கொன்றைமலர் தரித்தான் கோபாலன் கோலெடுத்து
நின்று குழல் ஊதினான் நீள்சடையான் பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவு அணையில் கண் வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்
நின்று குழல் ஊதினான் நீள்சடையான் பொன்திகழும்
அக்கு அணிந்தான் மாயன் அரவு அணையில் கண் வளர்ந்தான்
சிக்கலிலே வாழும் சிவன்
என்று பாடுகிறார் காளமேக புலவர்
கோபாலன் கொன்றை மலர் தரித்தான் என்பது நம்மை குழப்புகிறது
கடைசி வரியை முதலில் வைத்து படித்தால் புரிகிறது; சிக்கலில் வாழும் சிவன் கொன்றை மலர் தரித்தான். கோபாலன் குழல் ஊதினான். நீள்சடையான் ருத்ராட்சம் அணிந்தான் மாயனாகிய திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் மடியில் துயில் கொண்டான் என பொருள்
சித்திரை என்றால் பொன்மலர்கள் என கொன்றை மலர்கள்
பூத்துககுலுங்கும். சித்திரை என்றால் மலர்களின் மாதம்
எனவேதான் சித்திரை மாதத்தில் பெருநிலவு நிகழ்வு ஏற்படின் அதற்கு பெருமலர் நிலவு super flower moon என்று பெயர். நிலவும் பூமியும் அருகருகே வரும்போது , வான் நிலவு வழக்கமான பவுர்ணமி நிலவை விட பெரிதாக தோன்றும்.
அது சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது.
மே மாதம் மலர்களின் மாதம் என்பதால் சூப்பர் பிளவர் மூன்;
இன்று (07: 05 :2020) மாலை இதை கண்டு களிக்கலாம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]