அறிவியலின் சுவாரஸ்யம் என்னவென்றால் சில அடிப்படையான விஷயங்கள்கூட நமக்குத் தெரியாது. அது தெரியாது என்பதே எப்போதாவதுதான் தெரியும்
உதாரணமாக தண்ணீர் எந்த வெப்பநிலையில் ஆவியாகும் ?
பலர் 100 டிகிரி செல்சியஸ் என்பர்.
கொதிநிலை என்பது வேறு , ஆவியாதல் என்பது வேறு
தண்ணீர் 100 டிகிரியில் கொதிக்க ஆரம்பிக்கும்,,கொதித்து ஆவியாகும் அதற்குமேல் என்னதான் சூடாக்கினாலும் வெப்பநிலை உயராது. ( மலைகளில் இதை விட குறைந்த வெப்பநிலையில் கொதிக்க ஆரம்பிக்கும். சாதாரண வளி மண்டல அழுத்தத்தைவிட அதிக அழுத்தம் இருந்தால் 100 டிகிரியைவிட அதிக வெப்பநிலையில் கொதிக்கும் − உதாரணம், , பிரஷர் குக்கர் 120 டிகிரி வரை தண்ணீர் தாக்குப்பிடிக்கும்)
ஆனால் ஆவியாதலுக்கு அவ்வளவு வெப்பம் தேவையில்லை.. கொதிக்காமலேயேகூட தண்ணீர் ஆவியாகலாம்்
கீழே சிந்திக்கிடக்கும் தண்ணீர் , தரை வெப்பத்தை பயன்படுத்தியேகூட ஆவியாகும். நமது உடல் வெப்பத்தை பயன்படுத்தியேகூட வியர்வை ஆவியாகிவிடும்
காற்றோட்டம் , தண்ணீரின் பரப்பளவு ,காற்றின் ஈரப்பதம் , வெப்பம் ஆகியவை ஆவியாதலை தீர்மானிக்கினறன
மின்விசிறி சுழன்றால் துணி எளிதில் உலர்கிறது. காரணம் காற்றோட்டம்
ஒரு குவளையில் இருக்கும் நீர் ஆவியாவதற்கு பல நாட்கள் ஆகும். அதே தரையில் கொட்டினால் ( மண் தரை அல்ல ) உடனே உலரும். காரணம் பரப்பளவு
மழைக்காலங்களில் துணி உலர அதிக நேரம் ஆகிறது. காரணம் காற்றின் ஈரப்பதம்
வெயிலில் உலர்த்தினால் அந்த வெப்பத்தில் விரைவாக உலர்கிறது
கொதிநிலை , ஆவியாதலுக்கு இடையேயான வித்தியாசத்தை குழந்தைகளுடன் பேசுங்கள்;
கொதிக்கும்போது ஆவியாகும் ஆனால் அனைத்து ஆவியாதலுக்கும் கொதிப்பு தேவையில்லை
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]