பிஹார் தேர்தலில் பிஜேபி ஐஜத கூட்டணி உறுதியாகியுள்ளது.
இரு கட்சிகளும் சமமான இடங்களில் போட்டியிடுகின்றனர். எந்தக் கட்சி எவ்வளவு இடங்களில் வென்றாலும் அதைப்பொருட்படுத்தாமல் நிதிஷ் குமார்தான் முதல்வர் என அறிவித்துள்ளர்
ராம் விலாஸ் பஸ்வான் கட்சி இந்தக்கூட்டணியில் இல்லை. தனித்துப்போட்டியிடுவதாகவும் பிஜேபி போட்டியிடும் இடங்களில் அவர்களுக்கு ஆதரவு என்றும் அறிவித்துள்ளனர் இதற்கு பதிலுதவியாக தாங்கள் போட்டியிடும் இடங்களில் தமக்கு பிஜேபி ஆதரவளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்
பிஜேபி இதற்கு ஒப்பவில்லை. ஐஜத பிஜேபி கூட்டணி நிதீஷ் தலைமையில் இயங்குகிறது. இதற்கு புறம்பாக ரகசியகூட்டணிக்கு இடமில்லை என தெரிவித்துள்ளது
இப்படி ஒரு சூழலில் பஸ்வான் கட்சியுடன் ரகசிய கூட்டுவைத்து நிதீஷுக்குப்பபதில் தாங்களே முதல்வராக பிஜேபி ஆசைப்படும் என்ற அச்சம் இயல்பானதுதான்
ஆனால் நிதிஷ் எத்தனுக்கு எத்தன். பிஜேபி பஸ்வானுடன் உறவாடினால் அவர் காங்கிரசுடனோ லாலு கட்சியுடனோ உறவாடத் தயங்க மாட்டார்
பல மாநிலங்களில் ஆட்சியைக்கவிழ்த்த பிஜேபியின் விளையாட்டு பிஹாரில் பலிக்கவில்லை
பிகாரில் கட்சித்தாவல்கள் நடந்தன. ஆனால் பிஜேபிக்கு சாதகமாக அல்ல நிதிஷுக்கு சாதகமாக
எனவே நிதிஷின் 50:50 கூட்டணி அவருக்கு சாதகமாகும் வாய்ப்பு அதிகம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]