ஒரு வேளையாக பாரிமுனை சென்றிருந்தேன்.
வழக்கத்துக்கு மாறாக ஆறரை மணி இருள் நான்கு மணிக்கே நிலவியது.
அடிக்கடி மழையைப் பாரத்த அனுபவம் இருப்பவர்கள் இது கனமழையின் அறிகுறி என அறிந்திருப்பர்
நம்மைப் பொருத்தவரை எந்த மழையென்றாலும் அரை மணி நேரத்தில் நின்று விடும் என நினைப்பவர்கள் எனவே மழை சிந்தனை சற்றும் இன்றி சுற்றிக் கொண்டிருந்தேன்
அவ்வப்போது மழை வருவதும்நிற்பதுமாக இருந்தது.
முன்பெல்லாம் மழை ஒரு பிரச்சனையாகவே இருக்காது. நனைவது பிடிக்கும் ஆனால் எப்போது செல்போன் வந்ததோ எப்போது பைக் வந்ததோ அப்போதுதான் மழை யோசிக்க வைக்க ஆரம்பித்தது. மழையால் பழுதடைந்த போன் , பைக் நின்று போய் அரை கிமீநடை என பல அனுபவங்கள்
நல்லவேளையாக பைக்கில் வரவில்லை செல்போனை சேஃப் செய்து விட்டேன் வாட்ச் வேறு அதையும் சேஃப் செய்தேன்
அப்போதுதான் கனமழை ஆரம்பித்தது. சாதா மழை போல் இல்லாமல் மேகத்திலிருந்து தண்ணீர் அருவி போல கொட்டியது
சரி நின்று விடும் என ஒரு கடையோரம் ஒதுங்கினேன். உள்ளே வந்து நில்லுங்க என உபசதித்தார் கடைக்காரர் பரவாயில்லை என வாசலோரம் நின்றேன்
ஒரு குடிப்ரியர் மழையை உற்சாகமாக ரசித்தபடி சாலையிலேயே நீந்தி படுத்து குதித்து விளையாடினார்
மழை மேலும்,மேலும் அதிகரித்தது. சாலையில் தண்ணீர் மட்டம் உயர்வதை காணுவது ஒரு வித திகிலை அளித்தது.
ஆங்காங்கு நின்ற டூவீலர்கள் முக்கால்வாசி அளவு மூழ்கின. சில சரிந்து விழுந்து முழுதும் மூழ்கின.
டூவீலர்கள்என்னென்ன பிரச்சனைகளை சந்திக்ப்போகின்றனவோ எவ்வளவு செலவு வைக்கப்போகின்றனவோ என கவலையாக இருந்தது.
கார்கள் நிலையும் மோசம்தான்
மழை நிற்காது எனப் புரிந்து விட்டது. கடையோரத்தில் உருவாகத்தொடங்கிய நட்பு வட்டத்திடம் விடை பெறறு மழையில் நடக்கலானேன்
தொடை வரை ஓடும் தண்ணீரில் நடப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் "அலை" நடப்பவர்களை தடுமாற வைத்தது
ஒருவர் அந்த மழையிலும் மலை போல நின்று , அப்படிப்போகாதீங்க, பள்ளம் இருக்கு,என பலரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார்
இதுபோன்ற நேரங்களில் வெகு எளிதாக குற்றச் செயல்களை நிறைவேற்ற முடியும் ஆனால் யாருமே அப்படி செய்யவில்லை என்பதுமட்டுமல்ல பிறருக்கு உதவவும் முன்வந்தனர்
ஒரு வழியாக பேருந்தில் ஏறினேன்.
கண்டக்டர் , டீ சாப்பிட்டியா என விசாரித்தார் டிரைவர் . இல்லைணே போயிட்டு சாப்பிடலாம் என்றார் கண்டக்டர்
எப்போ போயி சேரப்போறோம்னு கடவுளுக்குத்தான் தெரியும் முடிஞ்சா டிபன் சாப்பிட்டுட்டு வந்துரு என உரிமையுடன் சொன்னார் ஓட்டுநர்
அவரது தீர்க்கதரிசனமும் , சகஊழியர் மீதான அன்பும் பிறகுதான் புரிந்தது
கிட்டத்தட்ட ஏழு மணி நேர பயணம் !!!
மழையில் நனைந்து கொண்டு இவ்வளவு நேரம் பயணிக்க வேண்டிய டூவிலர்ஸ்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டியவன் , பஸ்ஸில் நிம்மதியாக அமர்ந்திருப்பதே பெரும் பேறாக தோன்றியது
இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கினேன் மழை நிற்கவில்லை
ஆட்டோக்கள் கிடைக்கவில்லை
அப்படியே நனைந்து கொண்டு சென்றிருந்தால் ஆயிரம் இரூந்தால் சாமான்யர்களிடம்தான் உதவும்தன்மை அதிகம் என மேசேஜ் சொல்லியிருப்பேன்
ஆனால் அறிமுகமற்ற ஒருவர்"அவராகவே என்னை அழைத்து
தன் குடையில் அழைத்து வந்து வீட்டருகே விட்டார். சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மேலாளர் என பேச்சுவாக்கில் அறிந்தேன்
மனிதர்களின் நல்ல அம்சங்களை வெளிக்கொணர அவ்வப்போது இப்படி இயற்கை சீறுவது ஒரு வினோதம்தான்