நீட் தேர்வு நல்லதா கெட்டதா என தெரியவில்லை. உண்மையிலும் கட்சிகளுக்கும் தெளிவில்லை. எனவேதான் வாய்ஜாலம் காட்டுகின்றனவேதவிர , செயலில் எதையும் காட்டுவதில்லை.
ஓகே.. ஒருவேளை நீட் தேர்வு நல்லது,என தெரியவந்தால் யாரைப் பாராட்ட வேண்டும்?
வரலாற்றைப்புரட்டுவோம்
ஆளாளுக்கு மருத்துவக்கல்லூரி நடத்தி சர்ட்டிபிகேட் வழங்கினால் இந்திய டாக்டர்களுக்கு உலகளவில் மதிப்பிருக்காது என்பதற்காக இந்திய,அளவில் ஒரு ஸ்டாண்டர்டை உருவாக்க 2010ல் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி நினைத்தது. அப்போது சுகாதாரத்துறை துணை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன்
இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ கவுன்சில் கெசட்டில் வெளியிட்டுள்ளது
அதன்படி,தேர்வு நடத்த தயாரானபோது காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகள் அதை எதிர்த்தன. கட்டப்பஞ்சாயத்துப்பேசி தேர்வை ஓராண்டு தள்ளி வைத்தனர்
ஆனால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் கோர்ட்டுக்கு சென்று நீட்டுக்கு எதிராக தடையாணை பெற்றனர்
நீட் மரணமுற்றது
இதை எதிர்த்து காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு மேல்முறையீடு செய்து நீட் உயிர்த்தெழ வழி வகுத்தது
இந்த கால கட்டங்களில் ஜெயலலிதா இதை தீவிரமாக எதிர்த்து வந்தார்
ஆனால் மத்தியில் அவருக்கு அப்போது செல்வாக்கு இல்லை
மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக அதை தடுக்க முனையவில்லை.;
மாறாக ஜெயலலிதாவுக்குப் போட்டியாக அவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை விட்டனர்
மத்தியில் அப்போது செல்வாக்கில்லாத ஜெ அறிக்கை விடுவது ஓகே. ஆனால் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திமுக அதை தடுக்க,முயற்சி செய்யாமல் பெயரளவுக்கு அறிக்கை விட்டு காமெடி செய்தது
அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஜெ அப்போதும் நீட்டுக்கு எதிராகவே இருந்தார்.
ஆனால் அவரது உடல்நிலை , அவர் மறைவு , கட்சிக்குழப்பங்கள் போன்றவற்றால் அதிமுகவும் உரிய முறையில் நீட்டை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவில்லை
நீட்டை விதைத்து அதை மரமாக்கிய பெருமை திமுகவுக்கு உண்டு. வளர்ந்த மரத்தை வெட்டத்தயங்கிய பெருமை அதிமுகவுக்கு உண்டு
உண்மையிலேயே எனக்கும் தெரியவில்லை. இந்தப் பிரச்சனை JEE ல் இல்லை. மாணவர்கள் பள்ளிக் கல்வியுடன் மேலதிகமாக ஒரு தனியார் பயிற்சி வகுப்பை நாடவேண்டியதே முதன்மை பிரச்சினையாக நினைக்கிறேன்.
ReplyDelete