சத்யராஜ் , பாக்யராஜ் , தியாகராஜன் , பாரதிராஜா , நாகேஷ் , மனோரமா என தன் புதல்வர்களை வளர்த்துவிட நினைத்து தடுமாறியவர்கள் பலர்.
யுவன்சங்கர் ராஜா , பிரபு போன்ற லர் அடைந்த வெற்றிக்கு அவரவர்களின் உழைப்பும் திறமையும்தான் காரணம்
விஜய் , அஜித் இருவரின் வெற்றிக்கும் அவரவர்களின் உழைப்பு , புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்கள் , தொழில் ஒழுக்கம் போன்றவைதான் காரணம்
ஆரம்பத்தில் மட்டமான படங்களில் நடித்தாலும் பரவாயில்லை. அடுத்தடுத்து நடிப்பதுதான் முக்கியம் என வியூகம் அமைத்தது விஜயின் புத்திசாலித்தனம்.
பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை ஆகிய படங்கள் அவருக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தி தந்தன. அதன் பின் பழைய பாணியை கைவிட்டார்
அஜித்தைப் பொருத்தவரை , அப்போதைய பெரிய நடிகர்களுடன் இணைந்து நடித்து தனது ரீச்" சை அதிகப்படுத்தும் வியூகத்தை அமைத்தார்.அதை அப்போதே பேட்டிகளிலும் சொன்னார்.
சத்யராஜ் , கார்த்திக் போன்றோர் படங்களில் நான் நடிப்பதை பார்த்து அவர்கள் ரசிகர்கள் என்னையும் ஏற்றால் நல்லதுதானே என்றார்
பிரசாந்த் , விஜய் ஆகியோருடனும் இணைந்து நடித்துள்ளார்.
ஆசை படம் இவருக்கு திருப்புமுனை தந்தது
இதில் என்ன வினோதம் என்றால் தங்களுக்கு திருப்பு முனை அளித்த பூவே உனக்காக மற்றும் ஆசை இயக்குனர்களுடன் இவர்கள் மீண்டும் இணையவில்லை
நேருக்கு நேர் படத்தில் அஜித் கேரக்டரை சற்று டம்மி ஆக்கிவிட்டு , விஜய் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் கோபமடைந்த அஜித் படத்தில் இருந்து விலகினார்
இனி ஒரு போதும் வசந்த் படங்களில் நடிக்க மாட்டேன் என பேட்டி அளித்தார்
உன்னை நினைத்து படத்தில் நடித்த விஜய் படத்தின் ஒரு காட்சியை மாற்றச்சொல்லி கேட்டு , அது நிறைவேறாததால் படத்தில் இருந்து விலகினார்
இதனால் விக்ரமன் , வசந்த் படங்களில் இரண்டாவது முறையாக வந்த வாய்ப்பை இருவருமே நிராகரித்து விட்டனர்
நேருக்கு நேர் படத்தில் அஜித் நடித்திருந்தால் விஜய் அஜித் காம்பினேஷன் சுவையான விருந்தாக இருந்திருக்கும். மிஸ் ஆகி விட்டது
ஆனால் உன்னை நினைத்து படத்தை விஜய் தவிர்த்தது நல்லதுதான். சுமாரான படம்தான் அது
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]