சில படங்களை எப்போது பாரக்க நேர்ந்தாலும் முழுமையாக பார்ப்போம். அப்படி ஒரு படம்தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
மம்முட்டி , அஜித் , அப்பாஸ் , ரகுவரன் , ஐஸ்வர்யா ராய் , தபு என இன்று நினைத்துப் பார்க்க முடியாத மல்ட்டிஸ்டார் படம். அப்பாசுக்கு குரல்கொடுத்தவர் விக்ரம். இசை ரகுமான். சுஜாதா இயக்குனர் ராஜிவ் மேனனுக்கு முழு பக்கபலமாக இருந்தார்
இப்படி ஒரு அபூர்வமான படத்தில் நடிக்க வேண்டியவர் பிரசாந்த். அவர் அப்போது விஜய் அஜித் ஆகியோரைவிட பெரிய நிலையில் இருந்தார். அந்த கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க் இருந்தவர். அவர் எனக்கு ஜோடியாக வேண்டாம். மம்முட்டி கேரக்டருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் ஐஸ்வர்யாராயை என்னுடன் நடிக்க வையுங்கள் என்றார் பிரசாந்த்
டென்ஷனான இயக்குனர் அஜித்தை அணுகினார். இப்படித்தான் அஜித் இதில் நடித்தார். படம் ரிலீசாவதற்கு முன்பே பிரசாந்த்தை விட பெரிய நிலைக்கு வந்து விட்டது வரலாறு
தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ராணுவ வீரர்கள் செய்கிறார்கள். ஆனால் கார்கில் வீரர்களுக்கு , பங்களாதேஷ் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் மோதிய வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் இலங்கையில் நுழைந்த இந்திய அமைதிக்குப் படைக்கு கிடைக்கவில்லை. சிங்களர்கள் இந்தியரககள் என அனைவரும் திட்டினார்கள். எதற்காக போரிடுகிறோம் , ஏன் சாகிறோம் என தெரியாமலேயே போரிட்ட வீரர்களில் ஒருவராக நடித்திருப்பார் மம்முட்டி. அவர்களைப்பற்றிவெளிவந்த ஒரே படமாக இது இருக்கக்கூடும்
தயார் நிலையில் இருப்பவனுக்குதான் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக அஜித்தும் பிரசாந்தும் இருப்பதற்கு சாட்சியாக இந்த படம் இருக்கிறது
அன்பு நண்பருக்கு ,
ReplyDeleteஇந்தத் தகவல் புதியது. மம்மூட்டி கதாபாத்திரம் குறித்த கோணமும் புதியது மற்றும் உண்மை.
தபு விற்கு ரகுவரன் ஜோடியாக இருப்பார் என இந்த படத்தை பார்க்கும் போது தோன்றியது. அதாவது ஐஸ்வர்யா ராய் மம்முட்டியை கண்டு கொள்வதும், தபு ரகுவரனை கண்டு கொள்வதுமே இந்தப் படம் என்ற உணர்வு உண்டானது. அப்போதுதான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும். என்னுள் உருவாக்கிய உணர்வு இது. தவறாகவும் இருக்கலாம். பகிர்தலுக்கு நன்றி.
அன்புடன்
தே. குமரன்
அருமையான பார்வை. சுஜாதா அப்படி யோசித்திருக்க வாய்ப்புண்டு
Delete