மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்கள் தங்கள் மாநில நலனை பாதிப்பதாகக்கூறி அதை எதிர்த்து அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளர். அகாலிதள் கட்சியைச் சேர்ந்தவர் இவர்.
இவர் இடத்தில் நம் கட்சி உறுப்பினர்கள் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் ?
..............
தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாவை அரசு கொண்டு வந்துள்ளதே ?
ஆம். எங்கள் வருத்தத்தை பிரதமரிடம் சொல்லி விட்டோம்
சொன்னது சரி.. ஆனால் தமிழகத்தை அழிக்கும் மசோதாவை நிறைவேற்றி விட்டார்களே ?
ஆம். இது குறித்து கட்சிப் பத்திரிக்கையில் கண்ணீரகவிதை எழுதி இருக்கிறேன் தமிழக நலனில் விட்டுக்கொடுப்பது என்ற பேச்சுக்கு இடமில்லை
அதை எதிர்த்து உங்கள் கட்சி அமைச்சர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வாரா?
அவரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு , யாரை அங்கே அமர்த்தத் துடிக்கிறீர்கள் என எனக்குத் தெரியும்
தமிழர்களை அழித்தாலும் பரவாயில்லை. மத்திய அரசுக்கு ஆதரவை வாபஸ் மாட்டோம் என்பது சரியான நிலைப்பாடா,?
அந்த மசோதாவில் இருந்து தமிழகத்துமட்டும் விலக்கு தேவை என வழக்கு தொடர்ந்திருக்கிறோம். மற்றபடி,ஆதரவை"வாபஸ் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை
( சில ஆண்டுகளுக்குப் பிறகு. விவசாயிகள் தற்கொலை செய்திகள் )
நீங்கள் கொண்டு"வந்த மசோதா விவசாயிகளின் சாவுக்கு காரணமாகிறதே ?
அது நாங்கள்"கொண்டு"வந்ததல்ல. அதை எதிர்த்து அப்போதே கவிதை எழுதியிருக்கிறோம். தமிழகத்துக்கு விலக்கு உண்டு என கோர்ட் உத்தரவு வாங்கினோம்;
அந்த தீர்ப்பு செல்லாது என உங்கள் கூட்டணி கட்சி தீர்ப்பு,வாங்கியபோதுகூட ஆதரவை நீங்கள் விலக்கவில்லையே.
அப்போதைய பிரதமருக்கு நாங்கள் கடிதம் எழுதியதை மறந்துவிட்டீர்களா
தற்போது விவசாயிகள் சாகிறார்களே ?
அதை தடுத்திருக்க வேண்டியது தற்போதைய ஆளும்கட்சிதான்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]