மதிப்புக்குரிய தினமணி ஆசிரியர் அவர்களுக்கு
தினமணிக்கு என பாரம்பரியம் உண்டு. வலுவான ஆசிரியர் வரிசை உண்டு
தினமணியில் எழுதுவது என்பதை கௌரவமாக நினைப்போர் உண்டு. தினமணியில் எழுதப்படுபவை சிரத்தையுடன் வாசகர்மீதான மரியாதையுடன் எழுதப்படுகின்றன என்ற எண்ணம் வாசகர்களுக்கு உண்டு
ஆனால் தினமணியின் விழுமியஙககள் மீதோ அதன் வாசகர்கள் மீதோ எள்ளளவும் மரியாதை இல்லாத தனது மரியாதை இன்மையை வெளிப்படையாகவும் கூறவும் செய்கிற அபிலாஷ் சந்திரன் என்பவருக்கு தொடர்ந்து ஏழு
ஆண்டுகள் வாய்ப்பளிப்பது விந்தையாக இருக்கிறது
வாங்க இங்க்லீஷ் பேசலாம் தொடரை வேண்டா வெறுப்பாக எழுதுகிறேன் , அதில் தான் புகுத்தும் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு சார்ந்த தகவல்கள் ஆசிரியர் குழுவினருக்குப்புரியவில்லை , கட்சி இதழ்களாக இருந்திருந்தால் புரிந்திருக்கும் , வெகுஜன இதழ் என்பதால் புரியவில்லை , நான் எழுதியதில்லையே கொஞ்சமும் பிடிக்காமல் எழுதுவது இதைத்தான் , ஆங்கிலம் என்பது சாதாரண மொழி என நினைப்பதால் ஆங்கில அறிவு படைத்த நாய் பாத்திரத்தை உருவாக்கி எழுதுகிறேன் அதுவும்
ஆசிரியர் குழுவுக்குப் புரியவில்லை
என்றெல்லாம் தினமணி ஆசிரியர் குழுவை , ஆங்கில ஆர்வம் கொண்டு அந்த தொடரை படிக்கும் வாசகர்களை இழிவு படுத்துகிறார்
அந்த தொடர் எவ்விதத்திலும் தரமானதோ தினமணிக்கு புகழ் சேர்ப்பதோ அல்ல
ஆயினும் இவ்வளவு இழிவுகளைத் தாங்கிக்கொண்டு அவருக்கு வாய்ப்பளிப்பது விந்தையிலும் விந்தை
எத்தனையோ திறமைசாலிகள் , ஆங்கில மொழி மீதும் மொழியியல் மீதும் ஆர்வம் கொண்டவர்கள் , வாசகர்களை மதிப்பவர்கள் நம்மிடம் உண்டு.
ஆனாலும் ஒருவருக்கு விருப்பமில்லாத துறை ஒன்று குறித்து எழுத வைத்து தரமற்ற படைப்பை வழங்குவது இதழியல் தர்மமா என வாசகர்கள் குழம்புகிறார்கள்
அன்புடன்
ஒரு தினமணி வாசகன்
ஏன் இந்த சீற்றம்.
ReplyDelete