டெல்லிக்கு ஒரு வேலை விஷயமாக சக அலுவலக நண்பருடன் சென்றிருந்தேன்
எனக்கும் அவருக்கும் இந்தி தெரியாது
ரயிலினின்று இறங்கி ஒருவரிடம் வழி கேட்க வேண்டியிருந்தது
எனது சகா தனது ஆங்கிலப்புலமையைக் காட்டி ஆங்கிலத்தில் வழி கேட்டார்.
டெல்லிக்காரர் புரியாமல் விழித்தார். நான் இந்தி கலந்து தமிழில் கேட்டேன். அவரும் ஏதோ பதிலளித்தார். வழி புரிந்து விட்டது
என்ன தமாஷ் என்றால் எனக்கும் அவருக்கும் இந்தி தாய் மொழி கிடையாது.
வட இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. உயர்வர்க்கம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டாலும் சராசரி மக்களின் இணைப்பு மொழியாக உள்ளது.
மோடி , காந்தி என பலருக்கு தாய்மொழி ஹிந்தி கிடையாது . ஆனால் வட இந்தியாவில் ஒரு சாமன்யனிடம் ஆங்கிலம் பேசினால் காமெடியாக இருக்கும் என்பதால் இந்தியை ஏற்கின்றனர்
டெல்லி , ஹரியானா , ராஜஸ்தான் , அஸ்ஸாம் , பீகார் , மகாராஷ்ட்ரா என பல இடங்களிலும் இந்தியை வைத்து ஒரு சாமான்யனிடம் உரையாடிவிட முடியும்
தமிழ் நாட்டில் இப்படி மாநிலங்களுக்கிடையேயான பயணம் குறைவு என்பதால் நமக்கு ஒமெரு
பொது இந்திய மொழியின் அவசியம் ஏற்படவில்லை
ஆனால் தென் மாநிலங்களிடையே பயணம் என்றால் , ஒரு சாமான்யனிடம் ஆங்கிலம் பேசுவது எவ்வளவு காமெடியோ அதே நிலைதான் ஹிந்திக்கும்
இரண்டுமே தென்னகத்துக்கு அந்நிய மொழிகளே.
இது வட இந்தியர்களுக்குப் புரிவதில்லை
ஆங்கிலத்தை வைத்து சமாளிக்கலாம் என்ற நம் ஆட்கள் கருத்து முட்டாள்தனமானது. வட இந்தியா போல தென்னக மக்களும் தமக்குள் ஹிந்தி பேசுவார்கள் என்ற வட இந்தியர்கள் கருத்தும் முட்டாள்தனமானது
உலகோடு உறவாட ஆங்கிலம் , நமக்குள் உரையாட தாய்மொழி , இதைத்தவிர இன்னும் இரு இந்திய மொழிகளும் , ஒரு அயல்தேச மொழியும் தெரிந்திருப்பதுதான் நம்மை தன்னம்பிக்கை மிகுந்த முழு மனிதனாக்கும்
பணக்கார மாணவர்களுக்கு இது கிடைக்கிறது
ஏழை மாணவர்கள் வாழ்வில்தான் பலரும் விளையாடுகிறார்கள்
இன்ன மொழி படி என கட்டாயப்படுத்தாமல் , தனியார் பள்ளிகள் பாணியில் மாணவரே அவரவர்க்குத் தேவையான மூன்றாவது மொழியைத் தேர்வு செய்ய வழி வகை செய்வதே சமூக நீதி
ஒரு ஆசிரியராக இதை 100 சதம் ஆதரிக்கிறேன்.
ReplyDeleteஉங்களைப் போன்ற ஆசிரியர்கள்தான் சாமான்யனின் தற்போதைய நம்பிக்கை
Delete