திரைப்படம் என்பதை மலிவான ரசனைக்கு வடிகாலாக பலர் பயன்படுத்தும் நிலையில் அது கலை வடிவின் ஓர் உச்சம் என்ற புரிதல் சிலருக்கே உண்டு.
இசை , கவிதை , சிறுகதை , நாவல் , ஓவியம் , புகைப்படக்கலை என அனைத்து வகை கலைகளும் சங்கமமாகும் அரும்பெரும் கலை வடிவம் திரைப்படம்.
அந்த வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு செய்து வரும் பணிகள் மகத்தானவை
ஏராளமான குறும்படங்கள் , ஆவணப்படங்கள் , உலகத்திரைப்படங்கள் , அரிய இந்திய திரைப்படங்கள் , தமிழ் சாதனைப்படங்கள் என ஏராளமான திரையிடல்கள் மூலம் ரசனையை உயர்த்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கியப் பங்கு உண்டு
ஜெய்பீம் போன்ற படங்கள் தமிழில் உருவாக முடியும் என்ற லட்சியக்கனவு விதையை பல ஆண்டுகள்,முன்பே விதைத்த இயக்கம் தமிழ் ஸ்டுடியோதான்
வடபழனி, பேருந்து நிலையம்,அருகே,இயங்கி,வந்த ப்யூர் சினிமா அலுவலகம் சினிமா ஆர்வலர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தது.. அங்கு வந்து தம்மை மெருகேற்றிக் கொண்ட பலர் இன்று திரைவானில் ஜொலிக்கின்றன
அலுவலகம் நுழைந்தால் திரைப்டக்கல்வி பயிலும் படிமை மாணவர்களால், பாலின சாதி மத அடையாளங்களற்ற இளைஞர்களால் அந்த இடமே
அறிவிப்பிழம்பால் ஒளிர்ந்து கொண்டிருக்கும்
பெளர்ணமி இரவு திரையிடல்களை இரவு விவாதங்களை யாரால் மறக்க முடியும்
ப்யூர் சினிமா புத்தக அங்காடி தற்போது வளசரவாக்கத்தில் இயங்கி வருகிறது. கீழ்த்தளம் , நெரிசல் இல்லாத இடம் போன்ற அனுகூலகங்களுடன் அற்புதமாக தன் பயணத்தை தொடர்கிறது ப்யூர் சினிமா புத்தக அங்காடி.
தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வெளிவரும் படச்சுருள் மாத இதழ் தமிழ் இதழியல் வரலாறில் என்றும் நிலைத்திருக்கும்.
இன்று 14வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த,அமைப்பு பல்லாண்டுகள் பயணித்து சாதனைகள் புரிய வாழ்த்துகள்
வாழ்த்துகளை விட நமது சார்பில் வருங்கால தலைமுறைகள் சார்பில் நன்றி என்பதே பொருத்தம்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]