Wednesday, December 25, 2024

பிரிப்பு - சாந்தன் சிறுகதை ...

 பிரிப்பு  - சாந்தன் சிறுகதை 

...

க ல்யாண வீட்டிற்குத் தென்னங் குருத்து அலங்காரஞ் செய்யக் கூடாதென்றுதான், பெரியவர்கள் எல்லோ ரும் வாது பண்ணினார்கள். திரு, ‘அதெல்லாம் முட்- டாள் தனம்' என்று சண்டை போட்டு, பச்சை ஓலைத் தோர ணங்கள் கட்ட வழி பார்த்தான். தனது கல்யாணத்திற் கென்றே மினைக்கெட்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டுத் தென்னிலங்கையிலிருந்து வந்த தன் கூட்டாளிமாரின் அலங் காரத் திறமையை - யாழ்ப்பாணத்திற்கு அவ்வளவு அறி முகமில்லாத - சிகரம் போன்று வாசலை அணைத்து எழுகிற- தென்னோலைத் தோரண வாயிலை, இந்தச் சந்தர்ப்பத்தைச் காட்டி, இங்கு கட்டுவது அவன் ஆசையாயிருந்தது.


பொன் உருக்குவதிலிருந்து, கோவிலில் தாலிகட்டு முடிந்து, புதுத் தம்பதிகள் வீடு திரும்புவது வரை விதவித மான ஃபோட்டோக்கள். திரு தான் அவற்றில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறான்! முகங்கொள்ளாத மகிழ்ச்சி. பக்கத் தில் அதேபோலக் கமலாவும்.


கொழும்பிலிருந்து வந்த நண்பர்கள்தான் பந்தலையே பார்த்துக் கொண்டார்கள். தோரணம் பின்னுவதிலிருந்து, காகிதப் பூச்சரங் கட்டுவதுவரை அவர்கள் கவனித்த எல்லா வேலைகளையும், தம்பி ஒவ்வொன்றாகத் தன் 'கமரா' வுக்குள் அடக்கியிருந்தான். அந்தப் படங்களுங்கூட, இந்தப் படத்தொகுப்பில்—‘அல்ப’த்தில் தான் இருக்கின்றன.


சில்வாவும், அவர் மனைவியும் ஒரு குழந்தையின் ஆர்வம் முகமெல்லாம் வழிய, ஒவ்வொரு படமாக இரசித் துக்கொண்டிருந்தார்கள். படங்களை விளக்குவதற்கு, ஒரு தமிழ்-இந்துத் திருமணத்தின் சடங்குகள், தாற்பரியங்கள் எல்லாவற்றையும் விளக்க வேண்டியிருந்தது, திருவுக்கு. சில்வா ஏற்கெனவே ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், அவர் மனைவிக்கு இவை யெல்லாம் மிகவும் புதிய விஷயங்கள்.


ஏழெட்டு ஆண்டுக்கால கொழும்பு வாழ்வைவிட்டு இந்த இடத்திற்கு மாற்றலாகி, திரு வந்தபோது, புதிய அலுவலகத்தில் சில்வாவைச் சந்தித்தான். தன் நண்பர் களின் ‘உள்ளுடனை’ இவரினுள்ளும் அவன் கண்டதானது, இப்புது நட்புக்கு அடிகோலி வேரூன்ற வைத்தது. இன்று, இந்த மத்தியான விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்ட வேளையில், அல்பத்தைக் காட்டுவதும், உபசாரங்களில் ஒன்றா யமைந்தது.


சோடனைகளின் போது மட்டுமல்ல; மாப்பிள்ளை வீட் டின் பலவிதமான சடங்குகளின் போதுங்கூட-இதோ இந்தத் திருமதி சில்வாவின் ஆர்வத்தையொத்த, அதே துடிப்புடன் - எல்லோருக்கும் முன்னால் துருத்திக்கொண்டு வந்து, மாப்பிள்ளையின் பின்னால்--தோளுக்கு மேலால் எத் தனை இடங்களில் நிற்கிறார்கள், அவன் நண்பர்கள்.


‘இவர்களெல்லாம் என் சிங்கள நண்பர்கள்’ இப்படி அந்தப் படங்களைக் காட்டி, சில்வாவுக்குச் -சொன்னால், அவர் வியப்பும், தன்மேல் மதிப்பும், மகிழ்வுங் கொள்ளக் கூடும் என்கிற எண்ணம்-ஆசை-அவனுள் எழுந்தது.


‘நண்பர்கள்’ என்கின்றபோது, 'சிங்கள நண்பர்கள்’ என்று சொல்வது எந்தளவு அசட்டுத்தனம் என்கிற உண் மையும் அடுத்த கணத்திற்குள்ளேயே அவனுக்கு உறைத் தது. ‘...இதில் பெருமைப்படவோ குறிப்பிட்டுச் சொல் லவோ ஒன்றுமிருக்கக் கூடாது. இந்தக் குட்டி நாட்டுக்குள் இருந்து கொண்டு, பரஸ்பரம் இப்படியான உறவுகளில்லா மல் இருப்பது தான் புதுமையாக இருக்க வேண்டும். இப்படி இருப்பதையும், அப்படிச் சொல்லிக் காட்டப்போய், அதனா லேயே அந்தப் பிரிவு அநாவசியமாய் உணர்த்தப் படக் கூடாது .........


தோரணங்களை நண்பர்கள் கட்டுகிற ஒரு படத்தைக் காட்டி; “உங்கள் நண்பர்கள்தான் அலங்காரங்கள் எல் லாம் செய்கிறார்கள் -போலிருக்கிறதே?''-என்று சில்வா. கேட்டபோது, அவன் மகிழ்ச்சியுடன் புன்முறுவல் செய்த வாறே, “ஆமாம்” என்று மட்டுந்தான் சொன்னான்.


...

1974 மல்லிகை இதழ் 

Tuesday, December 24, 2024

உயர் மனிதனை உருவாக்கும் குணம் எம் ஜி ஆர் பற்றி சரோஜா தேவி

எம்.ஜி ஆரிடம் இருந்து பல விஷயங்களை க ற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, யார் வந்தாலும் முதலில் தன்னை அறிமுகப் கொண்டு தான், தானே பேச ஆரம்பிப்பார் இந்த பண்பு இன்று பலரிடம் இல்லை. என்னதான் பெரிய ஆளாக இருந்தாலும் முதலில் நாம் அறிமுகம் செய்து கொண்டால், எதிர் இருப்பவர் மகிழ்ந்து சகஜமாக பேசுவதற்குத் தயாராகிவிடுவார். இதை சின்னவர் இன்று வரை அவரை நான் இப்படித்தான் அழைப் பேன். (பெரியவர் எங்கள் எல்லோருக்கும் சக்ரபாணி அண்ணன் தான்) பலமுறை செய்து நான் பார்த்துள் ளேன்.


என்னுடைய பிறந்த நாள் ஜனவரி 7. அவருடைய பிறந்த நாள் 17. அவர் என்றுமே தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட மாட்டார். அவரது ரசிகர்கள் தா ன் கொண்டாடுவார்கள். பலமுறை அவரது பிறந்த நா ளில் அவர் படப் பிடிப்பில் இருந்துள்ளார்.


என்னுடைய பிறந்த நாள் அன்று காலையில் எனக்கு வரும் முதல் தொலைபேசி வாழ்த்து எம்.ஜி.ஆரிடம் இருந்துதான் வரும். என் வீட்டில் எனது தாயார் சத்யநாராயணா பூஜை செய்வார். ஒரு முறை என் பிறந்த நாளில் நேராக மனைவி ஜானகி அம்மாவுடன் காலையிலேயே வந்துவிட்டார். எனக்கு கையும் ஓட வில்லை; காலும் ஓடவில்லை. என் அம்மா சத்யநாராயணா பூஜை செய்து கொண் டிருந்தார். ராமச்சந்திரனும் சத்யநாராயணனும் ஒன் றுதான் என்று என் அம்மா சொன்னவுடன் ஒன்றும் சொல்லாமல் என்னை வாழ்த்தி விட்டு சென்றார்.


நான் என் அம்மா சொன்னால் என்றுமே தட்ட மாட்டேன். ஒரு முறை 'நான் ஆணையிட்டால்' படம் என்று நினைக்கிறேன். நான் நைட் ஷூட்டிங் கில் பிரேக் விட்டதும், அசதியாக வந்து உட்கார்ந் தேன். எனக்கு அசைவ பிரியாணியை அளித்தார் எம்.ஜி.ஆர். ‘இன்று சனிக்கிழமை அதனால் நான் அசைவம் சாப்பிட மாட்டேன். இது அம்மா சொன் னது' என்று கூறினேன்.


'ஷூட்டிங் பன்னிரண்டு மணியை தாண்டிவிட் டது. இப்பொழுது சாப்பிடலாமே!' என்றார். 'எங் களைப் பொருத்தவரை சூரியோதயமானால்தான் அடுத்த நாள். காலையில் 6 மணிக்குத்தான் அடுத்த நாளே பிறக்கும். இதுவும் என் அம்மாதான் சொல் லியுள்ளார்கள்' என்றேன். தன்னுடன் அமர்ந்திருந்த பலரிடம், 'இந்த சின்ன வயசிலே இந்த பொண்ணு அம்மா பேச்சை தட்டாமல் கேக்குறா பாரு!' என்று சொன்னது இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண் டிருக்கிறது.


அவர் எப்பொழுதுமே நமது கலாசாரம், பண்பாடு இவைகளைப் பின்பற்றினால் பெருமைப்படுவார். அவரிடம் எந்த ஒரு தீய குணத்தையும் நான் பார்த்த தில்லை. அதேபோல் மற்றவர்களை தவறாக பேசியதும் இல்லை 

நடிகர்கள் வெளியே போனால் கூட்டம் கூ டிவிடுகிறது சாலைகளிலோ கடை தெருவிலோ ந டந்து போக முடியவில்லை' என்று நாங்கள் அவரிடம் குறை பட்டோம். இதை மனதில் கொண்டு ஒருநாள் முழுவதும் பல்வேறு கடைகளை கோல்டன் ஸ்டுடியோவில் அமைத்தார். அவர்களும் சந்தோஷ மாக வர நாங்கள் எல்லோரும் ஒவ்வொரு கடையாக பார்த்துக் கொண்டே சென்றோம்.


ஒரு நகைக்கடையையும், அதில் உள்ள ஒரு நெக்லஸையும் (Necklace) பார்த்து ஆசைப்பட்டு நான் வாங்க விரும்பினேன். கடைக்காரர் 'இந்த நெக்லஸை சாவித்திரி அம்மா முதலிலேயே வாங்கி விட்டார். அதற்கான அட்வான்ஸ் தொகையையும் கொடுத்துவிட்டார்' என்றார். இதைக் கேட்ட என் முகம் சுருங்கி விட்டது. எனக்கு அந்த நெக்லஸை வாங்க முடியாததில் ரொம்ப வருத்தம்.


அதற்குப் பிறகு நாங்கள் நடித்த படம் 'தாயை காத்த தனயன்'. படத்தை தயாரித்தது தேவர் பிலிம்ஸ். ஆனால் அதை வாங்கி வெளியிட்டது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ். அதன் வெற்றி விழாவில் எனக்கு முன் மேடைக்குச் சென்ற அசோகன் ஒரு சின்ன பெட்டி யுடன் இறங்கி வந்தார். என் பெயர் அழைத்தபோது நான் சென்று மேடையில் நின்றேன். ஒரு பெரிய பெட்டி என் கையில் கொடுக்க நான் வாங்கி வந் தேன். கீழே வந்து உட்கார்ந்தவுடன் மெல்ல திறந்து பார்த்தேன். என் கண் பார்ப்பதை என்னாலே நம்ப முடியவில்லை. எந்த நெக்லஸை நான் வாங்க முடிய வில்லை என்று வருத்தப்பட்டேனோ, அந்த நெக்லஸ் எனக்குப் பரிசாக மேடையில் தரப்பட்டவுடன் நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.


என்னைப் பொருத்தவரையில் சொந்த தாயை விட ஒரு படி மேலே சென்று அன்பை பொழிபவர் எம்.ஜி.ஆர். அவர் முதலமைச்சரான பிறகும் கூட நான் அழைத்தால் உடனேயே என்னை தொடர்பு கொண்டு பேசும் அன்பாளர், கடைசி வரை என்னை தனது கட்சியில் சேரவேண்டும் என்று அவர் சொன் னதே இல்லை. எம்.ஜி.ஆர். இன்று அல்ல என்றுமே வாழ வைக்கும் தெய்வம் 




Monday, December 23, 2024

வித்தியாசமான இயக்குனர் வித்தியாசமான காதல்

 படித்ததில் ரசித்தது 

.....


ரொம்ப வித்தியாசமான டைரக்டர் அவர். எப்போது நோக்கினாலும் அப்போதுதான் நாலு நாள் சேர்ந்தாற் போல உறங்கி விழித்தது மாதிரியிருப்பார். அந்தக் கண்களில் இனம் புரியாத சோகம் தாண்டவமாடும். கதை விவாதம் என்ற ஒன்று தினந்தோறும் நடக்கும் சில வாரங்களோ, பல மாதங்களோகூட அது நீளும். ஆனால் அசிஸ்டென்ட் டைரக்டர்கள் சொல்கிற எதையும் கேட்டுக்கொள்ள மாட்டார். அப்புறமெதற்கு அவர்கள்? தான் சொல்வதைக் கேட்பதற்காகத்தான்.



அட அவராவது அதை கோர்வையாகச் சொல்வாரா என்றால், மண்ணாங்கட்டி அவர் பேசுவதை அவரே நவீன தொல்காப்பியர்களை வைத்து தமிழில் ரீமேக் செய்தால்தான் உண்டு.


அதுவே அவரிடம் இருக்கும் பெண் உதவி இயக்குனர்கள் என்றால், அவர்களுக்கு சீன் சொல்கிற சுதந்திரம் உண்டு. அதைப் பயன்படுத்துவாரா? மாட்டாரா? என்பதெல்லாம் படமாகி வருகிற வரைக்கும் புரிந்துகொள்ள முடியாத ரகசியம். தன்னுடன் மாய்ந்து மாய்ந்து கதை விவாதம் செய்யும் உதவி இயக்குனர்களுக்கும் உயிர் இருக்கும். பசி இருக்கும். பிள்ளைக்குட்டிகள் இருப்பார்கள். பஸ் இருக்கும். பஸ்சில் டிக்கெட் இருக்கும். என்பதெல்லாம் எதுவுமே தெரியாத, அல்லது தெரிந்துகொள்ள விரும்பாத ஏகாந்தி அவர்.


இல்லையென்றால், மதியம் இரண்டு மணி வரை பேசிக் கொண்டேயிருக்கிற அவர், தனக்கு மட்டும் சிக்கன், மட்டன் ஐட்டங்களை வரவழைத்து வெட்டுவதையும் சரியாக இரண்டு பத்துக்கு வாட்சைப் பார்த்துவிட்டு, 'போய் சாப்ட்டுட்டு வந்திடுறீங்களா? என்று ஷட்டரை குளோஸ் பண்ணிவிட்டு ஒரு குட்டித் தூக்கம் போடுவதையும் எந்த மனிதாபிமானத்தில் சேர்ப்பது?


ஆனாலும் அவர் இயக்கிய படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் வசூலை வாரிக் குவித்தன. அதெப்படி? அதுதான் அவரது தனிப்பட்ட திறமை. இளமை துள்ளுகிற வயசில் அண்ணன் தம்பிகளாகப் படமெடுக்க வந்தவர்கள் இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சூத்திரமாகிவிட்டார்கள். இருந்தாலும் இந்த அண்ணன் மட்டும் பிச்சு பிச்சு போட்ட பிகாசோ ஓவியம் போல யாருக்கும் புரியாத படைப்பாளி.


இல்லையென்றால், இவர் இயக்கிய பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆன அந்த வருத்தப்படாத வாலிபர், 'ஆளை விடுங்கடா சாமீ என்று பாதியிலேயே ஷூட்டிங்கிலிருந்து தப்பித்து ஓடி வந்திருப்பாரா? இத்தனைக்கும் அது அவரே வளர்வதற்காக நாலு ஆபீஸ் கதவைத் தட்டி வாய்ப்பு கேட்டுக் கொண்டிருந்த நேரம். அவருக்கே பொறுக்க முடியாத அவஸ்தை அது என்றால் புரிந்துகொள்ள வேண்டியதுதான்.


அட.. அது எப்ப? இரு வேறு உலகங்கள் பற்றிய கதை அது. சினிமாவில் நீண்ட கால தயாரிப்புகள் இருக்கின்றன. ஆனால் இது நீண்ட காலத்திற்கும் முந்திய அந்தக் கால தயாரிப்போ என்று அஞ்சுகிற அளவுக்கு வருஷக்கணக்காக நீண்டது. அதில் ஹீரோவுடன் படம் முழுக்க

டிராவல் ஆகிற கேரக்டர் வருத்தப்படாத வாலிபருக்கு இருபத்தைந்து நாள் நடித்திருந்தார். ஒவ்வொரு நாளும் பிரசவ வார்டில் சேர்த்து பிள்ளையை கிழித்தெடுக்கிற மாதிரியே, எல்லாரிடமும் நடிப்பை வாங்கிக் கொண்டிருந்தார் டைரக்டர்.


'அந்தாளு என்ன நினைக்கிறாருன்னு நமக்கும் புரிய மாட்டேங்குது. நமக்கு புரியற மாதிரி சொல்லித் தொலையவும் மாட்டேங் குறாரு. அட.. நாம எந்த ஸ்பாட்ல நிக்குறோம்னு தெரிஞ்சா அதை வச்சாவது புரிஞ்சுக்கலாம்னா, சுத்தி பச்சை துணியை தொங்க விட்டுட்டு கிரீன்மேட் ஷாட்டுன்னு எடுத்துகிட்டு இருக்காரு. மண்டையிலயிருக்கிற பல்பை பீஸ் போக வைக்காம விட மாட்டாரு போலிருக்கே' என்று ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தவர்தான்.அதற்கப்புறம் அந்த திசைக்கே போகவில்லை அவர். நல்லவேளை... அங்கிருந்து ஓடி வந்தவருக்குதான் ஒன்பதாம் இடத்துல குரு. அதற்கப்புறம் அவர் செல்வாக்கு உயர்ந்து இன்று பல கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு டாப் ஹீரோவாகிவிட்டார்.


இவரென்ன ஆனார்? படம் வெளிவந்தது. அட்டர் பிளாப். கொல்லன் பட்டறையில கோடாலி செய்யுறவர்கூட, பிரிப்ரேஷன் இல்லாமல் போவதில்லை. கரி எவ்வளவு வேணும்? சம்மட்டி சைஸ் என்ன? அடிக்கிற ஆளுக்கு எனர்ஜி போதுமா? அல்லது பாதியிலேயே பல்ஸ் இறங்கிடுமா? என்றெல்லாம் பார்த்துப் பார்த்துதான் ஒரு கோடாலி செய்வார். இவர் அப்படியா? சுமார் பதினேழரை கோடி லாஸ், நஷ்டத்தை இவர் தலையில் கட்டிவிட்டது நிறுவனம்.


இவர் பண்ணிய ராவடியில் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து ஓடிப்போன ஒளிப்பதிவாளர், தனக்காக ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஓட்டல் ரூமிற்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டு அறையிலிருக்கும் லேன்ட் லைன் போனையும் துண்டித்துவிட்டு படுத்துவிட்டார். சுமார் ஒன்றரை நாள், யூனிட் முழுக்க, பிரேக் டவுன் ஆன அரசு பஸ்சை போல, நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தது. அப்புறம் ஓட்டல் நிர்வாகத்திடம் கெஞ்சி வேறொரு சாவி போட்டு உள்ளே போய், ஆளை அமுக்கிக் கொண்டு வந்தார்கள்.


'அந்தாளு ஒழுங்கா வேலையைப் பார்க்கலேன்னா இப்படித்தான் என்றார் கேமராமேன். இவங்க ஈகோவுல நம்ம தலையை உருட்றானுங்களே...என்ற கடுப்பில்தான் நம்ம நேரம் வரட்டும் என்று காத்திருந்தது நிறுவனம். சரியாக கத்தி வைத்தார்கள். இன்னும் கடன் தீர்ந்தபாடில்லை.


சூடான இஸ்திரி பொட்டியில சுள்ளுன்னு தண்ணீர் துளியை வீசுன மாதிரிதான், அவ்வளவு மனக்குடைச்சலுக்கு நடுவிலும் காதல் வந்தது இவருக்கு. கல்யாணம் குடும்பம் குழந்தைன்னு ஆயிருச்சேன்னு ஒதுங்கிப் போற உலகமா இது? முதல் மனைவி விவாகரத்து பெறுவதற்குக் காரணமான அந்த நடிகை வெகு காலம் கழித்து மீண்டும் கிராஸ் ஆனார் இவர் வாழ்வில். ஏதோ ஒரு வார இதழின் வண்ணப்பக்கத்தில் அவர் புகைப்படம் வந்திருந்தது.


பக்கோடா போட்றவன் பார்சல் கட்ற பேப்பரையும் நினைச்சுகிட்டா மாவை எண்ணெய் சட்டியில போடுவான்? அப்படியொரு பக்கோடா பார்சலோ, அல்லது வரவழைத்த சஞ்சிகையோ? கரெக்டாக அந்த அட்டைப்படம் அவர் கண்ணில் பட்ட நேரம், ஆந்தையே ரெஸ்ட் எடுக்கப் போகலாமா என்று நினைக்கிற நடுராத்திரி இரண்டு மணி. காதலால் கசிந்துருகிய இருவருக்கும் திடீர் சண்டை வந்தது. ஏன்? எதற்கு? என்பதற்கெல்லாம் ஒரு காரணம் வேண்டுமா என்ன? வந்தது. அவ்வளவுதான். திடீரென தனது கதவோரம் நாலு தெருநாயைக் கட்டி வைத்து டைரக்டரு வரும்போதெல்லாம் காதே கிழிகிற அளவுக்கு குரைக்க விட்டார் நாயகி.



From.. கோடம்பாக்கம் செக்போஸ்ட் ஆர் எஸ் அந்தணன் 

முரகாமியும் சம கால எழுத்துச்சூழலும்

முரகாமியின் The City and The Uncertain walls குறித்த விமர்சனம் இந்தியன் எக்ஸ்பிரசில்  படித்தேன். நாவலின் போதாமைகள் குறித்த கச்சிதமான பார்வை.


இன்றைய எழுத்துச் சூழலின் முக்கியமான பிரச்சனைகள்தான் இவை..  ஊடு பாய்தல் என்ற கலை  "in someone's shoes" என்ற அனுபவம் பலருக்கு இல்லை.


நானூறு பக்க நாவல் என்றால் நானூறு பக்கமும் ஒரே அரசியல், ஒரே ஃபேண்டசி, எதிர் பாலனரைப் பற்றி ஒரே பார்வை..


இங்குதான் சாருவின் நான் தான் ஔரேங்ஸேப் போன்றவை தனித்து நிற்கின்றன.. ஔரங்ஸேப் குறித்து அதில் குறைந்தது மூன்று விதமான கதையாடல்கள் உண்டு. சாருவுக்கு எதிரான அவருக்குப் பிடிக்காத கோணமும் உண்டு

ஒகே.. முரகாமி குறித்த விமர்சனம் உங்கள் பார்வைக்கு


...................

முரகாமியின் உலகில் ஒரு பெண்ணின் உண்மையான இருப்பு இல்லாதது நாவலை ஹலோசென்ட்ரிக் ஆக்குகிறது மற்றும் ஆணின் ஈகோ, கற்பனைகள் மற்றும் துக்கம் அடிப்படையில் அமைந்துள்ளது


. அவனது வருத்தம் ஒரு பிரச்சனை இல்லாவிட்டாலும், பெண்களின் இருப்பை பலி கொடுத்து அது உருவாக்கப்பட்டுள்ள விதம்,  ஆரோக்கியமான கதை சொல்லல் இன்மையை  வாசகனை மிஸ்செய்ய வைக்கிறது.


நாவலை படித்து முடுப்பது அலுப்பூட்டும் அனுபவமாக உள்ளது.


  நாவல் மிகவும் பெரியது, கதைக்கு சம்பந்தமற்ற பல விவரிப்புகள் மீண்டும் மீண்டும் தேவையற்று இடம்பெறுகின்றன. கதைக்களத்தில் சிறிது சேர்க்கும் பல மறுபடியும். 


ஆர்வமூட்டும் வாசிப்பு அனுபவத்தை தருவதைவிட , 200 அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங்களாக நாம் ஏற்கனவே அறிந்துள்ள அவனது தனிமை, தேக்கம் மற்றும் தனிமை ஆகியவற்றை   பலமுறைகள் சொல்லிம்   வாசகனை களைப்படைய வைக்கிறது.


 முரகாமி மார்க்வெஸ் மற்றும் ப்ரூஸ்ட் போன்ற பல்வேறு எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறார். ஆனால் கேள்வி எஞ்சியுள்ளது: நாவல் அதன் மகத்துவத்தை அதன் வாசகர்களை நம்ப வைக்க தன்னை காட்டிக்கொள்கிறதா? இல்லை என்பதே பதில். மார்க்வெஸ் தனது படைப்புகளில் இல்லாததாக கருதும் எல்லைகளை   மங்கலாக்க்கல் என்பது  அடிக்கடி நிகழ்ந்து நாவல் தட்டையாக்குகிறது


. இதேபோல், ப்ரூஸ்டியன்  புலனின்ப கோட்பாடும்  குழப்பியடிக்கப்பட்டுள்ளது, ஏனெனில்,In Search of Lost Time  கதையில் நிகழ்ந்த மேஜிக் இதில் செயல்படாமல் , முரகாமியின் கதையோட்டம்  முழு பலத்துடன் வாசகரிடம் வந்து சேரவில்லை.

முரகாமி கதையாடலில் , ஒரு புத்திசாலித்தனமான வாசகன் இறுதியில் ஒரு புள்ளிக்கு வந்து விட்டான், அவருடைய கதைக்களங்கள், அவரது யூகிக்கக்கூடிய கதாபாத்திரங்கள் திருப்பங்கள் போன்றவை இப்படித்தான் இருக்கும் தெருந்து விட்டது

. இந்நாவலில் பேய் கதை சொல்லிடம், 'இன்னொரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும்-நம்பிக்கையை கைவிடாதே. நீங்கள் எதையாவது உறுதியாக, ஆழமாக நம்பினால், முன்னோக்கி செல்லும் பாதை தெளிவாகிவிடும்' என்று  சொல்கிறது


முரகாமி தனது வாசகரிடம் அவரைப் பற்றியும் அவரது புத்தகங்களைப் பற்றியும் இதைதான் சொல்ல விரும்புகிறாரோ என தோன்றுகிறது.


 . அவரது எழுத்தின் மகத்துவத்தின் மீதான நம்பிக்கை இல்லையென்றால், அவரது நாவல் இனியும் வெற்றி பெறுமா?

.......




Friday, December 20, 2024

சென்ரியு

 சென்ரியு ஆயிரம் -ப. குணசேகர்

....



அரசியல்வாதிகள் நாய்கள் 

சிறுநீர் கழிக்கும் 

சிறு உறுமல் செய்யும் நாய்கள்

-பார்பாரா காப்மேன்

.........

பிரிஸ்கேம்பெல் 

தெரு ஓவியக்கலை 

நிர்வாணப் பெண்கள் காலில் 

மிதிபட்டு அழிந்தனர்

..........

இருண்ட இரவு 

மறுபடியும் மறுபடியும்

 எண்ணிய கறுப்பு ஆடுகள்

- பார்பாரா காப்மேன்

.........

எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் 

தெரிவாரா ஏசு!


-பீட்டர் நியூட்டன்

.........

தாத்தாவிற்குப் பேரன்

 கற்றுக் கொடுத்த பாடம் 

பந்தை அடிக்க! 

- பார்பாரா காப்மேன்

.......

கோடையின் உச்சம் 

போக்குவரத்து காவலர் 

தலையில் வெயில்!

.....

ஐரிஷ் குழம்பு

 ஞாபகக் கலவையில் 

எனது பாட்டி

,- பார்பாரா காப்மேன்

......

டிரோன் கண்காணிப்பு

 நான் விலக்கிய

 நேர்த்தியான அச்சு.

.......

அபின் சொட்டில் மூழ்கிய 

பாடல் 

தாய்க்கு 

நான் பார்த்த 

அதிசயம்

.........

இரத்தம் சொட்டும் 

இருக்கைகள்

 பீர்கடைக்காரர் அழைத்தார் முதலாளி என்று!


-சேஸ்க்காகனன்

......


......

மதுக்கடையில் அட்டை

 நான் உணர்ந்தேன்

 இளமைப் பார்வை!


-சேஸ்க்காகனன்

.....

மெழுகுவர்த்திச் சுடர் 

முன்னோக்கி சாய்த்த

 எனது பேச்சு.

......


ஞாயிறு சில மணி நேரம் 

தெருப் பாடகர் முழங்கினார்

 முக்கிய ராகம் மதுக் கடையில்! 

டேவிட்ரீட்

......

இந்தியச் சந்தையில் எல்லா வெள்ளைக்காரிகளும் - யாரோ


இயக்க வீழ்ச்சி

 பழையதைப் புரட்டினார் 

பதவியில் பங்கு வகிப்பவர். டேவிட்ரீட்


Monday, December 16, 2024

ஈழ எழுத்தாளர் சாந்தன் சிறுகதை ஒன்று

ஈழ எழுத்தாளர்  சாந்தன் அவர்களது சிறுகதை தொகுதி ஒன்று படித்தேன்..

ஒவ்வொன்றும் அற்புதம்..


:சாந்தனின் உருவ அமைதி பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அவருடடைய கதைகள் எங்கு முடியவேண்டும் என்பதில் அவருக்குள்ள நிர்ணயத் திறன் அபூர்வமானது. இதுவே அவருடைய படைப்புக்கள் எழுத்துச் சிக்கனத்தோடு விளங்குவதற்குக் காரணமாகியுள்ளது. புனைகதையில் இதுவொரு விசேஷ சாதனை” என அசோகமித்திரன் சொல்வது உண்மை



தமிழர் சிங்களர் உறவு குறித்த இக்கதையைப் படித்துப்பாருங்கள்




 என் நண்பன் பெயர் நாணயக்கார... - சாந்தன் 


கொ ட்டாஞ்சேனையிலிருந்து, நாணயக்காரவும் நானும் கோட்டைக்குவந்தோம்.‘யாழ்தேவி யில் ராஜநாயகம் வருவதாகக் கடிதம் போட்டிருந்தான். வண்டி வருவதற்கு இன்னமும் ஒரு மணி நேரத்திற்கு மேலிருந்தது.


"என்னடா செய்யலாம்?" என்றான் நாணா. எனக் கும் புரியவில்லை. இனி, எங்கள் அறைக்கு - பம்பலப்பிட்டிக் குப் போய் விட்டுத் திரும்பி வருவது முடியாத காரியம்.


"ஸ்ரேஷனடியிலை பேசிக்கொண்டிருக்கலாம்; வா. சாப்பிட்டு வருவோம்" என்றேன்.


சாப்பிட்டுவிட்டுத் திரும்பி 'ஸ்ரேஷ'னின் முன்னால் 'ஒல்கொட்' சிலையருகில் வந்த போது, நாணா மிக உற்சாக மாயிருந்தான். அவன் 'எடுத்த' அந்த 'ட்றாம்' அதற்குக் கார ணமாய் இருந்திருக்கக்கூடும். அவன் எப்போதுமே இப்படித் தான்; அளவுக்கு மேல் போகாது. அந்த ஆறடி உயரமும். அதற்கேற்ற ஆகிருதியுமான உடம்புமுள்ள நாணாவின் கம் பீரத்திற்கு இந்த 'மப்'பின் உசார் மேலும் பொலிவூட் டும். தீர்க்கமான மூக்கும், அதன் கீழ்க் 'கருகரு' மீசையு மாய் - ஒரு சாயலில் ராவணனைக் கற்பனை செய்து கொள் ளலாம்.


'ஏண்டா, ராவணா...' என்று செல்லமாக நான் அழைக்கும்போதெல்லாம் 'கட கட'வென்று அவன்  சிரிக் குந் தொனியில், 'மாத்தறை -யாழ்ப்பாண'மோ, அல்லது 'சீனா - தானா'வோ தலைநீட்ட முடியாத அளவுக்கு எமக் கிடையில் இறுகியிருந்த நட்பின் வைரந் தெரியும். கல்லூரி யில் ஒரே வகுப்பு. ஒரே அலுவலகத்தில் ஒரே வேலை. தவிர நாணா இப்போது என் 'ரூம் மேட்'.


"நிப்பமா? உள்ளுக்குப் போவமா?" என்றான்.


"இதிலையே கொஞ்சம் நிப்பம்


இன்னும் அரைமணி நேரம் இருந்தது.


ஒரே குளிர். பனி மூட்டங்களிடை வாகனங்களின் ஒளிக் கதிர்கள் பீச்சப்படுகையில் முப்பரிமாணமுள்ள குவி யமாகிற பரிணாமம்... உடலைச் சிலிர்க்க வைக்கிற காற்று.. அங்கொன்றும் இங்கொன்றுமான யந்திர ஒலிகள் இல்லா விட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.


"இவர்களையெல்லாம் பார்த்தாயா?" என்றான் நாணா, கீழே படுத்துக் கிடந்தவர்களைக் காட்டி


ஆண் - பெண் குழந்தை - கிழவர் என்று ஒரு 'மினி' உலகமே அங்கு -ஒல்கொட்' சிலையடியிலிருந்து 'ஸ்ரேஷன்' விறாந்தை வரை வியாபித்திருந்தது. நாணா கேட்டதுந் தான் அதைக் கவனித்தேன். இவ்வளவு நாளும் வருகிற போகிற போதெல்லாம் கண்டு கண்டு அது ஒரு சாதா ரண விஷயமாய்ப் போய்விட்ட காரணத்தால், அதைக் கவனிக்கவில்லை. நான்


"இவர்கள் இந்நாட்டு மக்களில்லையா?"- சிகரட்டை ஊதியபடி நாணா சேட்டான்.


நான் பேசவில்லை.


"...டேய், இவங்களுக்கு வேலைவேண்டாம், காக சாப்பாடு கொடுக்க வேண்டாம். ஒரு சாத்திரமாவது கட் டிப் போட்டா, இந்தப் பனியிலை இப்படிக் கிடக்கத் தேவையில்லையடா......"


ஆங்காங்கே தூவப்பட்டிருந்த அந்தக் கும்பலிடை, பலர் இன்னமுந் தூங்கவில்லை. நாணாவின் உரத்த பேச் சால் ஈர்க்கப்பட்டு, எங்களை அவதானித்தனர்.


"நீ சொல்றது சரிதான்; கொஞ்சம் மெதுவாகப் பேசு. எல்லாரும் பார்க்கிறார்கள்" என்றேன்.


உண்மையில் நாணாவின் துடிப்பு எனக்குப் புரிந்து தான் இருந்ததென்றாலும், இந்த இரண்டு 'மொட்டை யன்'களும் பேசி ஆகிற காரியமா இது?


நாணா பிறகு பேசாமலிருந்தான். இருவருமாக நடந்து போய் ஸ்ரேஷன் விறாந்தையில் நின்றோம். திரும்பு கையில் நுழை வாசலருகில் நின்றவர்களைக் கண்டதும் எனக்குத் திடுக்கிட்டது.


சிறில்!


இலேசான ஒரு குளிர் முள்ளந்தண்டில் ஓடுவது பால-'ராஜநாயகத்தைப் பார்த்துக்கொண்டிராமல், பேசாமல் அறைக்குப் போய் விட்டாலென்ன' என்று நினைத் தேன். 'என்னைக் கண்டால் என்ன செய்வானோ' என் கின்ற பயம் மேலோங்கிற்று. திரும்பி நாணாவை மெல்லத் தட்டுவதற்குள் - சிறில் என்னைக் கண்டு கொண்டான்!


அந்தப் பார்வை- அதிற் பின்னியிருந்த கொடூரம்... எனக்கு வியர்த்தது. நாணாவின் கரங்களை இறுகப் பற் றிக்கொண்டேன். சிறில், என்ன நினைத்தானோ, "விடு விடென்று ஸ்ரேஷனுக்குள் போய்விட்டான். ஆனால், எனக்கென்னவோ, அவன் சும்மாயிருப்பானென்று தோன்றவில்லை. நடுங்கிய கரங்களை உணர்ந்ததும், நாணா "என்னடா?" என்றான்.


"சிறில்..." - எனக்கு மேலே பேச வரவில்லை.


"எங்கே?" என்றவனின் கண்டத்திலிருந்து 'கட கட' வென்ற வெண்கலச் சிரிப்பொலி எழுந்தது. அந்தக் கம்பீரத்தில் - அதன் தைரியத்தில் - நான் சமநிலைக்கு வரு கையில், "வீணாகப் பயப்படாதே; நானிருக்கிறேன்" என் றான் நாணா.


வெளியே உறைத்த குளிர், இப்போது அதிகரித்தது போலொரு உணர்வு. சிறிலுக்கு நான் பயப்படுகிற கார ணம் - நாணாவும் அறிவான் -


ஓர் அபலைப் பெண்ணைப் பழிவாங்க இந்த சிறில் முன்பொருதரம் முயன்றபோது, என் தலையீட்டால் அவன் திட்டங்கள் கவிழ்ந்து -


அதன் விளைவாய் இந்த 'தெமலப்பய'லுக்கு ஒரு பாடங்கற்பிக்க முனைந்து அலையும் சிறில்......


எங்கள் சொந்தக் 'கொழுவ' லுக்கு ஒரு இனவாத முலாம் பூசும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறான்!


நாணா உலுக்கினான்.


"என்னடா, இன்னுமா நடுக்கம்?'


நான் தலையாட்டினேன்.


ராஜநாயகம் வந்தாயிற்று. மூவரும் பஸ்தரிப்புக்கு வந்தோம்.


பஸ்ஸைப் பார்த்துக்கொண்டு நின்ற அலுப்பில் நேரம் ஊர்வது போலிருந்தது. பஸ்தரிப்பில் எங்களைவிட வேறெவருமில்லை. இரைந்தபடி குறுக்கும் நெடுக்கும் போய்க்கொண்டிருந்த 'டாக்ஸி'களும் மறைந்துவிட்டன.


பின் புறத்திலிருந்து ஒரு திரும்பினால் - செருமல் கேட்டது.


சிறில்! இன்னும் யாரோ இரண்டுபேருடன் நின்றான். "நாணா......" என்றேன். இதற்குள் சிறில் மிக அருகில் வந்துவிட்டான் - தமிழர்களைப் படுமோசமாகத் திட்டியபடி. அவனுக்கு நல்ல வெறி. "இண்டைக்கு நான் உன்னைக் கொன்றாலுஞ் சரி! ஆனா நீ என்னைத் தொட் டியோ, 'தமிழன் சிங்களவனை அடித்தா'னென்று நாளைக்கு கொழும்பே கலங்கும். கவனம்!" என்னைப் பார்த்துக் குழறினான். 


நாணயக்கார வாயிலிருந்த சிகரட்டை எறிந்த அடுத்த கணம் சிறிலின் சட்டை அவன் கையிலிருந்தது! '''சி'யைத் 'த' அடித்தால்தானே, பிழை? டேய் காவாலி! 'சி'யை 'சி'யே அடிக்கிறேன் - நானும் 'சி' நீயும் 'சி'! இனி எப்படி இனக்கலவரம் வரும்? எளிய ராஸ்கல்...... உன்ர அக்கிரமத்துக்கு அவன் துணை வரேல்லையெண்டு. இந்த வேலையா செய்யிறாய்?"--நாணாவின் வாய்ப்பேச்சு இவ்வளவு தான்.


அம்மூவரும் ' நிறைவெறி'யில் நின்றதால் என் நண் பனின் வேலை இலகுவாயிற்று. திகைப்பில் கரைந்த  நிமிடங்கள்…..


"இனி, இந்த வேலையை நினையாதே!" - விழுந் தவனுக்கு நாணாவின் குரல் அபயமளித்தது.


ராஜநாயகம் 'டாக்ஸி'க்கு கைதட்டினான்.

Sunday, December 15, 2024

குறியீடுகள் இன்றி ஒரு படம் -ஈரான் இயக்குனர் பேட்டி


பிரபல ஈரான் இயக்குநர் முகமது ரசூலோஃப் பேட்டி 

....



The Seed of the Sacred Fig" திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான ஜெர்மனி சார்பாக கலந்து கொள்கி றது . சினிமா அதன் தேசியத்தைப் பொரு த்தவரை மிகவும் நெகிழ்வானதாக மாறி வருகிறதா?


இந்த திரைப்படம் அதன் தயாரிப்பு மற்றும் நிதி முதலீட்டைப் பொரு த்தவரை ஜெர்மனி படமாகும் , இப்போது நான்

மேலும் அதன் மூன்று நடிகர்களான - சோஹைலா கோலெஸ்தானி, மஹ்சா ரோஸ்டாமி மற்றும் செடரே மாலேகி - ஜெர்மனியில் நாடுகடத்தப்பட்டு வாழ்கின்றனர். எனவே, இது  ஈரானிய படமாகவும் இருக்கிறது. இருப்பினும், இது எனக்கு இன்னும் எதிர்பாராதது. இந்த சாத்தியக்கூறு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது, இது நம்பிக்கை அளிக்கும் சூழலாகும் 

• உங்கள் வரவிருக்கும் அனிமேஷன் திட்டத்தைப் பற்றி மேலும் என்ன சொல்ல முடியும்?


இது சமகால ஈரானிய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட பகுதியுடன் தொடர்புடையது. இது 60 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு சுவாரஸ்யமான ஈரானிய நாடக ஆசிரியரான அப்பாஸ் நல்பாண்டியனின் வாழ்க்கையுடன் தொடர்புடையது. கதை ஈரானிய புரட்சிக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பிறகு முடிகிறது. இந்தக் காலகட்டத்தை மறுபரிசீலனை செய்து மீண்டும் உருவாக்குவது எனக்கு மிகவும் உற்சாகமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. இதை அனிமேஷனில் மட்டுமே செய்ய முடியும்.


• ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?


வரலாற்று ரீதியாக மிகவும் சுவையான ஒரு அம்சம் உள்ளது. ஈரானில் புரட்சிக்கு முன்பு, நிறைய ஈரானியர்கள், அரசியல்வாதியும் மதத் தலைவருமான அயதுல்லா கொமேனியின் முகத்தை சந்திரனில் பார்க்க முடியும் என்று சொன்னார்கள். அவர்கள் சந்திரனைப் உற்று நோக்கினார்கள் , அங்கே அவருடைய முகத்தைப் பார்த்தார்கள். இந்த மாதிரியான கூட்டு மாயையை நான் அனிமேஷனில் மட்டுமே காட்ட முடியும்.


ஈரானுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


மிகவும் எளிமையானது: நான் திரும்பிச் சென்று நேரடியாக சிறைக்குச் செல்ல முடியும். இப்போது இந்தப் புதிய படத்துடன் எனக்கு ஒரு புதிய வழக்கு உள்ளது.


இருப்பினும், ஈரானிய ஆட்சியின் முதல் பயம் நான் அல்லது எங்களைப் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல. புதிய இயக்குநர்கள், புதிய தலைமுறை கலைஞர்கள் தணிக்கையைப் புறக்கணித்து, அவர்கள் விரும்பும் படங்களைத் தயாரிக்கவும், வெளிப்படையாகத் தங்களை வெளிப்படுத்தவும் தயங்குவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் நான் தப்பி ஓட முடிவு செய்ததற்கான காரணம், எனக்குச் சொல்ல இன்னும் நிறைய கதைகள் உள்ளன. நான் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க விரும்புகிறேன். எனது தண்டனையை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்வதன் மூலம், நான் ஒரு பாதிக்கப்பட்டவராக மட்டுமே இருப்பேன் என்பதை உணர்ந்தேன். பாதிக்கப்பட்டவரின் இந்த நிலையை நான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை

இப்படம் எவ்வகையில் உங்களது முந்தைய படங்களில் இருந்து மாறுபடுகிறது 

குறியீடு கள் அற்ற ஒரு படம் 

ஒடுக்குமுறை மற்றும் தணிக்கை சூழலில் குறியீட்டின் தேர்வு வேறுபட்ட மதிப்பைக் கொண்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். இது வெறும் ஸ்டைலிஸ்டிக் தேர்வு மட்டுமல்ல. பய உணர்வு வியாபித்து உள்ளது  உருவகம் என்பது அதிலிருந்து உங்களை நீங்களே கையாள்வதற்கான ஒரு வழியாகும். இது தணிக்கையுடன் மோதலைத் தவிர்க்க உங்களை அனுமதிக்கும் ஒரு மொழியை அடைய உதவுகிறது.  இந்த பயத்துடன் நான் பணியாற்ற இனியும் விரும்பவில்லை, எனவே நான் மிகவும் நேரடியாகவும் வெளிப்படையாகவும் இருக்க முடிவு செய்தேன்.






Wednesday, December 11, 2024

பரோவ்ஸ்கி, அனிபால் மோந்தேய்ரோ மச்சாதோ.ஜான் அப்டைக் சிறு குறிப்புகள் ,

 டெடுயூஸ் பரோவ்ஸ்கி


(1922 - 1951)


பொலிஷ் கவிஞர், சிறுகதைப் படைப்பாளி, பத்திரிகையாளர். 1922ஆம் ஆண்டு பிறந்த டெடுயூஸ் பரோவ்ஸ்கி, முப்பது வயதுகூட ஆகியிருக்காத நிலையில், 1951ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை; எனினும் இதில் சோவியத்தும் ஜெர்மனியும் கணிசமான பங்கு வகித்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.


சோவியத் labour campஇல் அவரின் பெற்றோர் பல வருடங்களைக் கழித்தனர். ஜெர்மன் ஆக்கிரமிப்பின்போது மிக மோசமான தலைமறைவு வாழ்க்கையை எதிர்கொண்ட பரோவ்ஸ்கி, பின்னர் கைப்பற்றப்பட்டு வதை முகாமில் (concen- tration camp) இரண்டாண்டுகள் 1943-45 இருக்க நேரிட்டது.


உலுக்கியெடுக்கும் இவரது கதைகள் 'This Way for the Gas, Ladies and Gentlemen' (Penguin) வெளி வந்திருக்கின்றன. பரோவ்ஸ்கியைப் பொறுத்தவரை, வதை முகாம் என்பது ஒரு உருமாதிரி. வெளி உலகமும் மிகப் பெரியதோர் வதை முகாமாகவே இருக்கிறது. வெளி உலகின் சகஜமானதோர் பகுதியாகவே 'வதை முகாம்' இருக்கிறது. உரு மாதிரியான வதை முகாமில் நடைபெறும் உறைய வைக்கிற ஒரு சம்பவமே 'இரவு உணவு.'

......

அனிபால் மோந்தேய்ரோ மச்சாதோ


(1895 1964)


பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். சட்டம் பயின்று அரசு வக்கீலாகப் பணிபுரியத் தொடங்கிய இவர் அத்தொழிலை ஒரு வருடத்தில் கைவிட்டார். பின்னர் ஒரு உயர்நிலைப் பள்ளியில் இலக்கியம் கற்பித்தார். பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி யிருக்கிறார்.


கட்டுரைகள், கதைகள், 2 நாடகங்கள், ஒரு நாவல் எழுதியிருக்கிறார். இரண்டு நாடகங்களில் ஒன்று 'பியானோ' கதையை அடிப்படையாகக் கொண்டது. இன்றைய லத்தீன் அமெரிக்க இலக்கிய மறுமலர்ச்சியின் கூறுகளை அதன் ஆரம்ப காலத்திலேயே இவரின் எழுத்துகள் உட்கொண்டிருந்தன.


‘பியானோ’, மரபுரீதியான யதார்த்த வெளிப்பாட்டுத் தன்மையும், இன்று பரவலாக அறியப்படுகிற லத்தீன், அமெரிக்க இலக்கியத்தின் மாந்த்ரீக யதார்த்தத்தின் வெளிப்பாட்டு பாணியும் இசைவாகக் கலந்திருக்கும் கதை.

......

ஜான் அப்டைக்


(1932 - )


அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற எழுத்தாளர். அன்றாட வாழ்வின் அனுபவங்கள் சார்ந்து நெகிழ்வான உரைநடையில் கதை சொல்பவர். அதேசமயம் கதைத் தளத்தில் இழையோடும் நுட்பங்கள் சார்ந்து மேலெழும் தள மாற்றங்கள் மூலம் ஆச்சரியங் களை நிகழ்த்துபவர்.


1932ஆம் ஆண்டு மார்ச் 18ஆம் தேதி பென்சிலிவேனி யாவின் ஷில்லிங்டனில் பிறந்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நுண்கலைப் படிப்பு மேற்கொண்டார். இவருடைய எழுத்தில் வெளிப்படும் காட்சிரீதியான துல்லியம் ஓவியக் கல்வி யிலிருந்து இவர் பெற்றது.


கவிஞர், ஓவியர், சிறுகதை-நாவல் படைப்பாளி. கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் எனப் பல்வேறு வெளிப்பாட்டுத் தளங்களில் அயராது செயல்பட்டுக் கொண்டி ருப்பவர். எழுத்துக்காக அமெரிக்க நிறுவனங்கள் அளிக்கும் அனைத்துப் பரிசுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றிருப்பவர்.


'நகரம்' சிறுகதை 1983ஆம் ஆண்டுக்கான 'ஓ ஹென்ரி விருது' பரிசுக் கதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.


From..

நவீன உலக சிறுகதைகள் -C மோகன் 




Tuesday, December 10, 2024

ஒரு கடலோர கிராமத்தின் கதை - நாவலின் பின்புலம்

ஒரு கடலோர கிராமத்தின்  கதை - நாவலின் பின்புலம் -தோப்பில் முகமது மீரான் 

....


அன்று கிராமத்தில் யார் வீட்டிலும் திருமணம் நடந்தாலும் , அந்த வீடுகளில் கசாப்பு 

செ ய்யப்படு ம்  ஆடு களின் எல்லா ஈரலையும் பள்ளிவாசல் நிர்வாகம் நடத்தும் முதலாளியின் 'மோலாளி வீடு. என்று அழைக்கப்படும் வீட்டிற்கு கொடுத்தனுப்ப வேண்டும். இது கண்டிப்பான ஊர் சட்டம் ஈரல்களை மோலாளி வீட்டிற்கு கொடுத்தனுப்பினால் தான், பள்ளிவாசலிலிருந்து திருமணம் நடத்தி வைக்க மத புரோகிதர்கள் வருவார்கள். திருமணம். பதிவு செய்யப்படும் 'நிக்காஹ் புத்தகமும்' கொண்டு வரப்படும். இப்படி ஒரு அநியாயச் சட்டம் நடைமுறையில் இருக்கும் போது, என் பாட்டனாருடைய மூத்த மகளுடைய, அதாவது என் தகப்ப னாருடைய மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. ஆடுகள் அறுக்கப்பட்டன. ஆனால் என் பாட்டனார் முதலாளி இல்லத்திற்கு ஈரலைக் கொடுத்தனுப்ப மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அது வரையிலும் யாரும் மீறா த சட்டத்தை மீறிய செயலைக்கண்டு முத லாளி சினம் கொண்டு வெகுண்டெழுந்தார். திருமணம் நடத்தி வைக்க மத புரோகிதர்களை அனுப்பவில்லை. திருமண பதிவுப் புத்தகமும் கொடுத்தனுப்பவில்லை. இதைக்கண்டு என் பாட்ட னார் கொஞ்சமும் அஞ்சவில்லை. மத அறிஞரான என் பெரிய தகப்பனார் புரோகிதராக இருந்து என் மாமியின் திருமணத்தை நடத்திக் காட்டினார். அந்த திருமணம் பள்ளிபுத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. பள்ளிவாசல் நிர்வாகத்தை எதிர்த்து முதல் முதலாக நடந்த திருமணம் இதுவாகும். எங்கள் மீது ஏற்படுத் திய முதல் ஊர்விலக்கும் இதுதான். இந்நிகழ்ச்சியை என் முதல் நாவலில் குறிப்பிட்டுள்ளேன். மகமூது தன்னுடைய மகளுடைய திருமணத்தை தானே நடத்தி வைக்கும் நிகழ்வு


ஊரின் மேற்குப்பகுதியிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசலில் மட்டும் அன்று தொழுகை நடந்து வந்தது. முதலாளி வந்தால்தான் பள்ளிவாசலில் தொழுகை நடத்தவேண்டும் என்ற எழுதப்படாத ஒரு சட்டம் அமுலில் இருந்தது. இதை என் பாட்டனார் கடுமை யாக எதிர்த்து வந்தார். ஆனால் பள்ளிவாசலுக்குள் அது ஒரு ஒற்றை எதிர்ப்புக்குரலாகவே உயர்ந்து கேட்டது. பள்ளிவாசல் நிர்வாகத்தின் மீது எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தோப்பு பகு தியில் ஒரு பள்ளிவாசலை, அந்த பகுதியிலுள்ள வேறு சிலருடைய மறைமுக உதவியுடன் கட்டினார்.



தன்னை மீறி, திமிராக ஒரு பள்ளிவாசலை கட்டி விட்டானே என்று என் பாட்டனார் மீது கோபம் கொண்ட முதலாளி, வஞ்சம் தீர்க்க தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தார். என் பாட்டனாரின் மறைவுக்குப் பின்னும் வஞ்சக உள்ளம் அடங்காத முதலாளி, அவர் நினைத்தபடி பாட்டனாரின் பிள்ளைகள் மீது வஞ்சம் தீர்த்துக்கொண்டார். அதில் பலியானது என் சிறிய தகப்பனார். இவருக்குத்தான் 'கூனன் தோப்பை' சமர்ப்பணம் செய்துள்ளேன்.


இந்த நாவலில் குறிப்பிட்டுள்ள குத்துக்கல்லின் அருகாமையில் என் சிறிய தகப்பனாருடைய வீடு இருந்தது. அதன் பின் பகுதியில் பணவசதி படைத்த விதவைப்பெண் ஒருத்தி தன்னத் தனியாக தங்கி வந்தாள். ஏதோ சில அந்தரங்க காரணத்தினால் அந்த விதவையை முதலாளி தன்னுடைய ஏவலாட்களை அனுப்பி கொலை செய்து விட்டார். அன்று ஊருக்குள் எந்த குற்றச் செயலும் நடந்தால், போலீஸ்காரர்கள் முதலாளியிடம் வரு வார்கள். முதலாளி நினைத்தால் ஒருவரை வழக்கில் குற்ற வாளியாகவோ நிரபராதியாகவோ ஆக்கலாம். இந்த அதி காரத்தை பயன்படுத்தி,முதலாளி அந்தக் கொலை வழக்கில் என் சிறிய தகப்பனாரைக் குற்றவாளியாக்கிவிட்டார். இவன் தான் கொலை செய்தான் என்று ஓங்கி பேசி,எங்கள் குடும் பத்தின் மீது அவருக்கிருந்த வஞ்சத்தைத் தீர்த்துக்கொண்டார். அன்று அந்த சுற்று வட்டாரங்களை உலுக்கிய மாபெரும். கொலை வழக்கு அது. அந்த கொலை வழக்கிற்கெதிராக என் தகப்பனார் தன்னந் தனியாக வாதாடி, என் சிறிய தகப்பனா ருக்கு விடுதலை வாங்கினார். அந்த வழக்கோடு, எங்கள் குடும்பப் பொருளாதார நிலை மிகவும் சரிந்துவிட்டது. நாங்கள் மேலும் ஏழ்மையில் மூழ்கினோம். லக்ஷ்மி என்ற பெண் ஒருத்தியை முதலாளி கறுப்பன் என்ற ஏவலாளை அனுப்பி கொலை செய்யும் ஒரு நிகழ்ச்சி நாவலில் வருவது மேல் சொன்ன அதே கொலை நிகழ்ச்சிதான். நாவலின் விரிவை எண்ணி கொலை வழக்கு விபரத்தை வீட்டுவிட்டேன்


இது நிரபராதிகளான எங்கள் மீது, அன்று ஆதிக்க சக்தி சுமத்திய முதல் கொலைக்குற்றம்


பொருளாதார ரீதியாக குடும்பம் சரிந்துவிட்டதால், என் தகப் பனார் நீண்டகாலமாக மௌனமாகவே வாழ்ந்து வந்தார். வருடங்களின் ஒவ்வொரு இரவிலும், என்னையும்   என் உடன்பிறப்புக்களையும் அழைத்து, அதிகார வர்க்கங்களின் கை நக முனைகளில் அவர் பட்ட அவதிகளையும், அவருடைய தக ப்பனாருக்கு நேர்ந்த இன்னல்களையும், கண்கலங்கக் கூறு வார். கிராமத்தின் முந்தைய நிலைமைகளையும், ஊர் தலைவர் களின் அடாவடித்தனங்களையும் மனக்குமுறலோடு சொல்லும் போது, என் பிஞ்சு மனசில் அவை பதிவாகி கொண்டிருந்தன.


என் தகப்பனாரின் கலங்கிச் சிவந்த கண்ணும்,மனக் குமுறலும் என் சிறு பருவத்திலேயே எனக்குள் ஒரு கலகக்காரனை உரு வாக்கிவிட்டன. ஊருக்குள் பெருந்தனக்காரர்கள் காட்டும் அடா வடித்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு தடவை ஊர் தலைவரை அவரது முகத்திற்கு முன் நின்று கடும் வார்த்தைகளால் எதிர்த்தேன். மட்டுமல்ல, ஊர் தலை வரையும் ஊர் அமைப்பு உறுப்பினர்களையும் ''ஒரு நொண்டி கழுதையும் நாற்பது குருட்டுக் கழுதையும்" என்று கிண்டல் செய்து, ஒரு சிறுகதை எழுதி வெளியிட்டேன். பகைமையை கன் னத்தில் ஒதுக்கிக் கொண்டு திரிந்த ஊர் முக்கியஸ்தர்கள், எங் களை பழிவாங்கச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டே நடந்தனர்.


என் மூத்த சகோதரருடைய மைத்துனரின் திருமணம் அந்தச் சந் தர்ப்பத்தில் நடந்தது. திருமணம் முன் நின்று நடத்தி வைத்தது. என் சகோதரர். அன்று வரையிலும் திருமணத்திற்கு பிறகுதான் ஊர் பணம் செலுத்துவது வழக்கமாகயிருந்து வந்தது. ஆனால் எங்கள் மீது வஞ்சம் தீர்க்க வேண்டுமென்று எண்ணியிருந்த ஊர் தலைவர், திருமணத்திற்கு முன் ஊர் பணம் செலுத்தவில்லை என்ற ஊனமான காரணத்தைக்காட்டி, திருமண நாளன்று புரோகிதர்களை அனுப்ப மறுத்துவிட்டார். என் சகோதரர் இந்த சதிச் செயலுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தார். கோப மடைந்த ஊர் தலைவர், குளிர் நடுங்கவைக்கும் நடுநிசியில் தூங்கிக் கொண்டிருந்த முஹல்லா உறுப்பினர்களை உசுப்பிக் கொண்டு வந்து ஊர் கூட்டம் போட்டு, அவர் போட்ட திட்டப் படி ஊர் விலக்கம் செய்து, அந்த திருமணத்தைச் சின்னா பின்னமாக்கிவிட்டார்.


இந்த ஊர் விலக்கம் நடக்கும் போது, நான் சென்னையில் இருந் தேன், இது 1970- களில் நடந்த நிகழ்ச்சி. சென்னையிலிருந்த என்னுடைய மனம் கடலானது. மனம் எழுப்பிய அலை சக்தியில் அப்பவே பேனா எடுத்து எழுதினேன், ஒரு சிறுகதை - பிரசி டன்ட் சுல்தான் பிள்ளை'. அன்று தமிழ் நாடெங்கும் முஸ்லிம் வட் த்தில் ஒரு பரபரப்பை உண்டு பண்ணிய சிறுகதை இது.

இந்த சிறுகதையில்தான் மேல் குறிப்பிட்ட வாசகம் வருகிறது முஹல்ல நிர்வாகம் எனக்கெதிராக கொதித்தெழுந்தது. நீதிமன்றத்தை அணுகியது. கதை மிக சூசகமான முறையில் ஒரு சமுதாய விமர் சனமாக அமைந்திருந்ததால், அவர்களுக்கு வழக்குத் தொடர வாய்ப்புக் கிடைக்காமல் போய்விட்டது.


நான் சென்னையை விட்டு 1973ல் ஊருக்கு வரும்போது கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. எங்கள் குடும்பம் ஊரிலி ருந்து தனிமைப்பட்டு காணப்பட்டது. எங்களோடு பேச அனை வரும் அச்சப்பட்டனர். நண்பர்கள் உறவினர்கள் எங்களைக் கண்டு விலகிச்சென்றனர். ஊருக்குள் நாங்கள் தீண்டாதவர்கள் ஆனோம். பள்ளிவாசலுக்குள் நுழையக்கூடாது என்று விலக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் இருந்ததால், பள்ளி வாசல் படியை மிதிக்கும் போதெல்லாம் என் கால்கள் நடுங்கின. அந்த நாட்கள் சிரிப்பை மறந்த நாட்கள். பய உணர்வு மனத்தை அரித்துக் கொண்டேயிருந்தது. ஏனென்றால், ஊர் மக்களெல்லாம் ஊர் நிர்வாகத்தின் காட்டு மிராண்டித்தனத்தைக் கண்டு நடுங்கி ஊரோடு ஒட்டிக் கொண்டார்கள். எங்கள் வீடு மட்டும் தனிமைப் பட்டு நின்றது, எங்களைத் தாக்க வெளி ஊரிலிருந்து குண்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த ஆபத்தான கட்டத்தில், மனி தாபிமான அடிப்படையில், எங்களை காப்பாற்றியவர்கள் அங்கே யுள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள்,


ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வைத்து ஒரு வயோதிகர் என்னை சந்தித்தார். இந்த ஊர்விலக்கு நடந்த இரவு, ஊர் அல்லோல கல்லோலமாய் காணப்பட்ட நிகழ்ச்சியை என்னிடம் விளக்கினார். பண்டு முதலாளிமார்கள் உட்கார்ந்து தீர்ப்பு வழங்கிய அதே கறுப்புக் கல்லின் மீது, அந்த முதலாளி மார்கள் உட்கார்ந்திருந்த அதே தோரணையில் உட்கார்ந்துதான் தலைவர் ஊர் விலக்கத்திற்கு கட்டளை பிறப்பித்தார் என்று கூறி னார். இந்த கறுப்புக்கல் துறைமுகத்தில் ஒரு முக்கிய கதாபாத் திரம் என் மனசில் என் தகப்பனார் அன்று சொல்லிய அனைத்து நிகழ்ச்சிகளும் சுருள் விரித்தன. என் மனத்தில் பல கதாபாத்தி ரங்கள் அடி தூக்கி வைத்தன. பற்பல சித்திரங்களைக் கொண்டு மனம் நிரம்பியது. பழைய பிரதாபச் செருக்குகளின் சொஞ்சாடிகள் இன்னும் இங்கு எஞ்சியிருக்கின்றன என்று எனக்கு தோன்றியது. இவற்றை பெருக்கிக்கூட்டி வெளியே வீச வேண்டும் என்ற எண் ணம் உருவாகியது. அதற்கு நான் கண்ட ஒரே ஆயுதம் என் பேனா தான். என் மனத்தை அரித்துக் கொண்டிருந்த குமுறலை


எழுத்தாக இறக்கி வைக்கத் துவங்கினேன், அந்த மனக்குமுற களே, என் முதல் நாவலான ஒரு கடலோர கிராமத்தின் கதையி ன் பின்புலம்.


ஜேஜே சில குறிப்புகள் உருவான தருணம் - சுந்தர ராமசாமி

 ஜே. ஜே. சில குறிப்புகள் நாவலுக்குரிய உத்வேகம் சுற்செய லாக என்னிடம் வெளிப்பட்டது. உண்மையில் நான் எழுதிக் கொண்டிருந்தது மற்றொரு நாவல். அந்த நாவலில் ஒரு கதா பாத்திரத்தின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பல நண்பர்களும் தாழ்த்தப்பட்டோர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் சட்டம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது விவாதத்தில் ஒரு தேக்கம் உருவாகிறது. பேசிக்கொண்டிருக்கும் கதாபாத்திரம் ஒன்று மறுநாள் தன் சகோதரனான சம்பத்தை அழைத்து வரு வதாகவும் அவன் சில புதிய விஷயங்களைக் கூறி முடிச்சு விழுந்துவிட்ட சிந்தனையை மேலெடுத்துச் செல்வான் என்றும் சொல்கிறது. மறுநாள் சம்பத் வந்து பேசுகிறான். விவாதம் தொடர்கிறது. தன் நண்பனும், மலையாள இலக்கியத்தின் புகழ் பெற்ற படைப்பாளியும், ஓவியனுமான ஜோசஃப் ஜேம்ஸை தான் மறுநாள் அழைத்து வருவதாகவும், கூரிய சிந்தனை வாதியான தன் நண்பன் விவாத விஷயத்தை முற்றிலும் புதிய கோணத்தில் பேசுவான் என்றும் சம்பத் சொல்கிறான்.


ஜோசஃப் ஜேம்ஸ் என்ற பெயர்ச்சொல்லை எழுதிய நிமிஷத் தில் என் மனம் சிறகு கட்டிப் பறக்கத் தொடங்கிற்று,மலை யாள இலக்கியம் சார்ந்தும், மலையாள வாழ்க்கை சார்ந்தும், நான் பெற்றிருந்த அனுபவங்களின் சாரங்கள் என் மனதில் திரண்டன. மிகுந்த உவகை தரும் ஆவேசத்திற்கு ஆட்பட் டேன். எழுதிக் கொண்டிருந்த பெரிய நாவலைஅப்படியே. விட்டுவிட்டு என் மனதை வெகுவாகக்   கவர்ந்த, சிந்தனைத் தெறிப்புகள் கொண்ட , ஆவேசம் மிகுந்த ஜோசஃப் ஜேம்ஸ் என்ற பாத்திரத்தை பின்தொடர்ந்து செல்லத் தொடங்கினேன்

 நான் மிகவும் விரும்பும் ஒரு மன உலகம் கலைப்பாங்காக  விரியத் தொடங்கிற்று. ஜோசஃப் ஜேம்ஸின் ஆவேசம் தான் என்னை இழுத்துக் கொண்டு போய் முழு நாவலையும் எழுத வைத்தது என்று நினைக்கிறேன்.


ஜே. ஜே. சில குறிப்புகள் மலையாளக் கலாச்சார உலகத்தைப் பின்னணியாகக் கொண்டதுதான். ஆனால் உண்மையில் அது தமிழ் கலாச்சார உலகம் சார்ந்து முன் வைக்கப்பட்ட ஒரு விமர் சனம். தமிழ் வாழ்வின் சாரம் சார்ந்த ஒரு விமர்சனம்.


தமிழ் வாழ்வை விமர்சிக்க மலையாளக் கலாச்சாரப் பின்னணி எதற்கு என்ற கேள்வி எழலாம். என்னிடமிருக்கும் குறையை ஒருவர் தன்னிடமிருக்கும் குறையாகக் கண்டு அக்குறையைச் சார்ந்து என்னிடம் பேசினால் அக்குறைகளுக்கு நான் செவி மடுக்கிறேன். அவற்றை கிரகித்துக் கொள்கிறேன். சிறிது சிந்திக் கவும் செய்கிறேன். அதே குறைகளை என்னுடைய குறை களாக அவர் முன்னிறுத்தினால் என் மனம் விலகி அந்நியப்படு கிறது. எதிர்மறையான பாதிப்பும் அடைகிறது.


தமிழ் வாசகர்களை அந்நியப்படுத்தாமல் தமிழ் வாழ்க்கை சார்ந்த விமர்சனத்தை முன் வைக்கவேண்டும் என்ற ஆசை ஜே.ஜே. சில குறிப்புகள் எழுதும் போது என்னை அறியாமலே என்னிடம் வெளிப்பட்டிருக்க வேண்டும்.

Monday, December 9, 2024

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன்

எழுத்தாளர்களும் அவர்களது நடையும் - என் ஆர் தாசன் 


எல்லா இலக்கிய இனங்களுக்கும் உருவம் முக்கியமானது தான். ஆனால் கவிதைக்கும். உருவத்திற்கும் உள்ள உறவு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் கவிதைக்கும் மொழிக்கும் உள்ள பந்தம் ரொம்பவும் இறுக்கமானது ஒருமொழி பெயர்ப்பில் அழிந்து விடுவது எதுவோ அது தான் கவிதை' என்று விமர்சகர்கள் கூறுகிற அளவிற்கு உருவத்தோடு கவிதை உறவு கொண்டிருக்கிறது.

கவிதைகளுக்கு மட்டுமல்ல, எல்லா இலக்கிய வகை களுக்குமே உருவம் முக்கியமானது. '


ஒரு ஊரில் ஒரு   
ராஜா இருந்தாராம்' என்று கதை துவங்கும் போதே அது அனுபவ முதிர்ச்சியற்ற, குழந்தை நிலைக்கான உணர்ச்சி களோடு சம்பந்தப்பட்டது என்பது வெளிப்பட்டுப் போகிறது. "நித்யத்வத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப் பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந் தது அவன் கதை" என்று துவங்கும் 'பிரம்மராக்ஷஸ், கதையில் அனுபவ முதிர்ச்சியின் கம்பீரத்தை நம்மால் கண்டு கொள்ள முடிகிறது.

மொழி எல்லோருக்குமான பொதுச் சொத்தாயினும் மொழியிலிருந்து உருவாக்கப்படும் நடை ஒவ்வொருவருக் கும் வேறுபட்டு தனித்து நிற்க வேண்டும். பல சமயங் களில் எழுத்தாளனின் இலக்கிய ஆளுமைக்கும், படைப் பாற்றலுக்கும் நடையே அடையாளமாக நிற்கிறது. சிறு சிறு வாக்கியங்களும் சமூகப் பிரக்ஞை நிறைந்த கிண்டலும் ஆழ்ந்த தத்துவங்களும் புதுமைப்பித்தனை அடையாளம் காட்டுகின்றன.

"நான் மட்டும் ஏன் பேய் போல் அலைய வேண்டும்? அது தான் விதி என்று சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டுமாம். மனிதன்,விதி, தெய்வம்; தள்ளு வெறும் குப்பை, புழு, கனவுகள்!" என்றும்,

"மனுஷ அளவைகளுக்குள் எல்லாம் அடைபடாத அதீத சக்தி, ஏதோ உன்மத்த வேகத்தில் காயுருட்டிச் சொக்கட் டான் ஆடிறது போல்......" என்றும்,

'அதோ மூலையில் சுவரின் அருகில் பார்த்தீர்களா? சிருஷ்டித் தொழில் நடக்கிறது'' என்றும் வருகிற வரிகளை வைத்துக் கொண்டே அவை புதுமைப்பித்தன் எழுத்துக் கள் என்று சொல்லி விட முடியும்.

"சப்தங்கள் இல்லாத இடத்தில் சப்தங்கள் கேட்டன. சப்தங்கள் இருக்கும் இடத்தில் காது செவிடாகி விட்டது"


என்று வார்த்தைகளைப் பின்னிப் பிசைந்து அர்த்தங் களைத் திரட்டித் தருவது லா. ச. ராமாமிருதத்தின் நடையாகும். 

.உயிரிருப்பதால் உடலும், உடல் இருப்பதால் உணவும், உணவுக்காக உத்யோகமும், உத்யோகத்திற்காக சில வெளிப்பூச்சுக்களும் கொண்டு அவள் உயிர் சுமந்து, உணவருந்தி, உத்யோகம் பார்த்து, ஒப்புக்கு அலங்காரம் செய்து கொண்டு உலவி வருகின்ற காரணத்தை மட்டும் வைத்து, 'கௌரிக்கு வாழ்க்கை ரொம்பவும் பிடித்திருக் கிறது' என்று முடிவு கட்டி விட முடியுமா?" என்று சூழ் நிலையின் பல்வேறு கூறுகளையும் துளி சிந்தாமல் ஒரே மூச்சில் உள்ளடக்கி வெளிப்படுத்துகிற நடை ஜெயகாந்த னுடையதாகும்.

படைப்பின் ஒவ்வொரு அணுவிலும் ஆசிரியன் இருக்க வேண்டும். ஆனால் அவனின் சுண்டு விரலின் நுனி நகம் கூட வெளித் தெரியக் கூடாது." "An artist must be in his work like God in creation invisible and all powerful; he should be everywhere felt, but nowhere seen." ஃப்ளேபாரின் கருத்து நூற்றுக்கு நூறு பின்பற்றப் பட வேணடும். இதன் காரணம் அழகுணர்ச்சியோடு சம்பந்தப்பட்டதாகும். ஆசிரியரின் குறுக்கீடு தோன்றி யதும் என்ன விளைவுகள் தோன்றுகின்றன? 'இது கதை; எவனோ ஒருவன் பொழுது போகாமல் கதை சொல்லிக் கொண்டிருக்கிறான்' என்ற நினைப்பு வாசகனுக்குத் தோன்றியதுமே அவன் பாத்திரங்களோடு ஒன்ற முடியாது. அப்படி ஒன்றாமல் போனால் படைப்பின் நோக்கம் முழுமை அடையாது. ஏனென்றால் ஒரு படைப்பின் மறு பாதி பூர்த்தியாவது வாசகனின் மனத்தில் தான். 

தமிழில் ஆரம்ப கால நாவல்களான 'பிரதாப  முதலியார் சரித்திரம்' போன்றவற்றில் ஆசிரியர் குறுக்கீடு கள் அதிகம். தனது வாசகர்களின் தோளில் கை போட்டுக் கொண்டு 'காஞ்சிக்குப் போகலாம்; வாதாபி பார்க்கலாம்' என கல்கி அழைத்துப் போவார். உருவப் பிரக்ஞையும், கலைத்தேர்ச்சியும் மிக்க புதுமைப்பித்தன் கூட உணர்ச்சி மேலீட்டில் வரம்பைக் கடந்திருக்கிறார். 'என்னமோ கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே! இது தான் ஐயா, பொன்னகரம்” என்று 'பொன்னகரம்' கதை யிலும், "பழையன கழியும், புதியன வரும். இது உலக இயற்கையாம்!'' என்று 'தெருவிளக்கு' கதையிலும் கூறி யிருப்பது ஆசிரியரின் தேவையற்ற தலையீடாகும். "பழைய யுகத்தைச் சேர்ந்தவள் புதிய யுகத்தைச் சந்திக்க வருகிறாள் என்றால்... ஓ . அதற்கோர் மனப்பக்குவம் வேண்டும்" என்று 'யுகசந்தி'யில் ஜெயகாந்தன் கூறுவதும் குறைப்பட்டியலோடு சேர்க்கப்பட வேண்டியதே. 'கற்பு என்று கதைக்கிறீர்களே' போன்ற வரிகள் வாசகன் வாயி பிருந்து வர வேண்டும். வருவதற்கான உணர்ச்சியை ட்டும் தான் ஆசிரியன் உருவாக்க வேண்டும். மாறாக ாசகனைத் தள்ளி விட்டு அந்த இடத்தில் ஆசிரியன் போய்   நின்று வாசகன் பாத்திரத்தை ஏற்பது அழகியலாகாது.

Sunday, December 8, 2024

தமிழ் எழுத்தாளனும் வட இந்தியர்களும் -அகிலன் அனுபவம்

 





அகிலனுடன் நான் - அமுதவன்
 

( இலக்கியவெளி இதழ் கட்டுரை )


இ து எழுத்தாளர் அகிலன் அவர்களுக்கு நூற்றாண்டு 


அகிலனுடைய மூத்த மகன் அகிலன் கண்ணன் எனக்கு நல்ல நண்பர். அகிலனுக்கு ஞானபீட விருது அறிவித்தபோது கண்ணனிடமிருந்து போன் வந்தது. "ஐயாவுக்கு (அவர்கள் வீட்டில் அப்பாவை ஐயா என்றுதான் அழைப்பார்கள்) ஞானபீடம் அறிவித்து இருக்கிறார்கள். டில்லிக்கு வருகிறீர்களா? போய் வருவோம்" என்றார்.


கரும்பு தின்னக் கூலியா? உடனே “வருகிறேன்" என்றேன். அப்படித்தான் அந்த வாய்ப்புக் கிடைத்தது.


ஞானபீடம் என்பது ஒரு தனி அறக்கட்டளை, டெல்லியிலுள்ள டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகிறது. ஜெயின் வம்சத்தினர் இதன் சொந்தக்காரர்கள். வழக்கமாய் ஞானபீடம் பெறுபவர்களுக்கு ஏதாவது ஒரு நட்சத்திர விடுதியில் அறை போடுவார்கள். அங்கே தங்கவைத்து அழைத்துச் சென்று விருது வழங்குவார்கள். இதுதான் நடைமுறை.


அகிலனுக்கு மட்டும் விசேஷம்.


ஜெயின் அகிலனின் வாசகர் என்பதால் விஷயத்தை அகிலனிடம் சொல்லி "வீட்டிலேயே தங்குகிறீர்களா? என்று கேட்டிருக்கிறார்கள். அகிலனும் ''சரி" என்று சொல்லிவிட்டதால் ஜெயின் வீட்டிலேயே தங்குவதற்கு ஏற்பாடானது.


ஜெயின் வீடு என்பது மிகப்பெரிய பங்களா. மாளிகை என்றும் சொல்லலாம். ஷெட் மட்டுமே ஒரு பத்து பதினைந்து இருக்கும். அத்தனையிலும் கார்கள்... சீருடை போட்ட டிரைவர்கள் தயாராக இருப்பார்கள். அகிலன்வருகிறார் என்பதற்காக அவருக்கு உணவு தயாரிக்க தஞ்சாவூரிலிருந்து ஒரு சமையற்காரர்... ஏ.சி.செய்யப்ட்ட தனி அறை,


- இத்தனை வசதிகளோடு இன்னொரு வசதியும் சேர்ந்து கொண்டது. காலையிலேயே ஒரு கட்டு கொடுத்து விடுவார்கள். மிகப்பெரிய பேப்பர் கட்டு. டைம்ஸ் ஆப் - இந்தியா என்னென்ன செய்தித் தாள்கள், மாதாந்திர, வார இதழ்கள் நடத்துகிறதோ, அவை அத்தனையும். ஒரு * கட்டாகக் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டு விடும்.


புது டில்லி என்பதால் நிறைய மத்திய அமைச்சர்களும், எம்.பிக்களும் அகிலனை மதிய விருந்துக்கும், இரவு விருந்துக்கும் அழைத்திருந்தார்கள். இவர்களிடம் விஷயத்தைச் சொல்லிக் கார் கேட்டபோது படு ஸ்ட்ரிக்டாகச் சொல்லி விட்டார்கள்.


“பிரதமர், ஜனாதிபதியைத் தவிர யார் வீட்டிற்கும் நீங்கள் போகக்கூடாது. நாட்டின் உயரிய விருதை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அதனால் அவர்கள்தான் உங்களைப் பார்த்துச் செல்ல இங்கே வரவேண்டும்."


அதன்படிதான் நடந்தது. ஓ.வி. அளகேசன் போன்றவர்களும்,

நிறைய எம்பிக்களும் அகிலனை ஜெயின் வீட்டிற்கு வந்துதான் பார்த்துப் போனார்கள். நிகழ்ச்சியைக் 'கவர்’ செய்ய ஆனந்த விகடன் சொல்லியிருந்ததால் நான் விகடனுக்கு ஏற்றாற்போல இரண்டு பக்கங்களுக்கு எழுதினேன். நிகழ்ச்சி விஞ்ஞான்பவனில் நடந்தது. அரசு நிகழ்வுகளெல்லாம் விஞ்ஞான்பவனில்தான் நடக்குமாம்.


விஞ்ஞான் பவன் ரொம்பவும் பெரியது. எதிரில் மிகப்பெரிய பால்கனி. அதில் ஏறினால் நடுவில் இருக்கும் செங்குத்தான சரிவில் இறங்கித்தான் ஹாலுக்கு வரவேண்டும். நாங்கள் மேடைக்குப் பக்கத்திலிருக்கும் அறைக்கு கூட்டிச் செல்லப்பட்டு அங்கே தங்க வைக்கப்பட்டோம். பிரதமர் வந்ததும் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு காப்பி, டீயெல்லாம் முடிந்தபிறகு மேடைக்குச் செல்லுவது என்பது ஏற்பாடு. (மொரார்ஜி காப்பி டீயெல்லாம் சாப்பிடமாட்டார்). பிரதமர் வருகைக்காக அந்த அறை ஜோடிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


திடீரென்று ஒரு சின்ன சலனம் அங்கே தோன்றிற்று. நாங்கள் அங்கே காத்திருக்க... வந்த மொரார்ஜி என்ன செய்தாரென்றால் முகப்பிலேயே இறங்கிக் கொண்டு மொத்தப் படிகளிலும் ஏறி செங்குத்தான பாதையில் இறங்கி மேடைக்குப் பக்கத்திலிருக்கும் இன்னொரு அறைக்குச் சென்று அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். அப்போது மொரார்ஜிக்கு தொண்ணூற்றாரோ தொண்ணூற்றேழோ  என்பதுதான். ற்கு வயது. விஷயமறிந்து நாங்கள் அடுத்த அறைக்கு ஓடினோம். மொரார்ஜியைச் சந்தித்தவுடன் அவரிடம் அகிலன் கேட்ட முதல் கேள்வி "எப்படி நீங்கள் உங்கள் உடலை மெயின்டெய்ன் பண்ணுகிறீர்கள்?' சிரித்துக்கொண்டே அவர் சொன்னபதில் “சின்ன வயதிலிருந்தே இயற்கையோடு வாழக் கற்றுக்கொண்டு விட்டேன்"


. பிறகு எங்கள் இருவரையும் பிரதமருக்கு  அறிமுகம் செய்து வைத்தார் அகிலன். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த (நின்றபடியேதான்) பிறகு மேடைக்குச் சென்றார்கள். நானும் அகிலன் கண்ணனும் கீழே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்து கொண்டோம்.


விழா தொடங்கியது.


ஒரு பத்து நிமிடம்போல் ஆகியிருக்கும்...


கீழே பக்கவாட்டில் இருந்த கதவு திறக்கப்பட்டது. வேட்டி கட்டி முரட்டுக் கதர் போட்ட யாரோ ஒரு ஆசாமி உள்ளே நுழைந்தார். அவருடைய தோளில் ஒரு ஜோல்னாப் பை தொங்கிக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு யாரோ ஒரு வட இந்தியக் காட்டான்போல இருந்தார். நேரே வந்தவர் என்னுடைய பக்கத்தில் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். என்னுடைய பக்கம் முகம் சாய்த்து என்னமோ என்னிடம் இந்தியில் கேட்டார். நான் “எனக்கு


இந்தி தெரியாது" என்றும் ஆங்கிலத்தில் கேட்குமாறும் சொன்னேன்.




"இல்லை. ஃபங்ஷன் துவங்கி நேரமாகிவிட்டதா? அகிலன் பேசிவிட்டாரா? என்று கேட்டேன்” என்றார் ஆங்கிலத்தில்.  "பங்ஷன் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் ஞானபீடம் வழங்கப்படவில்லை. பிரதமர் பேசின  பிற்பாடுதான் அகிலன் பேசுவார் என்று நினைக்கிறேன்" என்றேன்.

இந்த நபர் வந்ததிலிருந்தே மொத்தக் கூட்டத்தில் ஒரு சலசலப்பும் குசுகுசு பேச்சுக்களும் இருந்ததைக் குறிப்பிடவே வேண்டும்...


இந்த சலசலப்பு மேடையிலும் தோன்றியது.


யாரோ மேடையிலிருந்து மேடைக்கு வா என்று   அழைப்பதும், இவர் மேடைக்கு நான் வரவில்லை. இங்கேயே இருந்து கொள்கிறேன் என்று சைகை காட்டுவதும் நடந்தது.


பின்னர் மொரார்ஜியே இவரை மேடைக்கு வரும்படி அழைத்தார். பிரதமரின் சொல்லைத் தட்ட முடியாமல் இவரும் மேடைக்குச் சென்றார். பிறகுதான் தெரிந்தது, வந்தவர் கர்ப்பூரி தாக்கூர். அப்போதைய பீகார் மாநிலத்தின் முதல்வர். சின்ன வயதிலிருந்தே அகிலன்பால் ஈர்க்கப்பட்டதால் விமானம் பிடித்து அவசர அவசரமாக வந்தாராம். "நல்ல வேளை முக்கிய நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பே வந்துவிட்டேன்" என்று பேசினார்.


கர்ப்பூரி தாக்கூர், மொரார்ஜி இருவரும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமாகப் பேசினார்கள். அகிலன் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பேசினார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காகவே குடும்பத்தின் மூத்தவர் ஜெயின்  இரண்டோ, மூன்று நாட்களோ பரோலில் வந்திருந்தார். எமர்ஜென்சி காலம் என்பதால் இந்திரா காந்தி அவரையும் பிடித்து ஜெயிலில் போட்டிருந்தார்.


அன்றைக்கு இரவு ஜெயினுடன்தான் இரவு உணவு நடைபெற்றது. அகிலன் சார்பாக ஞானபீட விருது கிடைத்த அன்று மாலை புதுடில்லியிலுள்ள விஐபிக்கள் எல்லாரையும் அழைத்து ஒரு தேநீர் விருந்து அளித்தனர் ஜெயின் குடும்பத்தினர். அந்த விழாவுக்கான அழைப்பிதழ், செலவுகள் அனைத்தையும் அவர்களே மேற்கொண்டனர். அந்தத் தேநீர் விருந்தில் ஆரம்பத்திலேயே ஒரு மேஜை நாற்காலிகள் போடப்பட்டது. அது ஜெயின் குடும்பத்தினருக்காக... அங்கே அமர்ந்து கொண்டவர்கள் வருகிற பெரிய மனிதர்களின் கால்களை எல்லாம் தொட்டுக் கும்பிட்டது வித்தியாசமாக இருந்தது.


இந்த விஷயத்தையும் இங்கே சொல்லித்தான் ஆக  வேண்டும்... இந்தியாவில் அதுவரை ஞானபீடம் பெற்ற எல்லாரையும் அழைத்து ஒரு பாராட்டுக் கூட்டத்திற்கு  ஏற்பாடு செய்திருந்தனர் கன்னட சாஹித் பரிக்ஷத்தினர். இதற்காக செயின்ட் ஜோசப் கல்லூரி அருகிலுள்ள ஓட்டலை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தினர்  அனைவருக்கும் அங்கு காலை டிபனை ஓட்டல் நிர்வாகமே ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக எல்லா எழுத்தாளர்களும் அங்கே குழுமியிருந்தனர்  அகிலனும் அங்கே இருந்தார். 


-  திடீரென்று "எந்தடா அகிலன் சௌக்கியமோ?" என்றுவாசலில் குரல் கேட்டது. . கர்ணகொடூரமான குரல்...


  கையில் ஒரு சூட்கேஸையும் அக்குளில் ஒரு துணியையும்  இடுக்கிக் கொண்டு அங்கே தகழி சிவசங்கரம் பிள்ளை  நின்றிருந்தார்.




தகழியை அங்கே பார்த்ததும் அங்கே ஏற்பட்ட சலசலப்பைக் குறிப்பிட வேண்டும்...


தகழி நேராக அகிலனிடம் வந்தார். இருவரும் ஏற்கெனவே நல்ல நண்பர்கள் போலிருக்கிறது... இருவரும் கட்டி  அணைத்துக்கொண்ட பாங்கில் அது தெரிந்தது. அப்படி  அணைத்துக்கொண்ட படியே அவர்கள் நிற்க... தகழி  அகிலனின் காதில் ஏதோ கூறினார். அவர் கூறியதைக்  தொடர்ந்து அகிலனும் தகழியும் சிரித்த சிரிப்பு அந்த விருந்தினர் மண்டபத்தையே தூக்கிக்கொண்டு போவது போல்  இருந்தது.


அப்படி என்ன சொல்லி விட்டார் தகழி?


அவர் சொன்னாராம்... “எனக்கு இன்னமும் ஞானபீடம் வழங்கப்படவில்லை.'


"தகழி என்றதும் எல்லாப் பரிசுகளும் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எல்லாரும் நினைப்பதுபோலவே இவர்களும் நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய நம்பிக்கையை வீணடிக்க நான் விரும்பவில்லை. அதற்காகத்தான் வந்தேன். போய் ஒரு தமாஷ் பண்ணிவிட்டு வரலாம் என்று தோன்றிற்று. அதனால்தான் கிளம்பி வந்துட்டேன்" என்றிருக்கிறார், சிரிப்புக்குக் கேட்க வேண்டுமா?


(பிறகு தகழிக்கும் ஞானபீடம் கிடைத்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்)

......


ஞானபீடம் பெற்ற அகிலன் அரசாங்க அழைப்பின் பேரில் புதுடில்லியிலிருந்து ரஷ்யா சென்றார். அதற்காக அதிகாலையில் கிளம்பி அவரை விமான நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்ததும் நினைவில் பசுமையாக இருக்கிறது.






Saturday, December 7, 2024

ரஜினியின் சிரத்தை, ராதிகாவின் திறமை, சிலுக்கின் வசிய மோதிரம்- மூன்று முகம்

 பழைய இதழ் வாசிப்பு


மூன்று முகம் - கல்கி விமர்சனம் 

மூன்று முகங்கள், மூன்றும் ரஜினியே, அப்பா அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் அதி காரி. அடேயப்பா என்ன மிடுக்கு! என்ன துடுக்கு! மூன்றில் முதல் மார்க் அலெக்சுக் குத்தான். படத்தில் அவர் கொல்லப்பட்ட பிறகு....


அவரது இரட்டைப் பிள்ளைகள்! கோடீன் வரன் வீட்டில் ஒருவனும் குப்பத்தில் தாயிடம் ஒருவனுமாக வளர்கிறார்கள்.

கோடீஸ்வர ரஜனி தந்தையைக் கொன்ற சாராயக்கும்பல் தலைவனைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டும்போது அவளை நேருக்கு தேர் சந்திக்க மறு பிறவி எடுத்து வந்திருப்பதாக பாயும்போது நடிப்பில்  நம்ப வைக் றார். 

மூத்த மகன் 'நான்தான் அலெக்ஸ் பாண்டியன் என்று நடித்துக்கொண்டிருக்கும். போது எதிரிகளின் தூண்டுதலால் இளைய மகனும் அதே மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு "நான்தான் அலெக்ஸ் நான் சாகவில்லை" என்று  சொல்லில்கொண்டு வந்து குழப்பும் இடம் கதைக்குப்பரப்பூட்டும் நல்ல கட்டம்

மூன்று ரஜினிிரத்களையும் வித்தியாசப்படுத் திக் காட்டியிருப்பதில் ரஜினிக்கு மட்டுல்ல  ஜெகந்நாதனுக்கும் வெற்றிதான்.

ராதிகா பாடலுக்கு ஆடலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளார். 

  ஒருபெண் திருபர் இப்படியா இருப்பார்? வேறு வேலைகொடுத்திருக்கலாம். படத்தில் சண்டைக்காட்சிகளுக்குக் குறைவில்லை. சலிக்காத சண்டை

உருநீளக் கிழங்கு மசாலாவுக்குக் கிழங்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் ரஜினிக்கு இந்தக் கதையில்

-திரைஞானி

----------------------------



மூன்றுமுதங்களில்மூவர்

மூன்று முகம் படத்தை இயக்கிய டைரக்டர் ஏ. ஜகந்நாதன் அந்தப் படத் தில் நடித்த மூன்று நட்சத்திரங்கள்  பற்றி இங்கே கூறுகிறார்:

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் படத்தை நான் இயக்குவது இதுவே முதல் முறை. காலை ஒன்பது மணிக்குப் படப்பிடிப்பு என்றால் எட்டே முக்கால் மணிக்கே வந்துவிடுவார் -மேக்கப்  சகிதமாக.. சார்.. இன்னிக்கு என்ன சீன்? எப்படி நடிக்கணும்  என்று அவர் கேட்டும்போதே  நமக்கும் சுறுசுறுப்பு தானாக வந்து விடும்
மூன்று வேடங்களில் ரஜனி முதல் தடவை யாக நடித்தார்.

அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம், அதற்காகத் தன்னை மாறு படுத்திக் காட்ட  ஒரு விசேஷ விக்கை வைத்துக்கொண்டார். 

தனது  முகத்தை நீளமாகக் காட்டிக் கொள்ள அவரே தனது டாக்டரிடம் சொல்லி  வாயில்  ஒரு விசேஷ பல் செட்டைப் பொருத்
திக் கொண்டார்

அவரே தனது நடையுடை பாவனைகளே அவரே 
வேடத்துக்கு வேடம் மாறுபடுத்திக்கொண்டார்.கோர்ட் சீனில் அவர் நடந்து வரும் தோரணையை உதாரணமாகச் சொல்லலாம்.




 ராதிகா:

ராதிகா டப்பிங் பேசுவது ஒரு கலை, ஒரு முழுக் காட்சி - பத்து ஷாட்டில் எடுத்தது - டப்பிங் தியேட்டரில் படத்தைப் பார்த்து உதட்டசைவுக்கு ஏற்றபடி 'ரீடேக்" இல்லாமல் அவர் பேசியது வியப்பாக இருந்

மூன்று முகத்தில் ஒரு காட்சி:

சிலுக்கு ரஜினிக்கு டெலிபோன் செய்வார். அதை ராதிகா ஓவர்ஹியர் செய்வார்

 ஒத்திகையில் "சார். இந்த சீலை என் இஷ்டத் துக்கு நடிக்க விடுங்க" என்றார். அபிவிருத்திக்கு இடமின்றி நடித்துக் காட்டினார்.

அந்தக் காட்சியில் டைரக்டருக்கு வேலையே  இல்லை

-----------------

சிலுக்கு ஸ்மிதா”

"எத்தனையோ பொட்டைப் பிள்ளைகளை எங்கெங்கோ பார்த்தேன்”

திடீரென்று ரஜனி மறைத்துக் கொண்டிருக்கும் ஸ்மிதா நடனமாடுவார் இந்த சீனை நான் எடுத்த விதம் ஸ்மிதாவுக்கு மிகவும் பிடித்தது. 

வெரி குட் சார் என்று என்னைப் பாராட்டிவிட்டு ஒரு மோதிரத்தைப் பரிசளித்தார்

என்னம்மா இது, - இது பித்தளை 

மோதிரமாச்சே  ஒரே  அழுக்கா இருக்கே! கொடுத்ததை அசல் தங்க மோதிரமாகொடுத்திருக்கக் கூடாதா  ? நீ  இல்லாம  ஒரு தமிழ்  படம்கூட  இல்லையே..உனக்கு  பணப் பஞ்சம் கிடையாதே!' என்றேன்.


சிலுக்கு ஒரு குலுக்கு குலுக்கி விட்டு “ இது பித்தளை மோதிரம் இல்லை சார் வசிய மோதிரம் என்றார்

“ 

நான் பயந்து போய் அந்த மோதிரத்தை திருப்பிக்கொடுத்து விட்டேன்


பேட்டி மன்னை சௌரிராஜன்

Thursday, December 5, 2024

ஃபிளாஷ்பேக்... பில்லா, மகேந்திரன், எஸ் பி முத்துராமன், லக்ஷ்மி, விசு... விமர்சனங்களும் பதிலகளும்

 

ஃபிளாஷ்பேக்.


சில படங்களைப் பார்த்து விட்டு அதில் இருக்கும் தர்க்கப்பிழைகளை வாசகர்கள் அதன் இயக்குநர்களிடம் கேட்பது , அதற்கு இயக்குநர்கள் விளக்கம் அளிப்பது அல்லது நியாயப்படுத்துவது சுவாரஸ்யமானது.. 1980 களில் வெளியான கல்கி இதழில் வாசகர்கள் கேள்விகளும் இயக்குநர்கள் பதில்களும் உங்கள் பார்வைக்கு


ரஜினியின் பில்லா, சிவாஜியின் ரிஷி மூலம், மகேந்திரனினின் பூட்டாத பூட்டுகள், லக்ஷ்மியின் மழலைப் பட்டாளம், விசுவின் அவன் அவள் அது. ஆகிய படங்கள் அலசப்படுகின்றன. 



ரிஷி மூலம் --  கேள்விகள் வாசகர்கள்  ...பதில்கள் இயக்குநர் எஸ் பி முத்துராமன்




கிளைமாக்ஸ் காட்சியில் அவ்வளவு தூரம் கார் ரேஸ் வைத்து  வீணாகப் படத்தின் மதிப் பைக் குறைத்துள்ளீர்களே! காரணம் என்னவோ? அதைத் தவிர்த்து நாடகத்தின் முடிவைப் போல அமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே! 

 

- தஞ்சாவூர் சரஸ்வதி பிரியன்




ரிஷி மூலம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தம் மக்கள் விரும்பும் அள வுக்குப் பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே சேர்க்கப்பட்டவை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நாடகத்தைப் போலவே முடிவு சொல்லா விட்டால் படத்தில் திருப்தி இருக்காது என்பதால் இப்படிச் செய்தோம்.




பதினெட்டு வருடங்கள் கழித்துத் தன் மகனைக் காணப்போகும் ஒரு தாய் அதுவும் பதவியில் இருக்கும் டி.எஸ்.பி. பின் மனைவி அந்த மகிழ்ச்சியை எவ்வாறு வெளிப்படுத்து, கின்றாள்? தன்னை மிக அழகாக அலங்கரித்துக் கொண்டு ஓடுகிறாள்! எங்கே? காடு, மலை வயல், வரப்பின்மீது! ஸ்லோமோஷனில் வித விதமாகப் போஸ் கொடுத்துக் கொண்டு! அப்படியா செல்வது? பிரிந்திருந்த மகனைக் காணப் போகும் தாய்ப் பாசத்தின் மனநிலைகாட்சியில் தென்படவில்லையே? ஆசைமிக்க கணவனின் வருகையைத் தேடும் மனைவி அடையும் மகிழ்ச்சியின் பிரதி பலிப்பாகத் தென்படுகிறதே!




அய்யம்பாளையம்


பி. என். ரவி




மழை வருவது மயிலுக்குத் தெரியும் மகன் வருவது மனத்துக்குத் தெரி யும்' என்பதுதான் பாட்டின் பல்லவி, இதை எப்படி கணவனின் வருகையால் மகிழ்ச்சியைத் தேடும் மனைவியின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொள்ள முடியும்? பாட்டின் அர்த்தத்தை எடுத்துக் கொண்டு பார்த்தீர்களானால் தாயின் பாசம் விளங்கும். இந்தப் பாடல் காட்சி என் கண்ணான ஒளிப் பதிவாளர் பாபு  எடுத்துகுடுத்தது.



தாயின் மேல் (கே. ஆர். விஜயா) பாசம் உண்டாக்கக் கருதித் தந்தை (சிவாஜி) பல முயற்சிகள் செய்து படம் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பாடல் "ஐம்பதிலும் ஆசை வரும்"... இது அவசியம் தானா? படத்தின் விறுவிறுப் பைத் திடீரென்று தடை செய்யும் முட்டுக் கட்டையாக இது உங்களுக்குத் தெரியவில்லையா? அந்தத் தம்பதிகளின் மேல் நாம் வைத்திருக்கும் உயர்ந்த எண்ணத்தைத் திடீரென்று உருட்டிப் படுபாதாளத்தில் தள்ளுவதாகத்தான் இந்தப் பாடல் காட்சி அமைந்திருந்தது என்கிறேன் நான். உங்கள் பதில் என்ன? 

பட்டுக்கோட்டை


பி. எஸ். ராஜகோபாலன்




ஐம்பதிலும் ஆசை வரும். 15 வருடங்கள் கழித்துக் கணவனும் மனைவி யும் இணையும்போது அவர்களுக்கு வயதானாலும் அவர்களது ஆசை களுக்கு வயதாகவில்லை என்பதை வலியுறுத்தவே அந்தப் பாடலை அங்கு இணைத்தோம். அது சரியானதுதான் என்பதை பலர் (வயதானவர்கள் கூட) ரசித்ததைத் தியேட்டரில் ரசித்ததில் பார்த்தோமே. 




பில்லா  கேள்விகள் வாசகர்கள்  ...பதில்கள் இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி 





நொண்டி தேங்காய் சீனிவாசன் கடைசிக் காட்சியில் கயிற்றின் மேல் நடப்பது எப்படி? 

காரமடை  ஆர். பார்த்திபன்




நான்கு அடி உயரமுள்ள ஒரு ஸ்டூலின் மேல் நின்று கொண்டுதான் தேங்காய் சீனிவாசன் கயிற்றின் மேல் நடப்பது போல் உள்ள காட்சியை எடுத்தேன். ஒரு இடத்தில் கால் தவறுவது போலவும் காண்பித்தேன். படம் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் இந்த இடத்தில் 'ஐயோ' என்றனர்.  இப்படி ரசித்து பாராட்டு அளித்துக் கொண்டும் இருந்தனர் இதற்காகத்தான் இம்மாதிரியான காட்சிகள் 




  பில்லா தப்பித்துக்கொள்ளக் கையிலிருக்கும் பெட்டியை வீசுகிறான். அது வெடிக்கிறது. ஏன் சார்! அதே ரஜனி, ப்ரியாவில் அதையேதானே செய்திருக்கிறார். 'டான்'னில்'அப்படி இருந்தால் இருந்து விட்டுப் போகட்டுமே. இங்கே தப்பிக்கக் கொஞ்சம் வித்தியாசமாய்த் தந்திரம் செய்யக் கூடாதா?



சித்தோடு

எஸ். தவமணி




டான் ஹிந்திப் படம் வந்து நாலு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 'ப்ரியா' படத்திலுள்ள இந்தக் காட்சி 'டானை'ப் பார்த்து அப்படியே காப்பி அடித்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் 'டான்' என்ற ஹிந்திப் படத்தைத் தமிழில் தயாரிக்க உரிமை பெற்று, பில்லாவை எடுத் திருக்கிறோம். தமிழில் எடுக்கும்பொழுது டான் காட்சிகளை அப்படியேதான் எடுக்க முடியும். பில்லாவுக்கு முன்னால் காப்பி அடித்து எடுக்கப்பட்ட 'ப்ரியா' வெளியானது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?



போலீஸ் இலாக்காவில் பில்லாவின் நடை, உடை, பாவனை, ஸ்டைல் எல்லாவற்றையும் சினிமா படம் எடுத்து வைத்துள்ளார்கள். அவளைப் போலவே நடக்க இன்னொருவனுக்கும் பயிற்சி தரப் பயன்படுத்துகிறார்கள்.சினிமா படம் எடுத்தவர்கள் கடத்தல்காரனை ஏன் பிடித்திருக்கக் கூடாது?


சிவகாசி

எஸ். கீரிதரன்




போலீஸ் டிபார்ட்மெண்டில் ஒரு பழக்கம் உண்டு. ஒரு தடவை ஒருவன் சிறு குற்றமிழைத்து அகப்பட்டுக் கொண்டால் அவனைப் பற்றிய சகல விவரங் களையும் படங்கள் உட்பட ஃபைல் பண்ணி வைத்து விடுவார்கள். பீன்னால் அவன் பெரும் குற்றம் ஏதாவது செய்ததாகச் சந்தேகித்தால் அவனைக் கண்டு பிடிக்க முன்பு 'ஃபைல் செய்த புகைப்படங்களை, சீனிமாப் படங்களை எடுத் துப் போட்டுப் பார்ப்பார்கள். படத்தில் பில்லா தவறு செய்கிறான் என்று தெரிந்தாலும் ஆதாரமில்லாததனால் பிடிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆதாரத்துடன் அவனை மாட்டி வைக்கப் போலீஸ் முயற்சி எடுக்கிறது. பில்லாவை ஆட்டிப் படைப்பது யார் என்று அறியவும் வேண்டியிருக்கிறது. அந்தச் காட்சி உணர்த்துகிறது.




அவன் அவள் அது        -  கேள்விகள் வாசகர்கள்  ...பதில்கள் இயக்குநர் விசு 


ஒரு காட்சியில் லாவண்மா தனக்குப் பிள்ளை பேறு இல்லை எனத் தெரிந்தவுடன் த கணவனை வேறெகு திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள். அப்படிச் சொல்லு போதே அவள் தன் கணவனை வேறொருத்திக்கு விட்டுக் கொடுக்கச் சம்மதிக்கிறான் என் தானே அர்த்தம்? பிறகு தன் கணவனின் ஜீவ அணுக்களைச் சுமக்கும் பெண்ணைத் தன் கணவன் சந்திப்பதை விரும்பாத அவள், தனக்குத் தெரியாமலே அவர்களிருவரும்   உடலுறவு கொண்டதை அறிந்து மனம் பொறுக்காமல் வீட்டை விட்டு வெளியே வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் திருமணத்தின் பின்னர் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளை அவளால் ஏன் பொறுக்க முடியவில்லை? இக்காட்சிகள் முரண்பாடாக உள்ளனவே?




நெல்லிகுப்பம் இரா. சீனிவாசன்




தனது கணவன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண் அவன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். தன்னை விவாகரத்து செய்துவிடலாம் என்று சொல்வது லாவண்யாவின் பெருந்தன்மை.   அந்தக் காட்சியில் பெண் தெய்வமாகக் காட்சி அளிக்கிறாள். ஆனால்   தெய்வமும் தன் கணவன் கள்ளத்தனமாக இன்னொருத்தியிடம் போவதை விரும்பமாட்டாள். ஆகவே இந்தக் காட்சி பொருத்தமற்ற காட்சி அல்ல ஹைலைட்காட்சி!



ஹோமத்தின்போது நெய் விடுவது போன்ற அருவருக்கத்தக்க Symbolic shot அவசியமா?



மில்டன் மாரிஸ் ஆரான்




குழந்தைப் பேறு அற்ற மருமகள் செயற்கை முறையில் தனது கணவனின் ஜீவ அணுவை இன்னொரு பெண்ணுக்கு ஊசி மூலம் செலுத்தி அதன் மூலம் தனக்கு ஒரு மகனோ மகளோ கிடைக்கலாம் என்ற ஆசையில் ஆஸ்பத்திரிக்குத் தனது கணவனை அழைத்து வருகிறாள். அதே நேரம் விவரம் ஏதும் அறியாத அவளது மாமனார், அவளுக்காகவும் தன் மகனுக்காகவும் வீட்டில் நிறைய புரோகிதர்களைக் கூட்டி புத்திர காமேஷ்டி யாகம் நடத்துகிறார். அந்த "ஐரனி "யைத் தான் படம் பிடித்துக் காட்ட எண்ணினோம். நாங்கள் உங்களுக்குப் பிள்ளையார் பிடித்துக் காட்டலாம் என்றுதான் நினைத்தோம். அது குரங்காக அமைந்துவிட்டது என நீங்கள் கருதுகிறீர்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! மன்னிப்புக் கோருகிறோம்




ன்னதான், பிடிவாதத்திற்கு மறுபெயர் லாவண்யாவாக இருந்தாலும், வெளியேசெல்லப் பட்டுப் புடவை வாங்கி வரவில்லை என்ற காரணத்திற்காக இப்படியா பாவாடை,

ஜாக்கெட் மட்டும் போட்டுக் கொண்டு பட்டுப் புடவை வரும்வரை அசிங்கமாக ஒரு குடும்பப்பெண் படுத்திருப்பாள்?


கோவை

வி.சரஸ்வதி


தான் நினைத்த காரியத்தை எப்படியும் செய்து முடிக்கும் மனப் பக்கு வம் கொண்டவள் லாவண்யா.

நான்கு சுவர்களுக்கு இடையில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு போராட்டம் நடக்கிறது. அக்காட்சி விரசத்தைத் தொடவில்லை. அவளது இயல்பைத்தான் விளக்குகிறது என்று எந்த மன்றத்திலும் வாதாடத் தயார் 


....................................



ஒரு படித்த பெண்ணுயிருந்தும் லக்ஷ்மி ஊசி மூலம் குழந்தை பெறும் விஷயத்தைப் பச்சையாக ஒரு பால்காரரிடமா கேட்டுத் தெரிந்து கொள்வது?'

 திருச்சி

சங்கம் அருணகிரி




படிக்காத பாமர மக்களுக்குப் புரிய வைக்கத்தான் செயற்கை முறையில் குழந்தை பெறும் முறையை மாடு குட்டி போடுவதோடு ஒப்பிட்டுக் காட்சி அமைத்தோம். அவனைப் பால்காரனாகக் காட்டாமல் பால்காரியாகக் காட்டியிருக்கலாம் என்பது இப்போதுதான் என் மண்டைக்குப் புரிகிறது. சாஷ்டாங்கமாகக் காலில் விழுகிறேன். வயதிலும் அறிவிலும் சிறியவன். மன்னிக்கக் கூடாதா?


.........................

மருத்துவமனையில் மேனகாவுக்குக் குழந்தை பிறக்கும் போது ராமனாதன் அங்கு வருவதைப் பார்த்து அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த தொடர்யை அறிந்த லாவண்மண நேராகக் கடலலைகளுக்கு நடுவே நடந்து செல்கிறான். பிறகு, அடுத்த காட்சியில் தாயை இழந்த குழந்தையைக் கவனிக்க ஆயாவாக வருகிறாள். எதற்காகக் கடலேக் காட்ட வேண் டும்? தற்கொலை முயற்சி என்றால் அந்த எண்ணத்தை லாவண்யா எப்படி மாற்றி கொள்கிறாள்? தொடர்பில்லாமல் இருக்கிறதே?

.......



ஈரோடு


கே. எஸ். எஸ். நாராயணன்




தற்கொலை செய்துகொள்ளத்தான் அவள் கடலைத் தேடிப் போனான். ஆனால் தற்கொலை செய்துகொள்ள நினைக்கும் அத்தனை பேராலும் அது முடிகிறதா? நெஞ்சில் கைவைத்து நாராயணன் சொல்லட்டும், எத்தனை விஷயங்களில் நம்மை நாம் தாலி சுட்டியவர்கள் மன்னிக்கிறார்கள். லாவண் யாவும் ராமநாதனை மன்னித்து விட்டான். இதற்கு மேலும் வியாக்யானம் தேவையா?


....,.......

மழலைப் பட்டாளம்    கேள்விகள் வாசகர்கள்  ...பதில்கள் இயக்குநர்  லக்ஷ்மி




கதாநாயகி கௌரி மனோகரிக்காக ஹோட்டலில் காத்துக்கொண்டு இருக்கிறாள். அப் பொழுது கதாநாகன் கதாநாஜியிடம் L.I. C. பற்றி கூறுகிறார். அந்த நேரத்தில் இடை வெட்டுக் காட்சியாக ரம்பத்தால் மரம் அறுப்பது போல் காட்டுகிறார்கள். L.I.C. நாட் டிற்கு எவ்வளவு சேவை செய்கிறது என்று தெரிந்தும் இந்தக் காட்சி அவசியம்தானா? 

சேலம் ஆர். ராம்குமார்.




நாங்கள் ரம்பத்தைக் காட்டி அறுப்பது போல் குறிப்பிடுவது இன்ஷூ ரன்ஸை அல்ல. அந்தப் பாத்திரம் பேசும் முறையையும் பாத்திரத்தின் தன்மையையும் தான் குறிப்பிடுகிறோமே ஒழிய எல். ஐ. யை அல்ல. LIC இல் என் வீட்டில் உள்ளவர்கள் பலர் வேலை செய்கிறார்கள். அவ்வளவு ஏன்? நானே ஒரு LIC ஏஜெண்டுதான்!



.......


கடைசியில் குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து கும்மாளம் அடித்துக்கொண்டு திருமணம் செய்து வைப்பது பொருத்தமற்ற காட்சியாகத் தெரிகிறது. ஏன் அவ்வாறு அமைத்தீர்கள்?



குழந்தைகள் தொந்தரவு இல்லாமல் எழுத்தாளனான கதாநாயகள் லெட்ரினில்  உட்கார்ந்து கதை எழுதுவதாகப் படத்தில் காண்பிக்கிறீர்கள். ஆனால் கதாநாயகள் இருக்கும் வீட்டுக்கு அவ்வளவு வசதியான லெட்ரின் பொருத்தமாக இல்லை. ஹோட்டலில் போய் லெட்ரினில் உட்கார்ந்து எழுத அவசியம் என்ன? ரூமில் உட்கார்ந்து எழுதலாமே?




பொள்ளாச்சி  வி. எப்பிரமணியன்




ஜோதி கார் விபத்தில் தன் சகோதரியும் அவள் கணவனும் இறந்ததைத் தன் சகோதரி யின் ஐந்து குழந்தை குழந்தைகளுக்குத்  " தெரிவிக்காமல் மறைத்து விடுகிறாள். உருவ ஒற்றுமையினால் தாய் எண்ணி விடுகிறார்களாம். என்னதான் உருவ ஒற்றுமை இருந்தாலும் குழந்தைகளுக்குத் தங்கள் தாயை அடையாளம் தெரியாமல் போய் விடுமா? அதுவும் அந்தப் பெரிய பையனுக்கு வயது 10, 12 இருக்கலாம் 


எஸ்.குமார்




நான் அறிஞர்களுக்காகப் படம் எடுக்கவில்லை. பொழுது போக்குக்குத்தான் அவர்களை மகிழ்விக்கத்தான் சராசரி மக்களுக்கு படம் எடுத்தேன் எத்தைனையோ பெரிய இயக்குனர்கள் எடுத்த படங்கள் வந்திருக்கின்றன.  மகனை அடையாளம் காணாத தாய் மனைவியை அடையாளம் காணாத கணவன் என பல படங்கள் வந்துள்ளன. அவர்களே அடையாளம் காணாதபோது  குழந்தைகளா அடையாளம் கண்டுபிடித்துவிட முடியும் கேள்வி கேட்க வேண்டும் என்று ஆரம்பித்தால் கேட்கலாம். மூன்று கேள்விகளுக்கும் இதுதான் என் பதில்!

......

டிகையாக இருந்த தங்கள் மழலைப் பட்டானத்தில் டைரக்க்ஷன் பொறுப்பேற்ற போது ஒருவித அச்சம் தெரிந்ததா?... டைரக்ட் பண்ணும் போது.

 உளுந்தூர் பேட்டை

எஸ். காசிமணி




அன்புச் சகோதரரே! நீங்கள் ஏதாவது பத்திரிகைக்காக என்னைப் பேட்டி காண்கிறீர்களா? இல்லை படத்தில் உள்ள குறை நிறைகளைப் பற்றிக் கேள்வி கேட்கிறீர்களா? எனக்குச் சிறிது குழப்பமா யிருக்கிறது.


......


கவாஸ்கர் பந்தை நடுவரிடம் கொடுத்து விடுகிறான். பிறகு அக்காவின் மாமனார் வீட்டில் வந்தபொழுது பந்து கையில் எப்படி வந்தது?




படம் எடுக்கும்போது இவன் விசிலடித்துப் பந்தைக் கேட்பது போல ஒரு காட்சி அமைத்திருந்தோம். படத்தை முழுதும் எடுத்த பின் பார்த்தால் கிட்டத்தட்ட 16000 அடி வளர்த்துவிட்டது. எங்களுக்கோ 13000 அடிக்கு மேலிருந்தால் பல்வேறு பிரச்னைகள்  பணம் அதிகமாகக் கட்ட வேண்டியிருக்கும். இந்த நிலையில் குறைக்க வேண்டிய பல காட்சிகளை வரிசைப்படுத்தினோம். கதைக்கு முக்கியமான காட்சிகளை எடுக்க முடியாததால் இது மாதிரியான காட்சிகள் சில வெட்டப்பட்டு விட்டன.


,.......


பூட்டாத பூட்டுக்கள்   கேள்விகள் வாசகர்கள்  ...பதில்கள் இயக்குநர் மகேந்திரன் 



கடைசிக் காட்சியில் கதாநாயகன்  தனக்கு மனைவி துரோகம் பண்ணிய போதும் அவன் மீது அதிக அளவு அன்பு வைத்து அவளைப் பிரிந்து வாழ முடியாததால் அவளுடன் செல்கிறான். உள்ளத்தை நெகிழ வைக்கும் இக்காட்சிவைக் காட்டிய பின் ''நாய்க்குச் சோறு இடுவது போல்" காட்டியது சற்றும் பொருத்தம் இல்லை என்று நான் எண்ணுகிறேன்.  




கணவன் மனைவி புறப்பட்டுப் போவதற்கும் அந்த நாய்க்குச் சோறு போடுவதாகக் காட்டுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.  காவியாகக் கிடக்கும் டீக்கடையை உப்பிலியின் வண்டி கடந்து செல்லும்போது ஏற்படும் சதங்கைச் சத்தத்தை அந்தக் காட்சியில் கொடுத்திருக்கிறேன். அவ்வளவு தான்.  




......



"உப்பிலி தன் மனைவியைத் தேடிப் பணத்துடன் படகில செல்லும்போது சண்டை நடப் பதும், பணம் நீரில் மூழகி மறைந்து விடுவதும்" படத்திற்குத் தேவையானதா? 

மதுரை 

நா. இராமகிருஷ்ணன்



.....

குழந்தை வேண்டும் என்று கன்னியம்மா ஏங்குவது அவசியம்தானா என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல முடியும்? வேலைக்காரியின் கணவனைக் குருடனாகக் காட்டுகிறீர்களே அது அவசியம்தானா என்று கேட் டால் என்ன பதில் தர முடியும்? - 


இப்படத்தின் கதாநாயகி கடற்கரையில் தண்ணீர் குடத்துடன் வந்து அமர்வது அவசியம் தானா?

 தண்ணீர் குடத்துடன் கடற்கரைக்கு வருவது தண்ணீர் எடுத்துச் செல்லவா? இல்லையே! அவள் எதற்காக அங்கே போகிறான் என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே.. 


 


,......


'கன்னியம்மா கணவன் இருக்கையில் இன்னொருவளிடம் தன்னை இழந்தது தாம்மை ஏக்கத்தினால்தான் என்று சொல்ல முயன்றிருக்கிறீர்கள். ஆக. அவள் உடன்பட்டான்: அவள் செயல்பட்டாள். பின்னால், அந்த இன்னொருவன் மீது அவள் சாணிமைக் கரைத்துக் கொட்டித், துடைப்பத்தால் அடிக்கிறாள் நேர்ந்து விட்ட தவறுக்கு இருவருமே பொறுப்பு என்னும் போது, குற்றவாளியே கூட்டாளியைத் தண்டிப்பது ஏற்கும்படிவாக இல்லையே?

 சென்னை-17


குமரி அமுதன்




நேர்ந்துவிட்ட தவறுக்கு இருவருமே பொறுப்புதான். ஆனால் துடைப் பத்தால் அடிவாங்கும் கூட்டாளி செய்த தவறு நம்பிக்கைத் துரோகம். திட்டமிட்ட ஏமாற்று வேலை.


குழந்தை ஏக்கத்தோடு தன் வீட்டில் தனிமையில் புழுங்கிக்கொண் டிருந்தவளை - கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பக்கம் - சாமர்த்தியமாக- திட்டம் போட்டு இழுத்தவன் தியாகு. அப்பேர்ப்பட்டவன் பிறகு தேடிவந்து புகவிடம் கேட்ட அவளைக் கருணை இல்லாமல் துரத்தி அடிக்கிறான். கடைசி யில் அவனே அவளுக்கு அறிவுரை சொல்ல வருகிருன். அதுவும் எப்பேர்ப் பட்ட அறிவுரை! கன்னியம்மா அவனுக்குத் தரும் தண்டனை கம்மிதான்.


...........


ஆண்டிப்பட்டி மாரியப்பன் "பாடல் காட்சி, படத்துக்குப் பொருத்தமற்று இருகிறது. இது தேவைதானா?



சென்னை-81

கே.எம்.சுப்ரமணி


கடவுள் சத்தியமாகத் தேவையில்லை, பொருத்தமற்றதுதான். சந்தேகமில்லை



,.......






Sunday, December 1, 2024

ரஜினிக்கு நோ சொன்ன சௌந்தர்யா


நடிகர் சௌந்தர்யா குறித்து ஆர் வி உதயகுமார் 

எனது பொன்மணி படத்த்தைப் பார்த்து சௌந்தர்யாவுக்கு சூப்பர்ஸ்டார்சிரஞ்சீவிக்கு ஜோடியா நடிக்கிறவாய்ப்பு வந்துச்சு. அப்போ செளந் தர்யா தெலுங்குல செம பிஸி. 95-97 காலகட்டத் துல தெலுங்கில வருஷத் துக்கு 10 படம் சௌந்தர்யா நடித்து ரிலீஸாகும். அத னால ரஜினி படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொல்ல டாங்க


. 'அருணாச்சலம்' ரஜினிசாரோட சொந்தப்பட அதனால் ஒருநாள் அவரே எனக்கு போன்பண்ணி சௌந்தர்யா  கால்ஷீட் வேணும் உதய்னு கேட்டார். அடுத்த நிமிஷமே செளந்தர்யாவுக்கு போன் போட்டேன்.


‘நீ ரஜினிசார் படத்துக்கு கால்ஷீட் இல்லைனு சொன்னியாமே... அவர் எவ்ளோ பெரிய சூப்பர் ஸ்டார் அவங்க போன் பண்றதுக்கு முன்னாடி நீயே போன்பண்ணி கால்ஷீட் கொடுத்துடுனு கொஞ்சம் சீரியஸா சொன்னேன். உடனே சௌந்தர்யாவே போன் பண்ணி அருணாச்சலம் படத்துக்கு கால்ஷீட்டை கன்ஃபர்ம் பண்ணிடுச்சு.


2004, ஏப்ரல் 16--ஆம் தேதி திரும்ப சௌந்தர்யா கிட்ட இருந்து எனக்கு போன். 'சார், உங்க வாழ்க்கைல மறக்க மாட்டேன். சினிமால நீங்க கொடுத்த வாய்ப்பை எப்பவும் நினைச்சுக்கிட்டே இருப்பேன்னு ரொம்ப நேரம் என்னென்னவோ பேசிட்டு இருந்துச்சு. 'உனக்கு என்ன ஆச்சுமா... ஏன் இப்படிலாம் பேசறனு நானும் எப்பவும்போல் பேசிமுடிச்சு பேங வெச்சுட்டேன். மறுநாள் 'கற்க கசடற படத் பூஜை அழைப்பிதழ் கொடுக்க சத்யராஜ் சார் வீட்டுக்கு போனேன். என்னை வாசலில் பார்த்தவுடனே பதறிப் போய் ஓடிவந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டுக் நின்னார்.


நன்றி.தினமணி தீபாவளி மலர் 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா