வாழ்வில் கலைஞரின் பங்களிப்பு ,  ஜெயகாந்தனின் ஜனசக்தி தொடர்பு ஆகியவையும் பதிவாகியுள்ளது

கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]