நடிகர் சௌந்தர்யா குறித்து ஆர் வி உதயகுமார்
எனது பொன்மணி படத்த்தைப் பார்த்து சௌந்தர்யாவுக்கு சூப்பர்ஸ்டார்சிரஞ்சீவிக்கு ஜோடியா நடிக்கிறவாய்ப்பு வந்துச்சு. அப்போ செளந் தர்யா தெலுங்குல செம பிஸி. 95-97 காலகட்டத் துல தெலுங்கில வருஷத் துக்கு 10 படம் சௌந்தர்யா நடித்து ரிலீஸாகும். அத னால ரஜினி படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொல்ல டாங்க
. 'அருணாச்சலம்' ரஜினிசாரோட சொந்தப்பட அதனால் ஒருநாள் அவரே எனக்கு போன்பண்ணி சௌந்தர்யா கால்ஷீட் வேணும் உதய்னு கேட்டார். அடுத்த நிமிஷமே செளந்தர்யாவுக்கு போன் போட்டேன்.
‘நீ ரஜினிசார் படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொன்னியாமே... அவர் எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் அவங்க போன் பண்றதுக்கு முன்னாடி நீயே போன்பண்ணி கால்ஷீட் கொடுத்துடுனு கொஞ்சம் சீரியஸா சொன்னேன். உடனே சௌந்தர்யாவே போன் பண்ணி அருணாச்சலம் படத்துக்கு கால்ஷீட்டை கன்ஃபர்ம் பண்ணிடுச்சு.
2004, ஏப்ரல் 16--ஆம் தேதி திரும்ப சௌந்தர்யா கிட்ட இருந்து எனக்கு போன். 'சார், உங்க வாழ்க்கைல மறக்க மாட்டேன். சினிமால நீங்க கொடுத்த வாய்ப்பை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன்னு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிட்டு இருந்துச்சு. 'உனக்கு என்ன ஆச்சுமா... ஏன் இப்படிலாம் பேசறனு நானும் எப்பவும்போல் பேசிமுடிச்சு பேங வெச்சுட்டேன். மறுநாள் 'கற்க கசடற படத் பூஜை அழைப்பிதழ் கொடுக்க சத்யராஜ் சார் வீட்டுக்கு போனேன். என்னை வாசலில் பார்த்தவுடனே பதறிப் போய் ஓடிவந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டுக் நின்னார்.
நன்றி.தினமணி தீபாவளி மலர்