நித்யானந்தா ஒரு காலத்தில் மீடியாவின் டார்லிங் ஆக இருந்தார். அனைத்து பத்திரிக்கைகளிலும் அவரது கட்டுரைகள் அல்லது செய்திகள் வரும்.
விஜய் டிவியில் காலை எட்டுமணிக்கு அவரது சொற்பொழிவு ஒளிபரப்பாகும். அலுவலகத்துக்கு லேட்டாய்ப் போய்த் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என அந்த சொற்பொழிவை கேட்டு விட்டுதான் கிளம்புவேன்
பிறகு சர்ச்சை கிளம்பியதும் ஊடகங்கள் அவரை கைவிட்டன. நாம் பாரக்கப்போவது இதுவல்ல.
மீடியாவில் அவர் பரபரப்பாக இருந்தபோது அவர் எழுதிய கட்டுரை ஒன்றை வாசித்தேன்.;
அது எனக்கு மிகவும் உதவியது
ஒருவன் கடற்கரையில் அமர்ந்தபடி பொழுதுபோக்கிக் கொண்டு இருந்தான். விளையாட்டாக , பக்கத்தில் இருந்த கூழாங்கற்களை கடலில் வீசியபடி இருந்தான்.
அரைமணி நேரம் ஆனது. பக்கத்தில் இருந்த கூழாங்கற்கள் காலியாகும் நிலையில் கடைசி கற்களை கவனித்து அதிர்ச்சி அடைந்தான். காரணம் , அவை சாதாரண கற்கள் அல்ல . விலை உயர்ந்த வைரக்கற்கள். அதை அவன் மூளை உணர்ந்தாலும் , அரைமணி நேர பழக்கம் காரணமாக கை அனிச்சையாக மேலும் இரண்டை கடலுக்குள் எறிந்தது.
எஞ்சி இருந்த கடைசிக்கல்லை விரக்தியாகப் பார்த்தான். பெரிய பொக்கிஷத்தையே அல்லவா தொலைத்து விட்டோம் என நினைத்தபடி அதையும் கடலுக்குள் எறிந்து விட்டு கிளம்பினான்.
இதுதான் நித்யானந்தர் சொன்ன கதை
இதன்பிறகு அவர் சொல்லும் விளக்கம் சுவாரஸ்யம்
விழிப்புணர்வு இல்லாமையால் அவன் வைரங்களை வீசினான். ஆனால் விழிப்புணர்வு வந்தபிறகாவது நிதானித்து இருந்தால் கடைசி ஒரு கல் அவனுக்கு கிடைத்திருக்கும். அந்த ஒரு கல் அவன் வாழ்க்கைக்கு போதுமானது.
போனதைப்பற்றி கவலைப்படாமல் , கடைசியாக கிடைத்த ஒரு கல்லை வைத்து அவன் ராஜாவாக வாழ்ந்திருக்க முடியும் என்பது அவரது விளக்கம்;
காலம் கடந்து விட்டது என்ற எண்ணமே பல பொக்கிஷங்களை நம்மிடம் இருந்து பறித்து விடுகிறது
நடைப்பயிற்சி நல்லதுதான் சார் , இதெல்லாம் சின்ன வயசுலயே தெரிஞ்சு இருந்தா நல்லா இருந்திருக்கும் , பள்ளிப்பருவத்திலேயே பேச்சுக்கலை ஆர்வம் வந்து இருந்தா கலக்கி இருக்கலாம் , நாலு கழுத வயசாய்ருச்சு இப்ப ஆர்வம் வந்து என்ன பண்றது என நினைத்து பல நல்லவற்றை நாம் பின்பற்றுவதே இல்லை
நல்லவற்றை தொடங்க இப்படி நினைக்க வேண்டியதே இல்லை. தினமணி ஆசிரியர் ஏ என் சிவராமன் தனது வயதான காலத்திலும் புதிய மொழிகளை கற்றுக்கொள்ள முயன்றார். இதெல்லாம் சின்ன,வயசில் செஞ்சிருக்க வேண்டியதுஎன நினைக்கவில்லை
கல்லூரி முதலாண்டு படிக்கும்போது , கை எழுத்துப் பயிற்சி செய்து எழுத்தை அழகாக்க சோம்பலாக இருக்கும். இதெல்லாம் ஸ்கூல் டேய்ஸ்ல செஞ்சிருக்க வேண்டியது என நினைப்போம்
அந்த நினைப்பு கூடாது. எப்போதும் எதையும் கற்கலாம். புதிதாக ஆரம்பிக்கலாம்
ஒரே மாதிரி வாழாமல் புதிதுபுதிதாக கற்பது வாழ்க்கையை உற்சாகமாக ஆக்கும்
எப்போது கேட்டாலும் ஏதாவது ஒன்றை ஆரம்பித்து சில நாட்கள் ஆகி இருப்பது நல்லது
நித்யானந்தா பற்றி வெறுமனே மீடியா பார்வையில் கருப்பு வெள்ளையாக அல்லாமல் வேறொரு கோணத்தில் எழுதுவதே உங்களின் சிறப்பியல்பு.
ReplyDelete