ஆஸ்திரேலிய ஓப்ப
ன் டென்னிஸ் போட்டியில் உலக நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டபோது உலகமே அதிர்ந்தது
கோவிட் தடுப்பூசி போடாதவர்கள் விளையாட முடியாது என்ற விதியில் இருந்து யாருக்கும் விலக்கு தர முடியாது என்பது அரசின் முடிவு
விதிகளை கண்மூடித்தனமான பின்பற்றாதீர்கள் ஒரு வரலாற்று வீரனை இழந்தால் அந்தப் போட்டிக்குதான் இழப்பு என்ற குரலை அரசு கேட்கவில்லை. பிடிவாதமாக அவர் விசாவை ரத்து செய்து அவமானப்படுத்தினர்
கடைசியில் அப்போட்டியில் நடால் வென்று உலக சாதனை புரிந்தார்
மெத்வதேவ் நடால் இறுதிப்போட்டி அனல் பறந்த ஆட்டம் , வரலாற்றில் இடம் பெறும் போட்டி என்பது வேறு விஷயம் . ஆனால் அதில் ஜோகோவிச் இல்லாதது நடால் வெற்றியின் ஒளியை சற்றே மங்கச் செய்துவிட்டது
எனக்கு தடுப்பூசி மீது வெறுப்பு இல்லை. தடுப்பூசி கூடாது என்ற இயக்கத்தை நான் ஆதரிக்கவும் இல்லை ஆனால் மிரட்டலுக்கு அடி பணிந்து தடுப்பூசி நான் விரும்பவில்லை தனி மனித சுதந்திரமா பரிசுத்தொகையா எனறால் தனி மனித சுதந்திரமே முக்கியம். சாதனைகள் போனால் போகட்டும் என்று சொல்லிவிட்டார் ஜோகோவிச்
இந்த சூழலில் , விம்பிள்டன் போட்டியில் விளையாட தடுப்பூசி கட்டாயம் கிடையாது என அப்போட்டியின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்
தலைமை நிர்வாகி சால்லி போல்ட்டன் கூறுகையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது ஆனால் அது நிபந்நனை அல்ல என்றார்
இதே போல இத்தாலி ஓப்பன் டென்னிஸ் போட்டியாளர்களும் அறிவித்துள்ளனர்;
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]