ஒரு விஷயத்தில் மேதைமை அடைய 10,000 மணி நேரங்கள் பயிற்சி தேவை என்கிறார் மால்கம் கிளாட்வெல்
எளிமையாக சொல்லவேண்டுமென்றால்
10000 / 24 = கிட்டத்தட்ட 417 நாட்கள் தூங்காமல் சாப்பிடாமல் இரவு பகலாக பயிற்சி எடுக்க வேண்டும். அது சாத்தியமில்லை
தினசரி மூன்று மணி நேரங்கள் வீதம் ஒன்பது வருடங்கள் பயிற்சி எடுத்தால் ஒன்பது வருடங்களில் பத்தாயிரம் மணி நேரம் வந்து விடும்.
அதாவது தனது ஐந்து வயதில் ஒருவன் இசை , கிரிக்கெட் , வணிகம், கல்வி என ஏதேனும் ஒன்றில் ஈடுபடும் சூழல் இருந்தால் பள்ளிப்பருவத்தில் அந்தந்த துறைகளில் பிரகாசிப்பான். ஆசிரியர்கள் கவனிப்பு, புகழ் , தன்னம்பிக்கை , உயரக நட்புசூழல்என நல்ல விஷயங்கள் நடக்கும். பிற்காலத்தில் ஜொலிப்பான்
சற்று தாமதமாக , அதாவது பத்து வயதில் ஈடுபாடு ஆரம்பித்தால் , பயிற்சி செய்யும் காலத்தைப்பொறுத்து , அவனும் சாதனையாளராகலாம்
ஏஆர் ரகுமான் , டெண்டுல்கர் போன்றோரின் குடும்ப சூழல் இந்த பத்தாயிரம் மணி நேரத்தை அவர்களுக்கு அளித்ததை கவனியுங்கள்
ஜெயமோகன் தனது வெகு சின்ன வயதிலேயே புத்தகம் படிக்கும் சூழல் இருந்ததாக சொன்னது நினைவிருக்கலாம்
ஒருவருக்கு 20 வயதில்தான் இந்த ஒன்றில் ஆர்வம் ஏற்படுகிறது , பயிற்சி எடுக்கும் சூழல் அமைகாறது என்றால் இரவுபகலாக கடுமையாக உழைத்து இந்த பத்தாயிரம் இலக்கை அடைதல் வேண்டும்
சாரு நிவேதிதா போன்ற பல எழுத்தாளர்கள் வெறித்தனமான வாசிப்பு மூலம் இந்த இலக்கை அடைந்தனர்
தாமதமாக தமது பயணத்தை தொடங்கி நாற்பது வயதுகளில் இலக்கை அடைந்தோரும் உண்டு ( எம்ஜிஆர் , நடிகர் விக்ரம் சில உதாரணங்கள)
அறுபது வயது வரை பயிற்சி செய்து,, ஓய்வுக்குப்பின் ஜொலிப்போரும் உண்டு
பெரிய சாதனையெல்லாம் வேண்டாம். ஒரு செயலில் நிபுணத்துவம் அடைந்தால் போதும் என்றால் அதற்கு தேவையான காலம் எவ்வளவு ?
நிபுணத்துவத்தின் நான்கு படிக்கட்டுகள் என ஜேம்ஸ் ஆலன் இப்படி சொல்கிறார்
1 பிடிவாதம் 2 தீவிர ஈடுபாடு 3 ஈடுபாடு மறைதல் 4 ஓய்வு
முதலில் ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து அதில் ஈடுபட வேண்டும். மனம் அதில் ஈடுபடாமல் முரண்டு பிடிக்கும். வெட்டியாக இதில் ஈடுபடுகிறோமோ , நாளைக்கு செய்யலாமே என்றெல்லாம் தோன்றும் ஆனால் பிடிவாதமாக அதில் இருக்க வேண்டும் இது முதல் நிலை
அதன் பின் மனம் சற்று அடங்கும். அந்த செயலை அழகாக எளிதாக செய்ய மனமே யோசனைகள் தர ஆரம்பிக்கும் . இந்த ஈடுபாடு இரண்டாம் நிலை
சைக்கிள் , கார் , பைக் போன்றவை நன்கு பழகியபின் கவனமே இல்லாமல்கூட அவற்றை இயக்க முடியும். ஈடுபாடு தேவையற்ற நிலை. இது மூன்றாம் நிலை
கவிதை கதை என நிபுணத்துவம் அடைந்தபின் எழுதவேண்டும் என்ற,முனைப்பு இல்லாதபோதுகூட கற்பனைகள் ஊற்றெடுக்கும். உழைப்பு தேவைப்படாத இந்த நிலை நான்காவது நிலை
முதல் இரண்டு நிலைகளை அடைய 48 நாட்கள் ஆகும்
48 நாட்கள் ஒரு விஷயத்தை இடைவிடாது செய்தால் மனம் அடங்கி , ஒத்துழைக்க,ஆரம்பித்து விடும்
அதற்குப்பிறகு அடுத்த நிலைகளுக்கு செல்வதும் உறுதி . எடுத்துக்கொள்ளும் வேலையைப்பொறுத்து , நான்காம் கட்டத்தை அடையலாம்
48 நாட்கள் தாக்குப்பிடிப்பது முக்கியம்
மிக சரியாக சொன்னீர்கள்...
ReplyDeleteநம் முன்னோர்கள் இதைத்தான் ஒரு மண்டலம்(48நாட்கள்) என்று எந்த ஒரு பயிற்சிக்கும் தொடக்க காலமாக அறிவுரைத்தார்கள் என தெரிகிறது🙏
இன்றுதான் உங்களை ஜெயமோகன் ஐயா அவர்களின் வலைத்தளத்தில் மதாரின் கவிதை நூல் பற்றிய கருத்துரையை படித்தேன்.
ReplyDeleteநான் இந்த வாரம் தான் blogger ஆரம்பித்துள்ளேன்.
தங்களின் கனிவான ஆலோசனைகளை கோருகிறேன்.