உலகில் அறவுணர்வு என ஒன்று இருக்கிறதா என்பது புதிரான ஒன்று;
ரயிலில் பயணிக்கிறோம். ஒரு,நிமிஷம் சூட்கேசை பார்த்துக்கோங்க என யாரோ ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு டீ,அருந்த செல்கிறோம்.
99% வாய்ப்புகளில் நமது நம்பிக்கை காப்பாற்றப்படுகிறது. நமது சூட்கேஸ் பத்திரமாக இருக்கிறது;
இதற்கு நேர்மாறானவையும் உண்டு. நாம் மதிக்கக்கூடிய உயிரைத்தர சித்தமாக இருக்கக்கூடிய ஒரு தண்பரிடம் திருமணம் , வீடு இடம் பாரத்தல் போன்ற பொறுப்புகளை ஒப்படைக்கிறோம். அவர் தனக்கு எது நல்லது என யோசித்து நமக்குப்பொருத்தமில்லா ஒரு முடிவை நம் மேல் சுமத்தி விடுகிறார்.
இந்த இரண்டையும் நம்மில் பெரும்பான்மையினோர் அனுபவித்து,இருப்போம்
அறவுணர்வு , நீதி என்பது உலகில் இருக்கிறதா என்ற கேள்வியை வரலாற்றுப்பின்புலத்தில் அலசுகிறது இடக்கை நாவல்
அது என்ன இடக்கை ?
வலது கை இடது கை என இரண்டுமே நமக்குத் தேவையானவை. இரண்டும் சரியாக செயல்பட்டால்தான் நமது வேலைகளை சரிவரச் செய்ய முடியும்
ஆனால் இடதுகை விருதுகள் , அவனை எல்லாம் லெஃப்ட் ஹாண்ட்ல டீல் பண்ணனும் , அல்லக்கை , நொட்டாங்கை , இடது கால் முதலில் வச்சுறாதே என ஏன் இடதுகைப்பழக்கத்தினர் இழிவு செய்யப்படுகின்றனர் ?
பூட்டு சாவி , சவரக்கருவிகள் , கதவு , வாகனங்கள் , டைப்ரைட்டர்கள் என ஏன் எவையுமே இடதுகையினரைப் பொருட்டாக நினைக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளன ?
எல்லா தகுதிகளும் கொண்ட இடக்கை எப்படி தேவையின்றி சமூகத்தால் புறக்கணிப்புக்கு உள்ளாகிறதோ அதுபோல பால்ரீதியாக , மதரீதியாக , சாதிரீதியாக , வர்க்க ரீதியாக சமூகம் தொடர்ந்து இப்புறக்கணிப்புகளை செய்து கொண்டேதான் வருகிறது.
நீதியுணர்வு, இடக்கை புறக்கணிப்பு
என்ற இரண்டையும் ஒருவித மாயாஜால கவிதை நடையில் பேசும் நாவல்தான் எஸ் ராமகிருஷ்ணனின் இடக்கை
நீதி கிடைப்பது யாருக்குமே கடினமாகத்தான் இருக்கிறது
ஒரு தந்தைக்கு இரு மகன்கள். ஒரு,பையன் தந்தை மீது எல்லையற்ற மரியாதையும் அன்பும் கொண்டவன்
இன்னொருவன் தந்தையை,மதிப்பதில்லை எல்லாவித அயோக்கித்தனங்களும் செய்கிறான் கடைசியில் மனம் திருந்தி தந்தையிடம் வருகிறான்
தந்தை அந்த வருகையை பிரமாண்டமாக கொண்டாடுகிறார். அறுசுவை விருந்துகள் கலைநிகழ்ச்சிகள் மகனுக்குப் புத்தாடைகள் என அம்ர்க்களம்
நல்ல மகன் வருத்தமாய் கேட்கிறான் "எனக்கு நீங்கள் இப்படி சிறப்புகளை செய்ததே இல்லையே ?
தந்தை சொன்னார்
நீ எப்பவும் என்னுடன் இருக்கிறாய் அதில் எனக்கு பெரிய கிக் இல்லை . வழிதவறிப்போய் திரும்பி வந்தானே அதில்தான் கிக் அதிகம்
தந்தை சொல்வது தர்க்கப்பூர்வ யதார்த்தம்தான் ஆனால் தனக்கு அநீதி நிகழ்ந்ததாக ஒரு மகன் நினைக்கக்கூடும் அல்லவா
ஒரு கற்பனை உதாரணம்..
தனது தலைவரின் செல்வாக்கை உணராமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்காக தொண்டன் தீக்குளிக்கிறான் அவன் குடும்பம் திணறுகிறது
இதற்கிடையில் தலைமை தவறை உணர்ந்து தலைவருடன் இணக்கமாகி அவருக்குப் பதவிகள் தருகிறது. தலைமைக்கு விசுவாசமாக இருப்பதுதான் தன் கடைமை என்பதை தலைவர் உணர்கிறார்;;
அத்தலைவருக்கு நீதி கிடைத்தது..
தீக்குளித்த தொண்டனுக்கு?
நீதி , அறம் போன்றவை இன்றி மனித குலம் தழைக்க முடியாது,, ஆனால் அறம் நீதி போன்றவற்றை வரையறுத்தல் சிரமம்
தனது ,கணவன்,தூமகேது சிறைக்கு சென்று விட்டதால் தன் புதல்வர்களுடன்,கஷ்டப்படுகிறாள் அவனது மனைவி நளா.
நாயைப்பிடித்துக் கொடுத்தால் காசு கிடைக்கும் என்ற வாய்ப்பு கிடைக்கும்போது அந்த காசுக்கு ஆசைப்படாமல் நாய்க்கு அடைக்கலம் தரும் மனநிலை கொண்டவள் அவள்
அப்படிப்பட்ட அவள் , கணவனின் தந்தையை அநாதரவாக வீட்டில் விட்டுவிட்டு குழந்தைகளுடன் ஊரை விட்டு ஓடி விடுகிறாள்.
காரணம் அங்கு இருந்தால் , அவள் கைதாகி குழந்தைகள் அனாதைகளாகி விடும். முதிய மாமனாரை அழைத்துக்கொண்டு ஓடுவதும் சாத்தியமில்ல
அந்த சூழலில் அந்த முதியவரை நிர்க்கதியாக விட்டுச் செல்வதுதான் அவளது,அறமாக இருக்க முடியும்.
அந்த முதியவருக்கு அநீதி இழைக்கப்படுகிறதே என யாரிடம் கேட்க முடியும் ?
வாரிசுரிமைப்,போட்டியில் மக்கள்,ஆதரவு,மிக்க தனது சகோதரன் தாராவை கொன்று ஆட்சிக்கு வருகிறார்,ஒளரங்கசீப். இதுபோல அரசகுடும்ப, அநீதிகளுக்கு அதிக,முக்கியந்துவம் தராமல் வரலாற்றில் பதிவாக எளியவர்களுக்கு இழைக்கப்படும் கண்ணீரை , அவர்களுக்கு கிடைக்காத நீதியைப் பற்றி பேசுவதுதான் இடக்கை நாவலின் சிறப்பு
இன்னொரு சுவாரஸ்யம்.. அரச குடும்பம் சாமான்யர்களுக்கு இழைக்கும் அநீதி வழக்கமாக நடப்பது. ஏதாவது ஒரு அபூர்வ கணத்தில் வரலாற்றைத்திசை திருப்பும் ஒரு சிறிய கருவியாக ஒரு சாமான்யனை காலம் தேர்ந்தெடுக்கக்கூடும் அப்படி ஒரு தருணத்தில் ஒரு சாமான்யன் இழைக்கும் அநீதியும் அழகாக பதிவாகியுள்ளது.
குதிரைகள் , யானைகள் , படைகள் என பிரமாண்டங்கள் பேசப்படும் அளவுக்கு ஒரு புழு , தன்னைக் கடந்து செல்லும் படகைப் பாரக்கும் நீர்ப்பூச்சி போன்றவையும் மனதில் நிற்கும்படி நாவலில் வருகின்றன
பேரரசர் ஒளரங்கசீப் இறந்ததும் அவருக்கு மகளாக , தாயாக , அடிமையாக , உயிலில் இடம்பெறும் அளவு அவர் மனதில் இடம்பெற்றிருந்த அஜ்யா என்ற திருநங்கை கைது செய்யப்படுகிறாள். அரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லாத தூமகேது எனும் தாழ்த்தப்பட்ட வஞ்சிக்கப்பட பிரிவைச் சேர்ந்த ஒருவன் கைதாகிறான்
தவறே செய்யாத இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிதான் கதையா என்றால் இல்லை
சாதீய ரீதியாக பால் ரீதியாக இடது கையாக நினைக்கப்படும் இவர்களது கதை மட்டுமல்ல
பொதுவாக ஆணை வலது கையாகவும் பெண்ணை இடது கையாகவும் நினைககும் சமூகத்தில் பேரரசரரின் மகள் ஜெப்புன்னிஷா என்ற கவிஞர் மக்பி , தூமகேதுவின் மனைவி , சற்று நேரமே வந்தாலும் ஒளரங்கசீப்பிடம் விளையாட்டாகப்பேசி அவருக்கு மறக்கமுடியாத ஞானத்தை வழங்கி , தனது அழகிய முகம் யானையால் சிதறிக்கப்பட்டு , பேரரசரின் கடைசித் தருணங்களில் அவரால் நன்றியுடன் நினைக்கப்படும் தாசிப்பெண் அனார் என பெண்களின் ஆளுமையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும்கூட
தனித்தனி சிறுகதைகளாக விரிவாக்கம் செய்யக்கூடிய அளவுக்கு செறிவும் அழகும்கூட பல்வேறு பாத்திரங்கள்
தனது வலது கையை வெறுக்கும் மனிதன் , இரட்டைத் தலை அரசன் , குள்ளமான தாசிப்பெண் , வசீகர ஓவிய ஆற்றல் கொண்டவன் , கண் தெரியாத இசைஞன் , வெறும் விளையாட்டுக்காக கொள்ளை அடிக்கும்,அபூர்வ இன மக்கள் , திருட்டை ஒரு அறம்மிக்க தொழிலாக கருதி அதற்குரிய அறத்துடன் அத்தொழிலை நடத்தும் ஆடு திருடன் , யார் ஆட்சியிலும் தமது நலனைப்,பேணிக் கொள்ளும் பண்டிதர்கள் , ஒளரங்கசீப்பின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயன்று உயிர்த்தியாகம் செய்யும் திருநங்கை , நான் முதலை மாதிரி தண்ணீர்தான் என பலம் என மதுக்கடையில் ரகளை செய்பவன் , தனது பூனைக்கு எலி என பெயரிடம் ஒரு கலைஞன் , அந்தப் பூனை,
சமாதிப் பிளந்து வெளிவரும் மனிதக்கை எலும்பு, விஷமேற்றும் இசை என பக்கத்துக்குப் பக்கம் வண்ணமயமான பாத்திரங்கள்
நீதியை அழிப்பதே தமது வாழ்க்கை எனக் கொண்டவர்கள் பிஷாடனன் , ரெமியஸ் , பண்டிதர்கள் , விஸ்வாம்பரன் என்ற சாதி வெறியன்
நீதிக்கும் அநீதிக்கும் இடையே சிக்கி அல்லாடுபவர்கள் நளா , ஒளரங்கசீப் , சம்பு போன்றோர்
தமக்கான அறத்துடன் உறுதியாக,வாழ்ந்து மறைவோர் அஜ்வா , அனார் , பகுத்தறிவு பேசும் ஸச்சல் , சாகும் தருணத்திலும் இளவரசனுக்கான பெட்டியை சம்புவிடம் ஒப்படைக்கும் மர்ம நபர் . அஜ்யாவின்
விருப்பத்திற்கிணங்க பேரரசரின் தொப்பியை உரியவரிடம் அளிக்கும் முயற்சியில் உயிர் துறக்கும் அனுராதா, ஒடுக்கப்பட்டோருக்கு குரல் தரும் சக்ரதார் போன்றோர்
இந்த அறக்குழப்பங்கள் ஏதுமின்றி வாழ்ந்து மறையும் எளிமையாக உடற்பசி , வயிற்றுப்பசி என வாழ்ந்து மறையும் மஞ்சா , காயத்ரி போன்றோர்
நம்மில் பெரும்பாலானோர் இவ்வகையில் ஒன்றாகத்தான் இருப்போம்
இவற்றைக் கடந்த ஒரு பாத்திரமாக இருப்பவன்தான் தூமகேது
இவனும் அறக்குழப்பங்கள் அற்ற அன்றாட தேவைக்கேற்ப வாழும் மனிதனாக இருந்தவன்தான்.
கதைகள் அல்லது எழுத்து இவனுக்கு புதிதாக ஒரு வாழ்க்கை கொடுத்து மீட்சி அளிக்கிறது என்பது இந்நாவலில் என்னை மிகவும் பாதித்த ஒன்று
பேரரசரின் தொப்பி கடைசியில் இவனைத்தான் வந்தடைகிறது left hand has the last laugh
தூமகேது , வசீகர ஓவியன் நியோகி, அபூர்வ சக்தி கொண்ட சிகிரி இன மக்கள் ஆகியோர் இடது கையாளர்கள் என்பது நல்லதொரு குறியீடு.
வற்புறுத்தலுக்காக இடது வகை , வலிமைக்காக இடது கை , தந்திரமான இடது கை என இடக்கைகளுக்குள் சுவையான சில பிரிவுகள்
பல இடங்கள் ஹைக்கூ படிப்பதுபோல இருக்கிறது
ஹைக்கூ கவிதைகளின் கடைசி வரி ட்விஸ்ட்டை கீழக்கண்ட பத்தியில் பாருங்கள்.
1 இன்னும்,சில நாட்கள் உயிர் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கோம்.
2 எல்லாம் அல்லாவின் கருணை என மனதுக்குள் நன்றி கூறிக்கொண்டாள்.
கடைசி வரி
3 உடலில் இருந்து ரத்தம் கொண்டிருந்தது
அதாவது , ஒரு பணக்கார கிழவர் உலக இன்பங்களை துய்க்க மேலும் ஆயுள் கிடைத்திருக்கிறது என நன்றி செலுத்துவது வேறு
சித்திரவதைக்கு உள்ளாகி ரத்தம் சிந்தும்போதும் , கடவுளுக்கு வாழ்க்கைக்கு நன்றி செலுத்துகிறாள் என்பதுதான் அவள் கேரக்டரை உயர்த்துகிறது
நன்றி சகோதரர்களே என நிறைவுடன் தூக்குத்தண்டனை பணியாளர்களிடம் சொல்லி விட்டு விடைபெறும் அவளது மனநிறைவு பெரிய மன்னர்களுக்கும் கிடைப்பதில்லை
தூக்கில் தொங்கப்போகும் கடைசி தருணத்தில் அவளுக்கு எதிர்பாரா அதிர்ஷ்டம்
சாவதற்கு முன் ஒரு நட்சத்திரம்தானே பார்க்க விரும்பினோம் மூன்று பார்க்க கிடைத்திருக்கிறதே என்பதில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி
இம்ரானாக இருந்த அவனை அஜ்வா என மாற்றிய தர்ஷன் பாத்திரத்தின் கேரக்டர் curve ம் குறிப்பிடத்தக்க ஒன்று
பெண்ணடிமைத்தனம் என்பதில் முக்கியப்பங்கு வகிப்பது குழந்தை பிறப்பு. குழந்தைகளுக்காக பிடிக்காத கணவனுடன் அனுசரித்துச் செல்லும் பெண்கள் , திருமணததுக்கு முன் கர்ப்பம் அவமானம் என்ற சூழலில் தற்கொலைகள் , கருக்கலைப்பு சார்ந்த மரணங்கள் . வேறு வழியின்றி பிடிக்காதவனை மணப்பது என இது சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் .குழந்தைகளுக்காக வாழ்வதை புனிதமாக்கி ,தாய்மை என்ற பிம்பச்சிறையில் மறைந்துபோன எத்தனையோ மேரி க்யூரிக்கள் , அயன் ராண்டுகள் , இந்திரா காந்திகள் உண்டு
கர்ப்ப பை தான் உன்னை அடிமையாக்குகிறது என்றால்,அதை அகற்றி எறி என பெரியார்முழங்கியது இதனால்தான்
குழந்தைகள் தனி உடைமைகள் அல்லர் . அவர்களை ஊர்தான் வளர்க்க வேண்டும் தனி குடும்பம் என்ற கர்ப்பிதமே அர்த்தமற்றது என்ற சூழல் வந்தால் உலகமே இனிய உலகமாகி விடும். சொத்துச்சண்டைகள் , சாதி மத,பேதங்கள் என எதுவும் இராது. விவாகரத்துகள் , கள்ளக்காதல்கள் , ஆணவக்கொலைகள் போன்ற சொல்லாடல்களே அர்த்தமிழக்கும் என்றொரு பார்வை உண்டு
இது சார்ந்து ஒரு அற்புதமான அத்தியாயம் நாவலில் வருகிறது
ஆணாதிக்கம் குறித்த ஒரு சிறிய கதை வருகிறது
மண்ணால் ஆன ஒரு பெண்ணை ஒருவன் தவறுதலாக மணந்து விடுகிறான். ஆனாலும் பெருந்தன்மையாக அவளை ஏற்கிறான். அவன் மனம் எப்படி திரிபடைகிறது. அதனால்,அவள் எப்படி அழிகிறாள்" அவளை அழித்து ரசிப்பதில் கிடைக்கும் போதை , முழுதும் அழித்தபின் அடையும் சோகம் என ஒருகதை இப்படி ஆழமான குறியீட்டு ரீதியான ஏராளமான சிறுசிறு பகுதிகள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன
மனிதனின் அறவுணர்வு குறித்து எஸ்ராவின் சிறுகதை ஒன்றில் படித்திருப்போம்
பசிக்கொடுமை வேறு வழியில்லாமல் கிழவி தபால் செலவுக்கு கொடுத்த காசை வைத்து இருவர் சாப்பிடுகிறார்கள். அவளது பார்சலை கிழித்தெறிகிறார்கள்
அப்போது அவளது கடிதம் கண்ணில் படுகிறது. தன்னைப்போல கஷ்டப்படும்,ஒரு,சிநேகிதிக்கு கிழவி கஷ்டப்பட்டு அனுப்பும் சில பரிசுகளும் ஐநூறு ரூபாய் நோட்டும் இருக்கிறது. அவளது சூழல் புரிந்ததும்தான் அவளுக்கு தாங்கள் செய்த துரோகம் புரிகிறது அந்த 500ரூபாயை அவர்களால் எடுத்துச்செல்ல முடியவில்லை
இந்த இயல்பான அறவுணர்வு சில நேரங்களில் மறைந்து விடுவதுதான் விநோதம் அதீதமான வறுமை , அதீதமான அதீகாரம் என அதுவும் இந்த அறப்பிழைக்கு காரணமாக இருக்கலாம்;
தன்னிடம் அன்பு காட்டிய ஒருவருக்கு செலுத்த வேண்டிய நன்றி மன்னருக்கு தனது ஆட்சிக்காலங்களில் நினைவில் இல்லை மரணமடையும்போது நினைவு வந்து ஒரு பரிசை அளிக்கச்சொல்லி உயில் எழுதி தன் உதவியாளரான அஜ்வாவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் கடும் சித்திரவதைகளுக்கு மத்தியிலும் இப்பொறுப்பில் இருந்து அவள் விலகவில்லை. அவளிடம் இருந்து இப்பொறுப்பை, ஏற்ற அனுராதா என்ற திருநங்கையும் இந்த பணியில் உயிரத்தியாகம் செய்கிறாள்
இன்னொரு புறம்
தன் கழுத்தில் கத்தி பாய்ந்து உயிர்பிரியவிருக்கும் கடைசி தருணத்திலும், இளவரசருக்கு சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிவிட வேண்டும் என்ற பொறுப்பில் வழுவாதிருக்கிறரர் ஒருவர்
இவரிடம் இருந்து அப்பொறுப்பை ஏற்கும் சம்பு அப்பொறுப்பை நிறைவேற்றவில்லை என்பதுதான் வாழ்வியல் வினோதம் சம்பு பொதுவாக அறப்பிழைகள் செய்பவனல்லன். தனது"கைகளில் இருப்பது இந்தியாவின் வரலாற்றையே மாற்றக்கூடியது அடுத்த மன்னனை நிர்ணயம் செய்யக்கூடியது என தெரிந்தாலும் தற்காலிக பலனுக்காக தன்னை நம்பியவருக்கு துரோகம் செய்கிறான்.
தனது பொறுப்புக்கு உண்மையாக இரு்ந்த அஜ்யா மனநிறைவுடன் உயிர் துறக்கிறாள். துரோகம் செய்த சம்புவை மரணம்வரை அந்த துரோகம் துரத்துகிறது.
இது போல நாவலில் கவனித்து ரசிக்க வேண்டிய பகுதிகள் ஏராளம்
கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல்
தேசாந்திரி பதிப்பகம்
ரசித்த சில வரிகள்
பகல் மனிதர்களை பிரித்து வைக்கிறது. இரவு ஒன்று சேர்க்கிறது. உறக்கம் என்பது இரவு புகட்டும் பால்.தாய் பால்புகட்டுவதுபோல இரவு உறக்கத்தை மனிதர்களுக்குப் புகட்டுகிறது
நல்லதை எடுத்துக்காட்ட ஒரு மனிதனை ஞானியாக்கும் கடவுள் , தீமையை அடையாளம் காட்ட தன்னை பாவையாக்கி கொண்டாரா
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]