மழைமான் நூல் குறித்த உங்கள் பார்வை ஓரளவுக்கு ஓகே , மேலும் நன்றாக எழுதும் அறிவை தங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை அல்லது பிரபஞ்ச பேரியக்கத்தை வேண்டுகிறேன்
நிற்க , இதே போல இன்னும் ஒரு நாலு நூல்கள் சொல்லுங்களேன் நாங்களும் படிக்கிறோம் என சில நண்பர்கள் கேட்கிறார்கள்
தமிழிலேயே ஆகச்சிறந்த நாலு நூல்கள் நான் படித்ததிலேயே பெஸ்ட் ஃபோர் என்று இல்லாமல் மழை மான் போல ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக அதே சமயம் ஆழமாக யோசிக்க வைக்கும் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்
இந்த எட்டில் நான்கை ஷார்ட் லிஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
இது தர வரிசை அல்ல . ஒரு வசதிக்காக முதலில் ஆங்கில நூல்,, அடுத்து வரும் தமிழ் நூல்களை அவற்றின் தலைப்பின் அடிப்படையில் அகர வரிசையில்...
1 Tuesdays with morris - Mitch Albom
நோய் வாய்ப்பட்டு , கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் தனது பழைய பேராசிரியரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசும் ஒரு ஆவணம் போன்ற நூல் அது. மரணத்தையும் வாழ்வையும் ஒரே நேரத்தில் பார்க்கும் என் அனுபவம் உனக்கு உதவக்கூடும் என உற்சாகமாக தனது பார்வையைப் பகிர்நது கொள்கிறார் பேராசிரியர். பல்வேறு விவகாரங்கள் குறித்த ஆழமான பார்வைகள்
2 அஞ்சுவண்ணம் தெரு − தோப்பில் முகமது மீரான்
இஸ்லாம் குறித்து எதிர்மறையான நூல்கள் உண்டு இஸ்லாமுக்கு ஆதரவான பிரச்சார நூல்களும் உண்டு
இஸ்லாமிய கலாச்சாரத்தை , அழகியலை , தொன்மங்களை , பொது சமூகத்துக்கு அது வழங்கும் அறிவுசார் கொடையை , கலைச்சொற்களை பதிவு செய்யும் புனைவுகள் குறைவுதான். அஞ்சுவண்ணம் தெரு வெகு அற்புதமாக"இப்பணியை இலக்கியரீதியாக செய்கிறது. இஸ்லாமிய,பின்னணி என்றால் பொது,மானுடனின் இதயத்தை நோக்கிப்,பேசும் நாவல்
3,இரவு −ஜெயமோகன்
பகலில் உறங்கி இரவில் மட்டுமே விழித்திருக்கும் ஒரு குழுவினர் அவர்களது உலகம் என வித்தியாசமான ஒரு களத்தில் அமைந்த நாவல். நமது மனதின் இருளான பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது
4,ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு…
ஜீவ கரிகாலன்
இதை வெளிநாட்டு கதைகளின் மொழி பெயர்ப்பு என சொன்னால் நம்பி விடுவோம் அந்த அளவுக்கு புத்தம்புதிய கதைசொல்லல் யுக்திகள் , கச்சாப்பொருட்கள் என அசத்தும் தொகுப்பு. நூலின் எடை , கட்டமைப்பு,"வடிவம் போன்றவையும் உலகத்தரம்
5 கர்னலின் நாற்காலி - எஸ் ரா
கொரோனா பொதுமுடக்க காலத்தை அர்த்தபூர்வமாக மாற்றியதில் எஸ்ராமகிருஷ்ணனின் குறுங்கதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. மரணம் வந்தால் வரட்டுமே இந்த,குறுங்கதைகளை படிக்கும்வரை வாழ்ந்தோமே அதுவே போதும் என நிறைவளிக்கும் வகையில் அவர் நூறு குறுங்கதைகள் எழுதினார். பல்வேறு கருப்பொருட்கள் பல்வேறு நடை என,மாயாஜாலம் காட்டினார் அக்கதைகளின் தொகுப்பு
6 கன்னி, பிரான்சிஸ் கிருபா
காதல் என்பதன் பித்து நிலையை , ஒரு பெண் என்பவள் ஆணுக்கு எப்படி பொருள் படுகிறாள் என்பதை ஒரு வித பித்தேறிய கவிதை நடையில்,சொல்லும் நாவல்
7 நாடோடியின் நாட்குறிப்புகள் − சாரு நிவேதிதா
மின்னம்பலம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையேயான இடைவெளியை அழிக்கக்கூடிய பின் நவீனத்துவ எழுத்தாளர் சாரு. எனவே இவரது பல கட்டுரைகளில் புனைவுத்தன்மை இருக்கும். அந்தந்த கால கட்டத்தை ஆவணப்படுத்தினாலும் என்றென்றும் relevant ஆக இருக்க்கூடிய கட்டுரைகளின் தொகுப்பு
8 பெத்தவன் இமையம்
ஆணவக் கொலை என பேப்பரில் படிக்கிறோம் அது போன்ற ஒரு தருணத்தை இரு தரப்பினரின் பார்வையிலும் சொல்லக்கூடிய நாவல்.
இதை இமையம் தவிர வேறு யாரும் எழுதிவிட்டு உயிருடன் நடமாடி இருக்க,முடியாது
அந்தவகையில் பார்த்தால் இது போன்ற நாவல் வந்ததும் இல்லை இனியும் வர முடியாது
Short and sweet என்பதை மனதுக்கிணிய குறுநாவல எனலாமா?
ReplyDeleteஉண்மைதான் மனதுக்கினிய குறுநூல்கள் , சிந்தைக்கினிய சிறு நூல்கள் என்றெல்லாம் சொல்லலாம்தான். சொல்லி சொல்லி அவற்றை பழக்கப்படுத்த வேண்டும்
Delete