சின்ன கவுண்டர் படத்தில் , எலுமிச்சம்பழம் எலுமிச்சங்காய் , வாழைப்பழம் வாழைக்காய்.. மாம்பழம் மாங்காய் என இருப்பதுபோல , தேங்காய்க்கு பழம் என்பது இல்லை என்பதை வைத்து கவுண்டமணியை கன்ஃப்யூஸ் செய்வார் செந்தில்
நாம் அனைவரும் அந்த காமெடிக்கு சிரித்து இருப்போம்.
ஆனால் அது சிரிக்க வேண்டிய விஷயம் கிடையாது.
தேங்காய் , தென்னை மரம் போன்றவை சங்க காலத்தில் இருந்ததற்கான ஆதாரம் சங்கப்பாடல்களில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என சில தமிழர்கள் கூறுகிறார்கள். தொ பரமசிவன் இப்படி கூறுபவர்களில் ஒருவர்.. ஏழாம் நூற்றாண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்த வந்தேறி மரம் இது..என சொல்கிறார்கள் ..
உண்மையில் தேங்காயின் பழத்தை குறிப்பிடும் சொல் தமிழில் உண்டு.. தேங்காய் குறித்த குறிப்பும் சங்கப்பாடல்களில் உண்டு
ஆனால் தேங்காய் என இருக்காது . தெங்கு , தென்னை மரம் என குறிப்பிட்டப்பட்டு இருக்கும்’
கோள் தெங்கின் குலை வாழை ,,, ஒலி தெங்கின் இமிழ் மருதின்... என்றெல்லாம் தென்னை குறிப்பிடப்படுகிறது.. எனவே தேங்காய் என்பது வந்தேறி கிடையாது
தென்னை + காய் = தேங்காய்
தென்னை + பழம் = தெங்கம்பழம்
நாய் பெற்ற தெங்கம்பழம் என்று பழ மொழி உண்டு’
நாயிடம் தென்னம்பழம் ( தேங்காய்) கிடைத்தால் அதனால் உடைத்து தின்ன முடியாது.. பிறர்க்கும் கொடுக்காது என்பது இதன் பொருள்
பழம் என்பதை கனிந்த வடிவில் பார்த்து பழகியதால் , தென்னம்பழம் என சொல்வது மறைந்து தேங்காய் என்றே சொல்கிறோம்.
ஆக தேங்காய் என்பது தமிழக மரம்தான் என்பதில் நினைவில் கொள்க
சமஸ்கிருத , ஹிந்தி , ஆங்கில அறிஞர்களிடம் இருந்து தமிழ்ப்பெருமையை நாம் காத்துக்கொள்ளலாம். தமிழறிஞர்களிடம் இருந்து தமிழைக்காப்பதுதான் பெரிய சவால்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]