எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார்
எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே
சொற்களின் ஓசை நயத்துக்கேற்ப புது எழுத்து தோன்றும் என்கிறார்
நன்னூல் என்ன சொல்கிறது ?
இ ஈ ஐ வழி “ய” வ்வும்
ஏனை உயிர்வழி “வ” வ்வும்
ஏமுன் இவ் இருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்
அதாவது முதல் சொல் இ ஈ ஐ என முடிந்தால் , ய் என்ற எழுத்து தோன்றும்
பள்ளி அறை -- பள்ளி ய் அறை பள்ளியறை
வாழை இலை --- வாழை ய் இலை வாழையிலை
ஏ என்ற சொல்லில் முடிந்தால் , வ் ய் என இரண்டுமே வரக்கூடும்
மற்ற உயிர் எழுத்துகளில் முடிந்தால் ,வ் தோன்றும்
மா இலை மாவிலை
அளவு அறிந்து அளவறிந்து
இந்த விதிப்படிதான் , கோ இல் என்பதை சிலர் கோவில் என எழுதுகிறார்கள்
ஆனால் சங்க இலக்கியங்களில் கோயில் என்றே வருகிறது. .பேச்சு வழக்கில் கோயில் என்றுதான் சொல்ல முடிகிறது.. கோவிலுக்கு போகிறேன் என்பதில் இயல்பு இல்லை
மா + இருள் என்பது இந்த விதிப்படி மாவிருள் என்றுதான் வர வேண்டும் .. ஆனால் மாயிருள் என்பதே சரியானது
அதற்கு காரணம் , இ என்ற சொல் வந்தால் அங்கே ய் தோன்றும் என நன்னூல் சொல்வதை , இரண்டாவது சொல்லில் வைத்து பார்க்க வேண்டும் என்கிறார்கள் சிலர்
அதாவது மா + இருள் என்பதில் இரண்டாம் சொல் இ என்பதால் , அங்கே ய் தோன்றி மாயிருள் ஆகிறது
அதேபோல கோ இல் என்பது கோயில் என்றுதான் ஆகும்..
அதுமட்டுமின்றி தொல்காப்பியர் சொன்னதுபோல , இசை நயம்தான் முக்கியம் என்ற விதிப்படியும் கோயில்தான் சரி .. அதனால் சங்க நூல்களில் கோயில் என்றுதான் குறிப்பிடப்படுகிறது என்கிறார்கள்
சில ஆர்வக்கோளாறு இலக்கணப்பண்டிதர்களால் , கோவில் என்பதும் பயன்பாட்டில் உள்ளது.. ஆனால் அது தவறு என நிறுவ முடியாது.. நன்னூல் விதியின்படி கோவில்தான் சரி என்பார்கள்.
ஆனாலும் கோயில்தான் சரியான் சொல்.. யாராவது கோவில்தான் சரி என்று சொன்னால் , மையமாக புன்னகைத்து நகருங்கள்..
வெகுநாள் சந்தேகம் இன்றுதான் தீர்ந்தது. எடுத்துக்காட்டுகள் அருமை.
ReplyDeleteதெளிவான விளக்கம். எங்கள் தமிழாசிரியர் கோயில் என்பது இலக்கணப்போலி எனக்கூறியது நினைவுக்கு வருகிறது. இலக்கணப்படி தவறாக இருந்து,பயன்பாட்டில் இருக்கும் சொல் எனில் அது இலக்கண போலி என நினைக்கிறேன்.
ReplyDeleteஇன்றும் நினைவில் நிற்கும்படி சொல்லித்தந்த அவ்வாசிரியர்க்கு நம் வணக்கங்கள்
Deleteநன்றி. அவர் பெயர் கொடையரசன்
Delete