பழைய இதழ் வாசிப்பு
மூன்று முகம் - கல்கி விமர்சனம்
மூன்று முகங்கள், மூன்றும் ரஜினியே, அப்பா அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் அதி காரி. அடேயப்பா என்ன மிடுக்கு! என்ன துடுக்கு! மூன்றில் முதல் மார்க் அலெக்சுக் குத்தான். படத்தில் அவர் கொல்லப்பட்ட பிறகு....
அவரது இரட்டைப் பிள்ளைகள்! கோடீன் வரன் வீட்டில் ஒருவனும் குப்பத்தில் தாயிடம் ஒருவனுமாக வளர்கிறார்கள்.
கோடீஸ்வர ரஜனி தந்தையைக் கொன்ற சாராயக்கும்பல் தலைவனைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டும்போது அவளை நேருக்கு தேர் சந்திக்க மறு பிறவி எடுத்து வந்திருப்பதாக பாயும்போது நடிப்பில் நம்ப வைக் றார்.
மூத்த மகன் 'நான்தான் அலெக்ஸ் பாண்டியன் என்று நடித்துக்கொண்டிருக்கும். போது எதிரிகளின் தூண்டுதலால் இளைய மகனும் அதே மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு "நான்தான் அலெக்ஸ் நான் சாகவில்லை" என்று சொல்லில்கொண்டு வந்து குழப்பும் இடம் கதைக்குப்பரப்பூட்டும் நல்ல கட்டம்
மூன்று ரஜினிிரத்களையும் வித்தியாசப்படுத் திக் காட்டியிருப்பதில் ரஜினிக்கு மட்டுல்ல ஜெகந்நாதனுக்கும் வெற்றிதான்.
ராதிகா பாடலுக்கு ஆடலுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளார்.
ஒருபெண் திருபர் இப்படியா இருப்பார்? வேறு வேலைகொடுத்திருக்கலாம். படத்தில் சண்டைக்காட்சிகளுக்குக் குறைவில்லை. சலிக்காத சண்டை
உருநீளக் கிழங்கு மசாலாவுக்குக் கிழங்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் ரஜினிக்கு இந்தக் கதையில்
-திரைஞானி
----------------------------
மூன்றுமுதங்களில்மூவர்
மூன்று முகம் படத்தை இயக்கிய டைரக்டர் ஏ. ஜகந்நாதன் அந்தப் படத் தில் நடித்த மூன்று நட்சத்திரங்கள் பற்றி இங்கே கூறுகிறார்:
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் படத்தை நான் இயக்குவது இதுவே முதல் முறை. காலை ஒன்பது மணிக்குப் படப்பிடிப்பு என்றால் எட்டே முக்கால் மணிக்கே வந்துவிடுவார் -மேக்கப் சகிதமாக.. சார்.. இன்னிக்கு என்ன சீன்? எப்படி நடிக்கணும் என்று அவர் கேட்டும்போதே நமக்கும் சுறுசுறுப்பு தானாக வந்து விடும்
மூன்று வேடங்களில் ரஜனி முதல் தடவை யாக நடித்தார்.
அலெக்ஸ் பாண்டியன் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம், அதற்காகத் தன்னை மாறு படுத்திக் காட்ட ஒரு விசேஷ விக்கை வைத்துக்கொண்டார்.
தனது முகத்தை நீளமாகக் காட்டிக் கொள்ள அவரே தனது டாக்டரிடம் சொல்லி வாயில் ஒரு விசேஷ பல் செட்டைப் பொருத்
திக் கொண்டார்
அவரே தனது நடையுடை பாவனைகளே அவரே
வேடத்துக்கு வேடம் மாறுபடுத்திக்கொண்டார்.கோர்ட் சீனில் அவர் நடந்து வரும் தோரணையை உதாரணமாகச் சொல்லலாம்.
ராதிகா:
ராதிகா டப்பிங் பேசுவது ஒரு கலை, ஒரு முழுக் காட்சி - பத்து ஷாட்டில் எடுத்தது - டப்பிங் தியேட்டரில் படத்தைப் பார்த்து உதட்டசைவுக்கு ஏற்றபடி 'ரீடேக்" இல்லாமல் அவர் பேசியது வியப்பாக இருந்
மூன்று முகத்தில் ஒரு காட்சி:
சிலுக்கு ரஜினிக்கு டெலிபோன் செய்வார். அதை ராதிகா ஓவர்ஹியர் செய்வார்
ஒத்திகையில் "சார். இந்த சீலை என் இஷ்டத் துக்கு நடிக்க விடுங்க" என்றார். அபிவிருத்திக்கு இடமின்றி நடித்துக் காட்டினார்.
அந்தக் காட்சியில் டைரக்டருக்கு வேலையே இல்லை
-----------------
சிலுக்கு ஸ்மிதா”
"எத்தனையோ பொட்டைப் பிள்ளைகளை எங்கெங்கோ பார்த்தேன்”
திடீரென்று ரஜனி மறைத்துக் கொண்டிருக்கும் ஸ்மிதா நடனமாடுவார் இந்த சீனை நான் எடுத்த விதம் ஸ்மிதாவுக்கு மிகவும் பிடித்தது.
வெரி குட் சார் என்று என்னைப் பாராட்டிவிட்டு ஒரு மோதிரத்தைப் பரிசளித்தார்
என்னம்மா இது, - இது பித்தளை
மோதிரமாச்சே ஒரே அழுக்கா இருக்கே! கொடுத்ததை அசல் தங்க மோதிரமாகொடுத்திருக்கக் கூடாதா ? நீ இல்லாம ஒரு தமிழ் படம்கூட இல்லையே..உனக்கு பணப் பஞ்சம் கிடையாதே!' என்றேன்.
சிலுக்கு ஒரு குலுக்கு குலுக்கி விட்டு “ இது பித்தளை மோதிரம் இல்லை சார் வசிய மோதிரம் என்றார்
“
நான் பயந்து போய் அந்த மோதிரத்தை திருப்பிக்கொடுத்து விட்டேன்
பேட்டி மன்னை சௌரிராஜன்
No comments:
Post a Comment
NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]