அ இ அ தி முவின் நட்சத்திர பேச்சாளராகவும் , எம ஜி ஆரின் நம்பிக்கைக்கு உரிய நண்பராகவும் திகழ்ந்தவர் கவர்ச்சி வில்லன் என அழைக்கப்பட்ட கண்ணன்.
மதுரை வீரனில் ஆரம்பித்து எம்ஜிஆரின் கடைசிப்படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை பல எம்ஜிஆர் படங்களில் நடித்துள்ளார்.
எண்பதுகளிலும் ரஜினி , விஜயகாந்த் , சத்யராஜ் என பலரது படங்களில் நடித்துள்ளார்
என்ன கொடுமை என்றால் , டிவிக்களில் இவர் நடித்த படங்களைப்பற்றி அறிவிக்கையில் இவர் பெயரைச் சொல்வதில்லை. மற்றும் பலர் என்பதில் இவரை அடக்கி விடுகிறார்கள்
மதுரை வீரன் படப்பிடிப்பின்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவரின் கம்பீரமான தோற்றத்தைப்பார்த்து எம் ஜி ஆர் அழைத்து நடிப்பு சான்ஸ் அளித்தார். கண்ணன் என பெயரும் சூட்டினார்.
அவரது கம்பீரமான தோற்றத்தால் கவர்ச்சி வில்லன் என அழைக்கப்படலானார்;
சின்ன வயதிலேயே எம்ஜிஆர் ரசிகரான இவர் அரசியலிலும் எம்ஜிஆர்கூடவே இருந்தார். ரசிகர் மன்றத்தில் முக்கிய பொறுப்புகள் வகித்தார்
அஇஅதிமுக பேச்சாளராக இருந்த இவர் அதிமுக மேடையிலேயே உயிரை இழந்தது குறிப்பிடத்தக்கது
மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். பிறகு சிகிச்சை பலனின்றி காலமானார்
இவரை அதிமுக பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
வரலாற்று ஆவணமாக திகழத்தக்க இவரது அரிய புகைப்படங்கள் ( எம்ஜிஆர் கலைஞர் அண்ணா போன்ற தலைவர்களுடன் எடுத்தவை ) ஷீல்டுகள் போன்றவற்றை இவரது குடும்பத்தினர் எடைக்குப் போட்டுவிட்டனர்
இவரது மகனான மகேஸ்வரனும் திரைத்துறையில் மோதிப்பார்த்தவர்தான். இவருக்கு வெற்றி வசப்படவில்லை
இது போன்ற கசப்பான அனுபவங்களால் புடம்போடப்பட்டவராக கண்ணனின் பேரன் பாலாஜி மகேஸ்வர் திகழ்கிறார்.
இவர் சிறந்த போட்டோகிராபர். குறிப்பாக அழிந்து,வரும் அல்லது அழிந்த திரையரங்குகளின் அரிய புகைப்படங்கள் எடுத்து வைத்துள்ளார்
அந்த புகைப்படக்கண்காட்சியை சில ஆண்டுகள் முன் சென்னையில் பார்வையிட்டேன்
தாத்தா , மகன் , பேரன் என மூன்று தலைமுறைகளாக சினிமா மீதான இந்த passion வியக்கத்தக்க ஒன்று
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]